உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்குழி, கடலூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 11°34′N 79°36′E / 11.57°N 79.60°E / 11.57; 79.60
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருங்குழி கிராமம்

[தொகு]
கருங்குழி
—  கிராமம்  —
கருங்குழி
அமைவிடம்: கருங்குழி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°34′N 79°36′E / 11.57°N 79.60°E / 11.57; 79.60
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 5,449 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கருங்குழி [4] (ஆங்கிலத்தில்:Karunguzhi) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 ன் படி 5449 [5] பேர் இங்கு வசிக்கின்றனர். இவர்களில் 51% ஆண்கள் 49% பெண்கள் ஆவர். கருங்குழி மக்களின் கல்வியறிவு பெற்றவர்கள் 62%. அதில் ஆண்கள் 36%, பெண்கள் 26%. இது இந்திய தேசிய சராசரி கல்வி அறிவான 59.5% விட கூடுதலாகும். கருங்குழி மக்கள் தொகையில் 10% பேர் 6 வயத்திற்குட்பட்டவர் ஆவர்.

கருங்குழி ஊராட்சி

[தொகு]

கருங்குழி ஊராட்சியின்கீழ் கருங்குழி மற்றும் மேட்டுக்குப்பம் ஆகிய இரு பகுதிகள் வருகின்றன. [6] கருங்குழி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வருகின்றது.

கல்வி நிறுவனங்கள்

[தொகு]

1.அரசு தொடக்கப்பள்ளி, கருங்குழி

2.அரசு தொடக்கப்பள்ளி, மேட்டுக்குப்பம்,

3.அரசு மேல்நிலை பள்ளி, கருங்குழி.

4.எரிஸ் பாலிடெக்னிக் கல்லூரி, கருங்குழி

5.எரிஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கருங்குழி

வழிபாடு

[தொகு]

கருங்குழி ஊராட்சியில் இந்து, கிறித்துவம், இசுலாம் என்ற வேறுபாடின்றி வேற்றுமையில் ஒற்றுமையாய் மக்கள் வசிக்கின்றனர்.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவர்கள் 1858 முதல் 1867 வரை ஒன்பது ஆண்டுகள் கருங்குழியில் வாழ்ந்தார். கருங்குழியில் தங்கி இருந்தபோது 1865-ஆம் ஆண்டு "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் என்று மாற்றியமைத்தார். கருங்குழியில் வசிக்கும்போது நீரால் விளக்கு எரித்து அற்புதம் நிகழ்த்தியதாக வரலாறு உள்ளதால், நற்கருங்குழி என்ற பெயருமுண்டு. மேட்டுக்குப்பம் பகுதியில் சில வருடங்களாக உபயோகப்படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு சித்தி வளாகத் திருமாளிகை என்று பெயர் சூட்டினார். 1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் சித்தி பெற்றார். கருங்குழி நீரால் விளக்கெரித்த இல்லமும், மேட்டுக்குப்பம் சித்தி வளாகமும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

கருங்குழியில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், கைலாசநாதர் ஆலயம், மாரியம்மன் கோயில், திரௌபதி அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், காளியம்மன் கோயில், எல்லை கல் ஆஞ்சனேயர், பாலமுருகன், சித்திவிநாயகர் கோயில், பெரியாண்டவர் கோயில், வீரன் கோயில், ஐயனார் கோயில், தமிழரின் தொன்றுதொட்ட கலாச்சாராமகிய காமன் கோயில் மற்றும் கிருத்துவ தேவாலயம் ஆகிய வழிபட்டு தலங்களும் அமைந்துள்ளன

 தொழில்

[தொகு]

கருங்குழி மக்களின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும். ஆடு வளர்த்தல், மாடு வளர்த்தல் பால் உற்பத்தி, கோழி வளர்த்தல் போன்றவை முக்கிய வாழ்வாதார தொழிலாக அமைந்துள்ளது. கருங்குழி மற்றும் மேட்டுக்குப்பம் பகுதிகளில் 4 அரிசி ஆலைகளும், ஒரு மாவு அரைக்கும் ஆலையும் அமைந்துள்ளன.

 நீர்நிலைகள்

[தொகு]

மழைநீர் தவிர நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. சுரங்கங்களில் அதிக அளவு நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதால் 1980களில் 20-30அடியில் கிடைத்த நிலத்தடி நீர் இப்பொழுது 200 அடிகளுக்கும் கிடைக்கவில்லை என்பது வேதனை. வடக்கே செங்கால் ஓடையும் தெற்கே கொளக்குடி ஏரியும் விவசாய நீர் பாசனத்தில் முக்கியமான நீர்நிலைகள். கருங்குழியில் உள்ள நீர் நிலைகள்

1. கல்லாங்குளம்

2. பாப்பாறை கேணி நீரோடை

3. திருமாங்குளம்

4. தாங்கால்

5. அளவு கேணி

6. செங்கால் ஓடை

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  5. http://censusindia.gov.in/pca/cdb_pca_census/Houselisting-housing-TM.html
  6. http://www.tnrd.gov.in/databases.html