கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | வசனம்
|
திரைக்கதை | பாரதி கண்ணன் |
இயக்கம் | தனுஷ் |
நடிப்பு |
|
முகப்பிசை | கண்ணான கண்ணே பாடியவர் சித்ரா வரிகள் ஜி கே வி |
பின்னணி இசை | சாம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 722 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | அன்புராஜ் சுராஜ் |
ஒளிப்பதிவு | |
தொகுப்பு |
|
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் ஏ.ஆர் பிலிம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 2 நவம்பர் 2020 4 மார்ச்சு 2023 | –
Chronology | |
முன்னர் | கண்மணி (20:30) |
கண்ணான கண்ணே என்பது சன் தொலைக்காட்சியில் 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி காதல் நாடகத் தொடர் ஆகும்.[1]
இது தெலுங்கு மொழித் தொடரான 'பௌர்ணமி' மற்றும் கன்னட மொழித் தொடரான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ் மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 4 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 722 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைசுருக்கம்
[தொகு]அம்மா, தங்கை, பாட்டி என அனைவருக்கும் பிடித்த செல்ல பிள்ளையாக இருக்கும் மீரா. இவளின் மனதில் இனம் புரியாத கவலை. தந்தையின் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும்இவளுக்கு வீட்டில் எத்தனை பேர் பாசமாக பார்த்துக் கொண்டாலும், தந்தை போல் ஈடாகுமா என்பதே அவளின் கவலை. இவளுக்கு தந்தையிடம் கிடைக்காத பாசத்தை குடுக்க நினைக்கும் காதலன் யுவா. மீராவிற்கு தந்தையின் பாசம் கிடைக்குமா? என்பது தான் கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- நிமிக்ஷிதா - மீரா (கௌதம் மற்றும் கௌசல்யாவின் மகள்)
- ராகுல் ரவி - யுவராஜ் கோடீஸ்வரன்
- பிரித்திவிராஜ் - கௌதம்
- நித்யா தாஸ் - யமுனா கௌதம்
- பீர்த்தீ சஞ்சீவ் - வாசுகி
மீரா குடும்பத்தினர்
[தொகு]- அக்ஷிதா - ப்ரீத்தி
- சுலக்சனா - அன்னப்பூரணி
- பிரீத்தி சஞ்சீவ் - வாசுகி (கௌசல்யாவின் சகோதரி)
யுவா குடும்பத்தினர்
[தொகு]- லிவிங்ஸ்டன் - கோடீஸ்வரன்
- நித்யா ரவீந்தர் - புஷ்பா
துணைக் கதாபாத்திரம்
[தொகு]- பிரியா பிரின்ஸ்[3] - மேனகா
- ஹிடாயா - ஸ்வப்னா
- பாலாஜி - பாபு
- தாரா - ரோஷனா
- சுரேஷ்
- சதிஷ்
- அகமது ஹசிசன்
- ரிச்சி கிரீன்
- அஸ்வினி செல்வம்
- சரவணன்
சிறப்பு தோற்றம்
[தொகு]- இனியா[4][5] (அத்தியாயம் 1)
- ரோபோ சங்கர் - சங்கர்
- இந்திரஜா - பாண்டிமா
- திவ்யா ஸ்ரீதர் - பாரதி
- அனுஷ் அகர்வால் - விக்ரம்
- மனோஜ் குமார் - ரவி சக்கரவர்த்தி
- மெரசி லயல் - ஜானகி சக்கரவர்த்தி
நடிகர்களின் தேர்வு
[தொகு]இந்த தொடரில் தந்தை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரித்திவிராஜ் நடிக்க, இவரின் மகள் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நிமிக்ஷிதாஎன்பவர் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரித்திவிராஜ் மனைவி கதாபாத்திரத்தில் திரைப்பட நடிகை இனியா மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவரின் தாய் கதாபாத்திரத்தில் சுலக்சனா நடித்துள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் என்பவர் யுவாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
முகப்பு பாடல்
[தொகு]கண்ணான கண்ணே என்ற முகப்பு பாடலுக்கு 'ஜி கே வி' என்பவர் வரிகள் எழுத பிரபல பாடகி சித்ரா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு 'சாம்' என்பவர் இசை அமைத்துள்ளார்.
ஒலிப்பதிவு
[தொகு]பாடல் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர் | நீளம் | |||||||
1. | "கண்ணான கண்ணே" | சித்ரா | 3:19 | |||||||
2. | "தேவதை போல வந்தால்" | பிரதீப் பல்லூருதி | 1:00 | |||||||
3. | "மின்னல் போல என்னை தாக்கும் கண்கள்" | ஷான் ரோல்டன் | 1:00 | |||||||
4. | "கண்ணான கண்ணே (II)" | ஷான் ரோல்டன் | 1:00 | |||||||
5. | "போ உறவே" | அருண் பாரதி | 1:35 |
6. " அப்பா என் தெய்வம் " ரோஹித் 1:00
மதிப்பீடுகள்
[தொகு]இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[6] கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2020 | 7.5% | 8.3% |
7.9% | 9.2% | |
2021 | 0.0% | 0.0% |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் மற்றும் 11 ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சிலும் பார்க்க முடியும்.[7]
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கண்ணான கண்ணே புதிய தொடர்". tamil.samayam.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Popular Kannada TV serial Manasaare to be made in Tamil". timesofindia.indiatimes.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Priya Prince joins 'Kannana Kanne'; shares her excitement with fans". timesofindia.indiatimes.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "சின்னத்திரையில் நடிகை இனியா". tamil.webdunia.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "கண்ணாண கண்ணே சீரியல் வில்லியாக களமிறங்கும் இனியா! வாகை சூடுவாரா?". tamil.samayam.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "WEEK 43 - DATA: Saturday, 24th October 2020 To Friday, 30th October 2020". BARC India. Archived from the original on 11 November 2020.
- ↑ "Shakthi TV Guide". shakthitv.lk.
வெளி இணைப்புகள்
[தொகு]- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தெலுங்கில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்
- 2023 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- லிவிங்ஸ்டன் நடித்த திரைப்படங்கள்