உள்ளடக்கத்துக்குச் செல்

ஒகேனக்கல் அருவி நீர்ப் பிணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒகேனக்கல் நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கருநாடகம் ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு மோதல் ஆகும். தமிழ்நாட்டில் புளோரைடினால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாழும் 4040,000 மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ. 13,34  பில்லியன் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 2008 பெப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது இதற்கு காரணமாக அமைந்தது.[1]

பின்னணி

[தொகு]

காவேரி நீர்ப் பிணக்கு

[தொகு]

காவேரி ஆற்றில் இருந்து வரும் நீரை கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் பிணக்கு இருந்து வருகிறது. இது முந்தைய மைசூர் அரசு மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் முக்கிய காரணமாகக் கருதப்பட்டு ஒரு நூற்றாண்டு பழமையான பிணக்காக உள்ளது.[2] இந்த நெருக்கடியைத் தணிக்க எடுக்கப்பட்ட பல நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகமானது கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இரு மாநிலங்களின் பேராளர்கள் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டனர். ஒன்று கர்நாடகத்தின் மேகேதாட்டு இன்னொன்று தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டம் ஆகும்.[3] இத்திட்டத்தின் படி, காவிரியின் ஒகேனக்கல் அருவிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தமிழக மக்களுக்கு நீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.[4] பெங்களூருக்கான காவிரி நீர் விநியோகத்தை அதிகரித்து பயன்படுத்தப்படுவதை ஆட்சேபிக்கும் தமிழகம் அதை வாபஸ் பெற்றால், இந்திய ஒன்றிய நீர்வள அமைச்சகம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட கர்நாடகம் ஒப்புக் கொண்டது. இதற்கு தமிழகம் ஆட்சேபனை தெரிவித்தது, ஆனால் பின்னர் தமிழகம் பெங்களூருக்கு அதிகப்படியான நீரை வழங்குவதற்கான தனது ஆட்சேபனையை திரும்பப் பெற்றது.[5] கர்நாடகாவில் எழுந்த பரவலான போராட்டங்களுக்கு பின்னர் ஒகேனக்கல் திட்டம் நிறுத்தப்பட்டது.

ஒகேனக்கல் தீவு (இடைத்திட்டு) உரிமை தகராறு

[தொகு]

தருமபுரி மாவட்டத்தின், பென்னாகரம் துணை மாவட்டத்திற்குட்பட்ட கூத்தாபடி ஊராட்சி கிராமத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியாக ஒகேனக்கல் உள்ளது .,[6] ஆனால் அருவிக்கு அருகில் மக்கள் யாரும் குடியிராத ஒரு தீவுக்கான (இடைத்திட்டு) உரிமையை கர்நாடகம் கோரியது. இதற்காக கர்நாடகத்தின் அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின்போது கர்நாடக கவிரிக் கரையில் இருந்து இந்த இடைத்திட்டுப் பகுதிக்கு நீந்தி வந்த ஆர்பாட்டக்காரர்கள் அங்கு கன்னடக் கொடியை நட்டடுவைத்துவிட்டுச் சென்றனர். இந்த போராட்டங்களினால் இரு மாநிலங்களுக்கிடையிலான உறவை மேலும் பாதிப்படைந்தது.[7][8][9]

கர்நாடகத்தின் பார்வை

[தொகு]

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கவிரி நீரில் அதன் பங்கு பாதிக்கப்படும் என்றும், இந்த அழகிய அருவி அதற்கு சொந்தமானது என்று ( மெட்ராஸ் மாகாணத்தின் முந்தைய நில வரைபடத்தின் அடிப்படையில்) காரணங்களை முன்வைத்து கர்நாடகம் இந்த திட்டத்தை எதித்தது. இதன் மூலம் ஒகனேக்கலில் குடிநீர் திட்டம் சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டியது.[8][9]

தமிழகத்தின் பார்வை

[தொகு]

ஓகனேக்கல் திட்டத்திற்கு இந்திய ஒன்றிய அரசு 1998 இல் ஒப்புதல் அளித்தது. பெங்களூரு திட்டத்தைப் போலவே இந்த திட்டத்துக்கும் அண்டை மாநிலத்தின் ஒப்புதலும் காவிரியின் கூடுதல் நீரும் தேவை. ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும் அதன் பங்கைப் பயன்படுத்தும் உரிமை கொண்டவை. இந்து - கர்நாடகா 1998 ஆம் ஆண்டில் ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது: தமிழ்நாடு பரணிடப்பட்டது 2008-04-05 at the வந்தவழி இயந்திரம்

காலக்கோடு

[தொகு]
  1. 1997 மே - கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய இரண்டிற்கும் தீட்டப்பட்டவுள்ள இரண்டு திட்டங்களுக்கு உடன்படுகின்றன, ஒன்று கர்நாடகாவின் மெகேடாட்டு மற்றும் மற்றொன்று தமிழ்நாட்டின் ஒகனேக்கலில்.[3]
  2. 26 பிப்ரவரி 2008 - தமிழக முதல்வர் எம்.கருணாநிதி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  3. 16 மார்ச் 2008 - கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா இந்த திட்டத்திற்கு எதிராக ஒகேனக்கலில் ஒரு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
  4. மார்ச் 27, 2008 - தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் "முழு ஒத்துழைப்பு மற்றும் உதவியை" வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியது.
  5. 31 மார்ச் 2008 - ஒகேனக்கலில் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்துமாறு கர்நாடக மாநில அரசு தமிழகத்தைக் கோரியது. இந்த சர்ச்சையைத் தீர்த்துவைக்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரியது.[10]
  6. 2 ஏப்ரல் 2008 - இந்த திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் பரவலான போராட்டங்கள் நடத்தப்பட்டன.[11]
  7. 5 ஏப்ரல் 2008 - கர்நாடகத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை இந்த திட்டம் நிறுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.[12]
  8. 17 ஜூன் 2008 - தர்மபுரிக்கு அருகிலுள்ள ஒட்டப்பட்டியில் ஒகேனக்கல் நீர் வழங்கல் திட்டத்தின் அலகு அலுவலகம் திறக்கப்பட்டது.[13]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. IBNlive: Karunanidhi asks Centre to intervene in water war
  2. P. B. Anand. "Water and identity – An analysis of the Cauvery river water dispute" (PDF). University of Bradford. Archived from the original (PDF) on 2007-07-09. பார்க்கப்பட்ட நாள் 2007-08-13.
  3. 3.0 3.1 The Indian Express- Cauvery water talks caught in local politics
  4. "TimesNow – Who's Hogenakkal is it, anyway?". Archived from the original on 2008-04-12. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
  5. The 1998 story of Hogenakkal பரணிடப்பட்டது 2008-04-08 at the வந்தவழி இயந்திரம் The Hindu
  6. Pradhan Mantri Gram Sadak Yojana – Census List
  7. "The Hindu – Joint survey of island at Hogenakkal postponed". Archived from the original on 2008-03-18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. 8.0 8.1 "Time of India – Hogenakkal issue: Karnataka BJP wants Centre to intervene". Archived from the original on 2012-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  9. 9.0 9.1 Livemint – Hogenakkal issue: Time to love thy neighbour?
  10. "The Hindu – Tamil Nadu urged to stop work on Hogenakkal water supply project". Archived from the original on 2008-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. "MSN News: Hogenakkal row: Time to show restraint". Archived from the original on 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. Indian Express: TN Govt puts Hogenakkal project on hold
  13. [1][தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]