உள்ளடக்கத்துக்குச் செல்

ஏபெல் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏபெல் பரிசு
விளக்கம்கணிதத் துறையில் மிகச்சிறந்த அறிவியல் ஆக்கத்திற்காக
நாடுநோர்வே
வழங்குபவர்நோர்வே அரசு
முதலில் வழங்கப்பட்டது2003
இணையதளம்abelprize.no
முன்பு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த ஓசுலோ பல்கலைகழகத்தின் சட்டத்துறை கட்டிடமான டோமசு மீடியாவின் திறந்த முற்றத்தில் இப்பரிசு வழங்கப்படுகின்றது.

ஏபெல் பரிசு (Abel Prize) என்பது நார்வே மன்னரால் ஆண்டுதோறும் உலகளாவிய கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு விருதாகும். 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

சுவீடனாலும் நார்வேயினாலும் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசு கணிதத்தை உள்ளடக்கவில்லை என்பதால் சோஃபஸ் லை (Sophus Lie) என்பவர் கணிதத்திற்கு தனியே வழங்க வேணும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இரண்டாம் ஆஸ்கார் மன்னர் இதற்காக நிதியையும் ஒதுக்க திட்டங்கள் வரைந்தார். ஆனாலும் 1905இல் சுவீடனும் நார்வேயும் பிரிந்ததில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

ஏபெல் விருதாளர்கள்

[தொகு]

நார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள். இது வரையில் இப்பரிசைப் பெற்றவர்கள்:

ஆண்டு விருதாளர்(கள்) படம் தேசியம் குறிப்பு
2003 ஜீன்-பியேர் செரே Jean-Pierre Serre  பிரான்சு "இடவியல், இயற்கணித வடிவவியல், எண் கோட்பாடு இவை உள்ளிட்ட பல கணிதப்பிரிவுகள் தற்கால உருவங்களை அடைய அடிக்கல் நாட்டி வழிகோலியதற்காக".
2004 மைக்கேல் அட்டீயா
ஐசடோர் சிங்கர்
Michael Atiya
Isadore Singer
 ஐக்கிய இராச்சியம்


