கலைப்புலி ஜி. சேகரன்
கலைப்புலி ஜி. சேகரன் | |
---|---|
பிறப்பு | 1951/1952 |
இறப்பு | 13 ஏப்பிரல் 2025 (அகவை 73) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், எழுத்தாளர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–2025 |
கலைப்புலி ஜி. சேகரன் (Kalaipuli G. Sekaran, 1951/1952 – 13 April 2025)[1] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ஆவார்.[2]
தொழில்
[தொகு]ஜி. சேகரன் ஒரு திரைப்பட நிதியாளராகவும் விநியோகஸ்தராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் எஸ். தாணு, சூரி ஆகியோருடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் ஆனார். அவர்கள் கண்ணன் இயக்கிய யார்? (1985) படத்தின் வழியாக தயாரிப்பாளராக அறிமுகமானார்கள். மேலும், சேகரன் அப்படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார்.[3] பின்னர், ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் (1988), காவல் பூனைகள் (1989), உளவாளி (1994) உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர், ஜமீன் கோட்டை (1995) படத்தில் முன்னணி நடிகராக நடித்தார். மேலும், குடும்ப சங்கிலி (1999) படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சேகரன் மீண்டும் படங்களை விநியோகிக்கத் தொடங்கினார்.
2000-களின் பிற்பகுதியில், இவர் விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகி, விநியோகஸ்தர்களின் குரலாக ஒலித்தார்.[4][5] 2008-ஆம் ஆண்டில், மாளவிகா நடித்த கட்டுவிரியன் என்ற பரபரப்பூட்டும் படத்தை இயக்கினார். மேலும் இப்படத்திற்கு இசையும் அமைத்தார். 2011-ஆம் ஆண்டில், கள்ளப்பருந்து என்ற படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் படம் திரையரங்கில் வெளியாகவில்லை.[6]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | இயக்குநர் | எழுத்தாளர் | நடிகர் | தயாரிப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
1985 | யார்? | இல்லை | ஆம் | ஆம் | ஆம் | ||
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | நாயகம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | |
1989 | காவல் பூனைகள் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ||
1994 | உளவாளி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ||
1995 | ஜமீன் கோட்டை | மாதசாமி / விக்ரமன் | இல்லை | ஆம் | ஆம் | இல்லை | |
1999 | குடும்ப சங்கிலி | இல்லை | ஆம் | ஆம் | ஆம் | ||
2008 | கட்டுவிரியன் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | இசையமைப்பாளர் |
இறப்பு
[தொகு]சேகரன் ஏப்ரல் 13, 2025 அன்று தன்னுடைய 73ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ 1.0 1.1 Bureau, The Hindu (2025-04-13). "Actor, screenwriter and producer Kalaipuli G Sekaran passes away at 73" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/actor-screenwriter-and-producer-kalaipuli-g-sekaran-passes-away-at-73/article69445756.ece.
- ↑ "Tamil Producer Kalaipuli G Sekaran Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 2025-04-14.
- ↑ Thandora (2015-11-30), Interview with Kalaipuli G Sekaran - I took a movie for 600Rs - Nettv4u, retrieved 2025-04-14
- ↑ "Kollywood's Response To Election Results - Vadivelu - Kushboo - Rama Narayanan - Vc Guhanathan - - Tamil Movie News - Behindwoods.com". www.behindwoods.com. Retrieved 2025-04-14.
- ↑ "Association elections declared - Tamil Movie News - Kalaipuli G Sekaran | K Rajan | Dr Kalidas | Rajagopalan - Behindwoods.com". www.behindwoods.com. Retrieved 2025-04-14.
- ↑ "The New Vadivelu-parthiban Style Combo - Varadaraj - Kallaparundhu - Vadivelu - Parthiban - Kalaipuli G Sekaran - Kaidhi - Tamil Movie News - Behindwoods.com". www.behindwoods.com. Retrieved 2025-04-14.