கட்சிப்பாட்டு
Appearance
கட்சிப்பாட்டு என்பது, வில்லிசைக்கலையுடன் தொடர்புடையது. இக்கலையானது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கலையானது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டத்தில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் நிகழ்கிறது.[1].கட்சிப்பாட்டிற்குரிய இசைக்கருவிகள் வில் ,குடம், டோலக் ,ஜால்ரா ,கட்டை ஆகியன ஆகும். வில்லிசைக்குரிய வில்லையே, கட்சிப்பாட்டுக் கலையில் பயன்படுத்தினாலும், இக்கலைக்குரிய வில் ஆடம்பரமின்றி, கவர்ச்சியின்றி இருக்கும். இக்கலைக் கலைஞர் இரு குழுக்களாகப் பிரிந்து,ஒரு குழுவின் தலைவர் பாடியதும், அதற்கு எதிர் குழுவினர் பதில் பாடுவதே, இக் கலையின் நடைமுறையாகும். இக்கலையை நிகழ்த்துகிறவர்கள், மிகவும் அருகி வருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. Retrieved 2012-07-16.