ஒங்ஙல்லூர் தளி சிவன் கோயில்
Appearance
ஒங்ஙல்லூர் தளி சிவன் கோயில் (Ongallur Taliyil Shiva Temple) என்பது தென்னிந்தியாவிலுள்ள, கேரள மாநிலத்தில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலாகும். இது பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி என்னும் இடத்திற்கு அருகே அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தெளிவற்ற தோற்றத்துடன் செவ்வண்ண இரும்புச் சார மண்ணில் செய்யபட்ட சிற்பங்கள் உள்ளன.
இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் 8 கி.மீ தொலைவில் உள்ள சோர்னூர் தொடருந்து நிலையம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் சுமார் 64 கி.மீ. தொலைவில் உள்ள கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[1]