உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணாபட்டி விசுவநாதர் கோயில்

ஆள்கூறுகள்: 10°06′24″N 77°46′45″E / 10.106755°N 77.779255°E / 10.106755; 77.779255
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாபட்டி விசுவநாதர் கோயில்
கண்ணாபட்டி விசுவநாதர் கோயில் is located in தமிழ் நாடு
கண்ணாபட்டி விசுவநாதர் கோயில்
கண்ணாபட்டி விசுவநாதர் கோயில்
விசுவநாதர் கோயில், கண்ணாபட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°06′24″N 77°46′45″E / 10.106755°N 77.779255°E / 10.106755; 77.779255
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல் மாவட்டம்
அமைவிடம்:கண்ணாபட்டி
ஏற்றம்:257 m (843 அடி)
கோயில் தகவல்
மூலவர்:விசுவநாதர்
குளம்:உத்தரவாகினி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை,
ஆடிக் கிருத்திகை,
வைகாசி விசாகம்,
நவராத்திரி,
பங்குனி உத்திரம்

கண்ணாபட்டி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் கண்ணாபட்டி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 257 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கண்ணாபட்டி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°06′24″N 77°46′45″E / 10.106755°N 77.779255°E / 10.106755; 77.779255ஆகும்.

இக்கோயிலில் மூலவர் விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் உத்தரவாகினி; தலவிருட்சம் வில்வமரம் ஆகும். காரணாகம முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. விசுவநாதர், விசாலாட்சி, சங்கரலிங்கம் , தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், சூரியன், சந்திரன், காலபைரவர், நவக்கிரகங்கள் மற்றும் அஷ்ட நாகர்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kannapatti, Viswanathar temple". vasthurengan.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  2. ValaiTamil. "அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  3. "Viswanathar Temple : Viswanathar Viswanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.

வெளி இணைப்புகள்

[தொகு]