ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோயில்
ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தின் ஏலாக்குறிச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஆகும். பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 375 கி.மீ தொலைவிலும் ஏலாக்குறிச்சி அமைந்துள்ளது.
அடைக்கல அன்னை
[தொகு]ஏலாக்குறிச்சியில் மேரி மாதாவிற்கு தேவாலயம் ஒன்றைக் கட்டிய வீரமாமுனிவர், அடைக்கல அன்னை என்று பெயர் சூட்டினார்.
சிறப்பு
[தொகு]அரியலூரை ஆண்ட அரங்க மழவராய நைனார் என்ற மன்னர், தீராதநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது அடைக்கல அன்னையை வேண்டி குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சுற்றுலா இடம்
[தொகு]இந்த ஆலயத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சுற்றுலா இடமாக அறிவித்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினார். கோடை விடுமுறையில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.[1] [2]
ஆலய விரிவாக்கப் பணிகள்
[தொகு]ஆசியாவிலேயே மிக உயரமான 120 அடி ஜெபமாலை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 53 அடி உயர வெண்கலத்திலான அடைக்கலமாதா திருவுருவ சொரூபம் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ http://www.dailythanthi.com/News/Districts/2014/08/17230549/Mata-tiruttalat-refuge-in-the-sacred-ritual-for-kuttuvil.vpf
- ↑ http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=524173&cat=504[தொடர்பிழந்த இணைப்பு]