கன்சியாம் ஓசா
கன்சியாம் ஓசா Ghanshyam Oza | |
---|---|
4 ஆவது குசராத்து முதலமைச்சர் | |
பதவியில் 17 மார்ச்சு 1972 – 17 சூலை 1973 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | சிமன்பாய் படேல் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1971–1972 | |
முன்னையவர் | மினூ மசானி |
பின்னவர் | அரவிந்து மோகன்லால் பட்டேல் |
தொகுதி | இராச்கோட்டு |
பதவியில் 1957–1967 | |
பின்னவர் | மூன்றாம் மேக்ராச்சி |
தொகுதி | சுரேந்திரநகர் நாடாளுமன்றத் தொகுதி |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1978-1984 | |
தொகுதி | குசராத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] பம்பாய் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 25 அக்டோபர் 1911
இறப்பு | 12 சூலை 2002[2] அகமதாபாது, குசராத்து, இந்தியா | (அகவை 90)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | சனதா கட்சி |
துணைவர் | Ramalaxmi |
பிள்ளைகள் | அன்சா, ரோகித்து, சரத்து0, பிரக்னா. |
உறவினர் | திவ்யாங் தேவ், மருத்துவர் தேவங் தேவ் (பெயரன்), பாரத் தாமோதரதாசு திரிவேதி (மருமகன்) |
மூலம்: [1] |
கன்சியாம் சோட்டலால் ஓசா (Ghanshyam Chhotalal Oza) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். குசராத்து மாநிலத்தின் முதலமைச்சராக 1972 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் தேதி முதல் 1973 ஆம் ஆன்டு சூலை மாதம் 17 ஆம் தேதி வரை பதவி வகித்தார்.[3] இளங்கலை மற்றும் எல். எல். பி. பட்டம் பெற்ற இவர் 1948 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை சவுராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டில் பம்பாய் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். 1957 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 1971 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலும் மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1972-74 ஆண்டுகளிலிருந்து குசராத்து மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஐக்கிய கத்தியவார் மாநிலம் எனப்படும் சவுராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டபோது இவர் யு. என். தேபர் அமைச்சகத்தில் அமைச்சராக இருந்தார். 1957 ஆம் ஆண்டில் சுரேந்திர நகர் தொகுதியில் வெற்றி பெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். 1971 ஆம் ஆண்டில் இராச்கோட்டு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மிகவும் நெருக்கமாக போட்டியிட்ட மினு மசானியைத் தோற்கடித்து பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையில் அமைச்சரானார்.
இந்திரா காந்தி விதித்த அவசரநிலை எதிர்த்த ஓசா 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொரார்ச்சி தேசாய் தலைமையில் அப்போதைய சனதா கட்சியில் பணியாற்றினார். குசராத்தில் இருந்து மாநிலங்களவை (சனதா கட்சி) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி முதல் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வரை பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு சூலை மாதம் 12 ஆம் தேதியன்று கன்சியாம் ஓசா காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ Parliamentary Debates: Official Report, Volume 196, Issue 2. Rajya Sabha. 2002. p. 1.
- ↑ "List of Chief Ministers (CM) of Gujarat". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.