கமலா லட்சுமண்
கமலா லட்சுமணன் | |
---|---|
பிறப்பு | 1924 or 1925 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | நவம்பர் 14,2015 புனே, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | ஆர். கே. லட்சுமண் |
கமலா லட்சுமண் (Kamala Laxman) இந்திய சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் ஓவியர்ஆர்.கே.லட்சுமணின் மனைவி. [1] கமலா 2015 இல் தனது 90ஆம் வயதில் இறந்தார். இவரது மகன் சீனிவாஸ், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]கமலா சென்னையில் பிறந்து செயின்ட் தாமஸ் கான்வென்ட்டில் படித்தார், பின்னர் தில்லியின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள சர் ஜே.ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டிலிருந்து உள்ளக அலங்காரப் பிரிவில் பட்டம் பெற்றார். [2]
இவரது திறமையை உணர்ந்து, இந்தியா புக் ஹவுஸ் கமலாவை 1970 களில் குழந்தைகள் புத்தகங்களை எழுத நியமனம் செய்தது.[3] இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் தி தமா ஸ்டோரீஸ், தெனாலி & அதர் ஸ்டோரிஸ் மற்றும் தமா அண்ட் ஹிச் மிஸிங் மதர் ஆகியவை அடங்கும் .[4] இவரது கதைகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஓவியர் ஆர்.கே.லட்சுமனை இவர் திருமணம் செய்து கொண்டார் . கமலா 1965 ஆம் ஆண்டில் மும்பையில் தனது தாயால் நிறுவப்பட்ட மகாலட்சுமி பெண்கள் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்தார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Children's Book Writer and RK Laxman's Wife Kamala Laxman Dies". என்டிடிவி. 14 November 2015. http://www.ndtv.com/india-news/childrens-book-writer-kamala-laxman-dead-1243442.
- ↑ "Children's book writer Kamala Laxman dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 November 2015. http://timesofindia.indiatimes.com/life-style/books/features/Childrens-book-writer-Kamala-Laxman-dead/articleshow/49789632.cms.

- ↑ "Where Knowledge is the only gossip". 10 October 2010 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305002352/http://dnasyndication.com/dna/article/DNPUN32127.