உள்ளடக்கத்துக்குச் செல்

கருடா பேரங்காடி

ஆள்கூறுகள்: 12°58′13″N 77°36′35″E / 12.970236°N 77.60975°E / 12.970236; 77.60975
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருடா பேரங்காடி
கருடா பேரங்காடியின் நுழைவுவாயில்
இருப்பிடம்:பெங்களூர், கருநாடகம்
இந்தியா இந்தியா
அமைவிடம்12°58′13″N 77°36′35″E / 12.970236°N 77.60975°E / 12.970236; 77.60975[1]
முகவரிமக்ரத் சாலை
திறப்பு நாள்மே, 2005
உரிமையாளர்உதய் கருடாச்சர்; நிலம் பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை
கடைகள் எண்ணிக்கை120
மொத்த வணிகத் தளப் பரப்பளவு126000 ச.மீ
தள எண்ணிக்கை6
வலைத்தளம்Official website

கருடா மால் என்னும் கருடா பேரங்காடிபெங்களூருவில் உள்ள பேரங்காடிகளில் ஒன்றாகும். இப்பேரங்காடி பிரைகேடு சாலையின் அருகே உள்ள மக்ரத் சாலையில் அமைந்துள்ளது. இப்பேரங்காடியின் இன்னுமொரு கிளையானது கே. ஆர். சர்கிள் அருகில் உள்ளது.

இடம்

[தொகு]

கருடா பேரங்காடியானது, 126,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்பொருள் அங்காடிகளையும், ஆறு மாடிகளையும், 180 அங்காடிகளையும் கொண்டுள்ளது.

பேரங்காடியிலுள்ள வசதிகள்

[தொகு]
  • வாகன நிறுத்துமிடம்
  • பல்பொருள் அங்காடிகள்
  • பொழுதுபோக்கு அரங்கம்
  • திரையரங்கம்
  • உணவகங்கள்

பிணக்குகள்

[தொகு]

2005ஆம் ஆண்டு நடந்த உயர்த்தி விபத்திற்குப் பிறகு பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டன[2]. 2007ஆம் ஆண்டு ஒருவர் மாடியில் இருந்து குதித்தார்.[2]

பெரிய பெங்களூர் மாநகரப் பேரவைக்கு சொந்தமான இடத்தில் இந்த பேரங்காடி கட்டப்பட்டுள்ளது.[2] கருடா பேரங்காடியும் பெரிய பெங்களூர் மாநகரப் பேரவையும் 52%-48% என்ற விகிதத்தில் வருமானத்தை பகிர்ந்து கொள்கின்றன.[2]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Garuda mall". Garudamall.net. 2014-01-09 இம் மூலத்தில் இருந்து 2013-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002092227/http://www.garudamall.net/about-us/. பார்த்த நாள்: 2014-03-27. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Lift in Garuda Mall was overloaded". The Hindu (Chennai, India). 12 July 2005 இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070823160208/http://www.hindu.com/2005/07/12/stories/2005071219170300.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடா_பேரங்காடி&oldid=3238528" இலிருந்து மீள்விக்கப்பட்டது