உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்பித்தல் (Teaching) என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் சூழலில் ஒரு கற்பவர், மாணவர் அல்லது பார்வையாளர்களுக்குத் திறன்களை ( அறிவு மற்றும் தனிப்பட்ட திறன்கள் ) வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆசிரியரால் செயல்படுத்தப்படும் நடைமுறையாகும். இது மாணவர்களின் கற்றலுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. [1] கற்பித்தல் என்பது கல்வியின் பரந்த கருத்தாக்கத்தின் ஒரு பகுதியாகும். [2] [3]

கற்பித்தல் முறை

[தொகு]

ஒரு கற்பித்தல் முறையானது மாணவர்களின் கற்றலை செயல்படுத்துவதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இவை கற்பிக்கப்படவேண்டிய பாடப்பொருள் மற்றும் கற்கும் மாணவர்களின் இயல்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை பொருத்தமானதாகவும் திறமையாகவும் இருப்பதற்கு, அது கற்பவர், பாடத்தின் தன்மை மற்றும் கற்றல் வகை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. [4]

பணி

[தொகு]

ஒரு ஆசிரியர், பள்ளி ஆசிரியர் அல்லது முறையாகக் கல்வியாளர் என்றும் அழைக்கப்படுபவர், கற்பித்தல் மூலம் மாணவர்களுக்கு அறிவு, திறன் அல்லது நல்லொழுக்கத்தைப் பெற உதவுபவர் ஆவார்.

முறைசாரா முறையில் ஆசிரியரின் பங்கு வேறு சிலராலும் ஏற்கப்படலாம் (எ.கா. ஒரு குறிப்பிட்ட பணியை எப்படிச் செய்வது என்பதை சக ஊழியருக்கு சொல்லிக் கொடுக்கும் போது). சில நாடுகளில், பள்ளி வயது இளைஞர்களுக்குக் கற்பித்தல், பள்ளி அல்லது கல்லூரி போன்ற முறையான அமைப்பில் மட்டும் இல்லாமல் வீட்டுக்கல்வி போன்ற முறைசாரா அமைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்படலாம். வேறு சில தொழில்கள் கணிசமான அளவு கற்பித்தலை உள்ளடக்கியிருக்கலாம் (எ.கா. இளைஞர் பணியாளர், போதகர்).

கடமைகள்

[தொகு]

ஒரு ஆசிரியரின் பங்கு கலாச்சாரங்களைப் பொறுத்து வேறுபடலாம்.

கல்வியறிவு மற்றும் எண்ணியல், கைவினைத்திறன் அல்லது தொழிற்பயிற்சி, கலை, மதம், குடிமை, சமூகப் பொறுப்புகள் அல்லது வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் வழிமுறைகளை வழங்கலாம்.

முறையான கற்பித்தல் பணிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்திட்டங்களின்படி பாடங்களைத் தயாரித்தல், பாடங்களை வழங்குதல் மற்றும் மாணவர் முன்னேற்றத்தை மதிப்பிடுதல் ஆகியவை அடங்கும்.

ஒரு ஆசிரியரின் தொழில்முறை க் கடமைகள் என்பது வகுப்பறைக் கற்பித்தல் என்பதைத் தாண்டியும் இருக்கலாம். வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப்பயணங்களில் செல்லலாம், படிப்புக் கூடங்களைக் கண்காணிக்கலாம், பள்ளிச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் உதவலாம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றலாம். கொடுமைப்படுத்துதல், [5] பாலியல் துன்புறுத்தல், இனவெறி அல்லது துஷ்பிரயோகம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய தீங்கு [6] ஆகியவற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் சட்டப்பூர்வ கடமையும் அவர்களுக்கு உள்ளது. [7] சில கல்வி முறைகளில், மாணவர்களின் ஒழுக்கத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கலாம்.

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Manuel Musial; Fabienne Pradere; André Tricot (2012). How to design a teaching course. Brussels: De Boeck. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978- 2-8041-6936-7.
  2. Christiane Chessex-Viguet (2015). Penser l'école. Paris: L'Harmattan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-343-06826-8.
  3. Naïl Ver, Adeline Paul and Farid Malki, Professeur des écoles : droits, responsabilités, carrière, Retz Éditions, 2014, p. 223.
  4. Westwood, P. (2008). What teachers need to know about Teaching methods. Camberwell, Vic, ACER Press
  5. "School bullying is not a conflict: The interplay between conflict management styles, bullying victimization and psychological school adjustment". International Journal of Environmental Research and Public Health 19 (18): 11809. 2022. doi:10.3390/ijerph191811809. பன்னாட்டுத் தர தொடர் எண்:1661-7827. பப்மெட்:36142079. 
  6. "Teachers can make a difference in bullying: Effects of teacher interventions on students' adoption of bully, victim, bully-victim or defender roles across time". Journal of Youth and Adolescence 51 (12): 2312–2327. 2022. doi:10.1007/s10964-022-01674-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0047-2891. பப்மெட்:36053439. பப்மெட் சென்ட்ரல்:9596519. http://dx.doi.org/10.1007/s10964-022-01674-6. 
  7. Briggs, F., Hawkins, R. (2020). Child Protection: A guide for teachers and child care professionals. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781003134701.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பித்தல்&oldid=3752124" இலிருந்து மீள்விக்கப்பட்டது