கண்ணையன் தட்சிணாமூர்த்தி
கண்ணையன் தட்சிணாமூர்த்தி | |
---|---|
பிறப்பு | 29 மார்ச்சு 1962 திருமருகல், பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், (தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
தொழில் | மொழிபெயர்ப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கருங்குன்றம் |
கண்ணையன் தட்சிணாமூர்த்தி (Kannaiyan Daksnamurthy, பிறப்பு:29 மார்ச்சு 1962) என்பவர் சாகித்ய அக்காதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளராவார். இவர் மமங் தய் எழுதிய பிளாக் ஹில் நாவலின் மொழியாக்கமான கருங்குன்றம் நூலுக்கு 2023ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். [1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் எனும் ஊரில் 1962 மார்ச்சு 29 அன்று சிங்காரவள்ளி - வீ. கண்ணையன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் தட்சிணாமூர்த்தி.[2][3] முதுகலைப் பொருளியல், முதுகலைத் தமிழ் மற்றும் இளங்கலை சட்டவியல் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். இந்திய செய்திப் பணி இளநிலை அலுவலராகவும், அகில இந்திய வானொலியில் நிலைய இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1995 முதல் மொழிபெயர்ப்புத் துறையில் செயல்பட்டுவருகிறார்.[2] மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் (நேஷனல் புக் டிரஸ்ட்) மொழிபெயர்ப்பாளராகப் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவற்றுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]இவர் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[4] அவர் மொழிபெயர்த்துள்ள நூல்களின் தலைப்புகள் வருமாறு:
- எனது அரசியல் வாழ்க்கை
- மகாத்மா காந்தியின் சிந்தனைகள்,
- புரட்சி 1857
- இந்தியாவின் தேசியப் பண்பாடு,
- இந்திராகாந்தி ,
- புத்தாக்க வாழ்வியல் கல்வி,
- அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு,
- உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள்,
- சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன்,
- கண்ணியமான பொருளாதார வளர்ச்சி
- மக்களாட்சி
- நமது அரசியலமைப்பு
- மனித குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்
- இமயத்தில் விவேகானந்தர்
- தாவரங்களின் பரிணாம வளர்ச்சி
- எம்மும் பெரிய ஹூமும்
- கருங்குன்றம்
- நன்னெறி காட்டிய நல்லோர்
- யார்? ஆர்வமூட்டும் 50 விடைகளுக்கான வினாக்கள்
- குளோன்சியின் சாகசங்கள்
- இந்தியச் சட்ட முறைமை
- தாய் மண்
- அசாமின் அஞ்சா நெஞ்சன் லாச்சித் பர்பூக்கன்
- நல்லியல்புகளைப் பரப்பிய நற்பணி: மனதின் குரல்@100
- Kundrakkudi Adigal-குன்றக்குடி அடிகள் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு)
- Ashokamitran-அசோகமித்திரன் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு)
- விவரணை(Tamil translation of International Booker prize 2024 Shortlisted title 'THE DETAILS' By IA GENBERG (ISBN978-81-978402-5-8)
விருதுகள்
[தொகு]- தமிழ் வளர்ச்சித் துறை மொழிபெயர்ப்பாளர் விருது 2022
- நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் 2022
- சாகித்திய அகாதமி விருது 2023
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..". தினமலர் கல்விமலர். https://m.dinamalar.com/kmalardetail.php?id=63601. பார்த்த நாள்: 13 March 2024.
- ↑ 2.0 2.1 "நூல்களுக்கு கவனம் கிடைப்பதில்லை..."சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள கண்ணையன் பேச்சு." தினத்தந்தி. Retrieved 13 March 2024.
- ↑ "சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருது: கண்ணையன் தட்சிணாமூர்த்தி - பன்முக மொழிபெயர்ப்பாளர்". Hindu Tamil Thisai. 2024-03-17. Retrieved 2024-03-18.
- ↑ "கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/sahitya-akademi-award-announcement-for-kannayan-dakshinamurthy-707353. பார்த்த நாள்: 13 March 2024.