உள்ளடக்கத்துக்குச் செல்

கர்ப்பூரி தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பூரி தாக்கூர்
2024இல் இந்திய அஞ்சல் துறை வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் தாக்கூ
பிகாரின் 11வது முதலமைச்சர்
பதவியில்
22 டிசம்ப்ர் 1970 – 2 ஜூன் 1971
முன்னையவர்தோரகா பிரசாத் ராய்
பின்னவர்போலா பாஸ்வன் சாத்திரி
பதவியில்
24 ஜூன் 1977 – 21 ஏப்ரல் 1979
முன்னையவர்ஜெகந்நாத் மிஸ்ரா
பின்னவர்ராம் சுந்தர் தாசு
பிகாரின் 2வது துணை முதல்வர்
பதவியில்
5 மார்ச் 1967 – 31 ஜனவரி 1968
முன்னையவர்அனுக்ரா நாராயண் சின்கா
பின்னவர்சுசில் குமார் மோடி
பிகார் மாநில கல்வி அமைச்சர்
பதவியில்
5 மார்ச் 1967 – 31 ஜனவரி 1968
முன்னையவர்சத்யேந்திர நாராயண் சின்கா
பின்னவர்சதீஷ் பிரசாத் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-01-24)24 சனவரி 1924
பித்தௌஞ்சியா, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு17 பெப்ரவரி 1988(1988-02-17) (அகவை 64)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிசோசலிசக் கட்சி, பாரதிய கிரந்தி தளம், ஜனதா கட்சி, லோக்தளம்
வேலைசுதந்திர ஆர்வலர், ஆசிரியர், அரசியல்வதி
விருதுகள் பாரத ரத்னா (2024)

கர்பூரி தாக்கூர் (Karpoori Thakur) (சனவரி 24, 1924—பிப்ரவரி 17, 1988) பிகார் மாநிலத்து முன்னாள் முதல்வர் ஆவார். சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் தாழ்த்தப்பட்டோருக்காகவும் அரசு அலுவல்கள், கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிச் செயல்பட்டவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2024இல் இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]

இளமைக் காலம்

[தொகு]

கற்பூரி தாக்கூர், பிகார் மாநிலத்தில் சமசுதிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுரில் பிறந்தார்.[5][6][7] மாணவப் பருவத்திலேயே வெள்ளையனே வெளியேறு இயகத்தில் கலந்து கொண்டார்.[8][9] இந்திய விடுதலைப் இயக்கத்தில் கலந்து கொண்டதால் 26 மாதங்கள் சிறையில் இருந்தார். கல்விக்குப் பின் ஒரு சிற்றுர்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

போராட்டங்கள்

[தொகு]

1960 ஆம் ஆண்டில் அஞ்சல் தொலைவரித் துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் முன்னின்று போராடியதால் சிறைக்குச் சென்றார். டெல்கோ குழுமத் தொழிலாளர் போராட்டத்தில் 28 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து கலந்து கொண்டார்.

அரசியல் பணி

[தொகு]

1970 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பிகார் முதல் அமைச்சர் ஆனார். இரண்டாம் முறையாக 1977 இல் மீண்டும் பிகார் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார். கட்டாய ஆங்கில வழிக் கல்வியை அகற்றி மாநில மொழியான இந்தியைக் கொண்டு வந்தார். லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமுல் படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் செயப்பிரகாசு நாராயணன் தலைமையில் நடந்த முழுப் புரட்சி இயக்கத்தில் இணைந்து வினையாற்றினார். பிகார் அரசியல் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராம் விலாசு பாசுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாளில் இவர் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Joshi, Varenya. "Bharat Ratna for Jananayak Karpuri Thakur: Transformative Leader's Enduring Legacy". Bru Times News (in ஆங்கிலம்). Archived from the original on 23 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
  2. "Former Bihar chief minister Karpoori Thakur to be awarded Bharat Ratna posthumously". Hindustan Times (in ஆங்கிலம்). 23 January 2024. Archived from the original on 23 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
  3. "'Jan Nayak Karpoori Thakurji's Life Revolved Around Twin Pillars Of Simplicity, Social Justice': PM Modi".
  4. "சமூக சீர்திருத்தவாதி கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது". www.dinamalar.com. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 24 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Singh, Aastha (24 January 2019). "Karpoori Thakur, the other Bihar CM who banned alcohol". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 June 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
  6. "Karpoori Thakur, former Bihar Chief Minister, conferred Bharat Ratna posthumously". Archived from the original on 23 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
  7. "How Bihar's caste survey seeks to build on the legacy of Karpoori Thakur". Archived from the original on 12 November 2023. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
  8. Prasāda, R.; Ārya, J.; Kumāra, K. (1991). Karpoori, a Portrait. S.K. Publications. p. 11. Archived from the original on 23 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
  9. Singh, S. (2015). Ruled or Misruled: Story and Destiny of Bihar. Bloomsbury Publishing. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-85436-42-0. Archived from the original on 23 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024. Karpoori Thakur, a Gandhian leader from an extremely backward caste of a barber or nai community from Samastipur
  10. "கர்பூரி தாக்கூர் - சிறப்பு தபால் தலை". www.indianpost.com. இந்திய அஞ்சல் துறை. பார்க்கப்பட்ட நாள் 24 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ப்பூரி_தாக்கூர்&oldid=3928642" இலிருந்து மீள்விக்கப்பட்டது