கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°16′11″N 77°32′28″E / 9.2697°N 77.5410°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தென்காசி மாவட்டம் |
அமைவிடம்: | கரிவலம்வந்தநல்லூர் |
சட்டமன்றத் தொகுதி: | வாசுதேவநல்லூர் |
மக்களவைத் தொகுதி: | தென்காசி |
ஏற்றம்: | 184 m (604 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பால்வண்ணநாதர் |
தாயார்: | ஒப்பனை அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், சங்கரன்கோயிலிலிருந்து 10 கிமீ தொலைவில், வைப்பாற்றின் தென்கரையில் கரிவலம்வந்தநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]குலசேகர பாண்டியன் வேட்டையாடுவதற்காகச் சென்றிருந்தபோது ஒரு யானை எதிர்ப்பட்டதாகவும், அந்த யானையை துரத்த அவர் சென்றபோது, அது சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு இறைவன் இருந்த புதரை வலம் வந்து சிவகணமாகப் பெற்றதால் இப்பெயரைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.[1]
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள மூலவர் பால்வண்ணநாதர் ஆவார். படிக லிங்கமாக இருப்பதால் பால்வண்ணநாதர் என்றும், களமரம் தலமரமாக இருப்பதால் திருக்களா ஈசர் என்றும், திருமுகம் விளங்கித்தோன்றுகின்ற லிங்க வடிவமாக இருப்பதால் முகலிங்கர் எனவும் மூலவர் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி ஒப்பனை அம்மன் ஆவார்.[1]
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
[தொகு]இங்குள்ள இறைவனைப் பற்றி எழுந்த பாடல்களைக் கொண்ட நூல் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி எனப்படும்.[1]