ஓணபொட்டன்

ஓணபொட்டன் (ஒனேஸ்வரன்) (Onapottan) என்பது கேரளாவின் வடக்கு மலபாரின் இடுக்கி மாவட்டம் போன்ற பகுதிகளில் ஓணம் பருவத்தில் கிராமங்களில் தோன்றும் ஒரு நாட்டுப்புற பாத்திரம் ஆகும்.[1]. ஓணத்தின் உத்ரம் மற்றும் திருவோனம் நாட்களில் ஓணபொட்டன் வீடுகளுக்குச் செல்கிறார். இக்கதாபாத்திரம் ஒரு கலையின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. அவர் வீடுகளுக்கு செல்லும்போது யாரிடமும் பேசுவத்தில்லை. அதனால் தான் இவரை ஓணப்பொட்டன் (மலையாள மொழியில் பொட்டன் = காது கேளாதவர்) என்று அழைக்கிறார்கள். இவர் தன் தலையில் கனமான கிரீடமும், ஒரு கையில் பனை ஓலை குடையும், ஒரு கையில் மணியும் வைத்திருப்பார். மேலும் தன் முகத்தில் வண்ணம் பூசி, தன் வாய்ப்பகுதியை மறைத்தும் தன் கையில் உள்ள மணியால் ஓணத்தை அறிவிப்பார். அவர் வீட்டுக்கு வந்து ஆசீர்வதிப்பது நல்லது என நம்பப்படுகிறது.[2]. ஓணபொட்டன் வேடமிட கேரளாவில் உள்ள பழங்குடி மக்களான மலயா சமூக உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Onapottan, Kummattikali....Names that you hear during Onam". Mathrubhumi. Retrieved 15 December 2017.
- ↑ "ഓണവരവറിയിച്ച് ഓണപ്പൊട്ടന് ഒരുക്കം തുടങ്ങി". www.mathrubhumi.com (in ஆங்கிலம்). Retrieved 15 December 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ E, Shinod. "ചിരിയും കളിയുമായി ഓണപ്പൊട്ടന്". malayalam.oneindia.com (in மலையாளம்). Mathrubhumi. Retrieved 15 December 2017.