கருநாடக மாநிலம் டாக்டர் கங்குபாய் கங்கல் இசை மற்றும் நிகழ்த்துக் கலைகள் பல்கலைக்கழகம்
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 14 பிப்ரவரி 2008 |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
வேந்தர் | கருநாடக ஆளுநர் |
துணை வேந்தர் | நாகேசு வி. பெத்தகோட்டி |
அமைவிடம் | |
இணையதளம் | Official Website |
கருநாடக மாநிலம் டாக்டர் கங்குபாய் கங்கல் இசை மற்றும் நிகழ்த்துக் கலைகள் பல்கலைக்கழகம் (Karnataka State Dr. Gangubhai Hangal Music and Performing Arts University) என்பது இசை மற்றும் நிகழ்த்துக் கலை பல்கலைக்கழகம் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. [1] இசை மற்றும் கலைகள் பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொது பல்கலைக்கழகம் இதுவாகும். இது கர்நாடக அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மைசூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு பாரம்பரிய கட்டிடத்தில் செயல்படுகிறது.[2][3] இப்பல்கலைக்கழகம் கங்குபாய் ஹங்கல் நினைவாகப் பெயரிடப்பட்டது.
இது இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது.
நிறுவுதல்
[தொகு]கருநாடக மாநிலம் டாக்டர் கங்குபாய் கங்கல் இசை மற்றும் நிகழ்த்து கலைகள் பல்கலைக்கழகம் 14 பிப்ரவரி 2008-இல் நிறுவப்பட்டது. கர்நாடக மாநில டாக்டர் கங்குபாய் ஹங்கல் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக சட்டம், 2009[4] மூலம் கருநாடக மாநில அரசால் முறையாக நிறுவப்பட்டது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Untitled Page" (PDF). Archived from the original (PDF) on 17 June 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012.
- ↑ "Three years after formation, music varsity hits the right note". Archived from the original on 25 January 2013.
- ↑ Music university's logo and website launched – Times Of India
- ↑ KArnataka universities to be brought under one Act – Bangalore – DNA