 ஐக்கிய அமெரிக்கா

அட்டீயா-சிங்கர் குறியெண் தேற்றம் என்பதை உண்டாக்கி, நிறுவலும் படைத்து, அதன் மூலம் இடவியல், வடிவவியல், பகுவியல் இவைகளை ஒன்று சேர்த்ததற்காகவும் கணிதவியலுக்கும் இயற்பியலின் தத்துவ அடித்தளங்களுக்கும் பாலமமைத்த புதுமைக்காகவும்.”
2005 பீட்டர் டி. லாக்ஸ் Peter Lax  அங்கேரி /  ஐக்கிய அமெரிக்கா பகுதி வகையீட்டுச் சமன்பாடுகளின் கோட்பாடு, பயன்பாடு, தீர்வுக் கணிப்பு இவைகளுக்கெல்லாம் ஒரு ராஜபாட்டையைத் திறந்துவிட்டதற்காக.”
2006 லெனார்ட் கார்ல்சன் Lennart Carleson  சுவீடன் இசைப்பகுவியலுக்கும் இயக்கவியல் திட்டக் கோட்பாட்டிற்கும் அவர் அளித்திருக்கும் கருவூலப் பங்களிப்பிற்காகவும் அவைகளின் ஆழத்திற்காகவும்”.
2007 எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் S. R. Srinivasa Varadhan  இந்தியா /  ஐக்கிய அமெரிக்கா நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப் பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக "பெரிய விலக்கங்கள் கோட்பாடு”.
2008 ஜான் க்ரிக்ஸ் தாம்ப்சன்
ஜாக் டிட்ஸ்
John Griggs Thompson
Jacques Tits
 ஐக்கிய அமெரிக்கா;
 பெல்ஜியம் /  பிரான்சு
“இயற்கணிதத் துறையில் குறிப்பாக குலக்கோட்பாட்டுத்துறைக்கு அவர்களுடைய சாதனைநிறைந்த பங்களிப்புகளுக்காக”.
2009 மிகயில் குரோமோவ் Mikhail Leonidovich Gromov  உருசியா /  பிரான்சு “வடிவவியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக”
2010 ஜான் டேட் John Tate  ஐக்கிய அமெரிக்கா "எண்ணியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக"
2011 ஜோன் மில்னர் John Milnor அமெரிக்கர், ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம்,  ஐக்கிய அமெரிக்கா[1] "இடவியல், வடிவவியல், இயற்கணிதம் ஆகியவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக"[2]
2012 எந்திரே செமெரேடி Endre Szemeredi அங்கேரிய அமெரிக்கர்,  ஐக்கிய அமெரிக்கா[3] "இலக்கமியல் கணிதம், கொள்கைமுறைக் கணினியியலில் அடிப்படைப் பங்களிப்புகளுக்காகவும், கூட்டல் எண்ணியல், மற்றும் நிகழ்விரவலியல் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தியமைக்காகவும்"[4]
2013 தெலின், பியேர்பியேர் தெலின் Pierre Deligne பெல்ஜியர் "இயற்கணித வடிவவியலில் பங்களிப்புகளுக்காகவும், எண்கோட்பாட்டில் அதன் தாக்கம், உருமாதிரியாக்கக் கோட்பாடும் அது தொடர்பான படிப்புகள்"[5]
2014 சினாய், யகோவ்யகோவ் சினாய் Yakov G Sinai உருசியா உருசியர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர்
"for his fundamental contributions to dynamical systems, ergodic theory, and mathematical physics" [6]
2015 நாஷ், இளை., ஜான் எப்.ஜான் எப். நாஷ், இளை.;
நிரென்பெர்கு, லூயிலூயி நிரென்பெர்கு
John Forbes Nash Jr.
| Louis Nirenberg
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர்;
கனடா ஐக்கிய அமெரிக்கா கனடியர்/அமெரிக்கர்
"for striking and seminal contributions to the theory of nonlinear partial differential equations and its applications to geometric analysis" [7]
2016 வைல்சு, ஆண்ட்ரூஆண்ட்ரூ வைல்சு Andrew Wiles ஐக்கிய இராச்சியம் பிரித்தானியர் “பெய்ரி டி ஃபெர்மட்டின் கடைசித் தேற்றத்திற்கு.... ...வியத்தகு நிரூபணம் வழங்கி, எண் கோட்பாட்டில் புதிய காலத்தை தொடங்கியதற்காக” [8][9]

[10]

2017 யுவிசு மெய்யர் Yves Meyer பிரான்சு எக்கோல் நார்மேல் சுப் ரியுரி பாரிஸ் சாக்காலே “அலைவரிசைகளின் கணிதக் கோட்பாட்டின் வளர்ச்சியில் இவரது முக்கிய பங்கிற்கு” [11]
2018 இராபர்ட் லாங்லேட்டுசு Robert Langlands ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர்;
கனடா ஐக்கிய அமெரிக்கா கனடியர்/அமெரிக்கர்
""பிரதிநிதித்துவக் கோட்பாட்டை எண் கோட்பாட்டுடன் இணைக்கும் இவரது தொலைநோக்கு திட்டத்திற்காக.." [12]
2019 கரென் உஹெலென்பெக் Karen Uhlenbeck ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர் "வடிவியல் பகுதி வேறுபாடு சமன்பாடுகள், அளவீட்டுக் கோட்பாடு மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகள் மற்றும் பகுப்பாய்வு, வடிவியல் மற்றும் கணித இயற்பியல் ஆகியவற்றில் இவரது பணியின் அடிப்படை தாக்கத்திற்காகவும் இவரது முன்னோடி சாதனைகளுக்காகவும்" [13][14]
2020 ஹிலெல்லல் பர்ஸ்டென்பர்க் Hillel (Harry) Furstenberg செருமனி ஜெர்மனியர் "குழு கோட்பாடு, எண் கோட்பாடு மற்றும் காம்பினேட்டரிக்ஸ் ஆகியவற்றில் நிகழ்தகவு மற்றும் இயக்கவியலில் இருந்து முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக [15]
கிரிகோரி மார்குலிசு Grigory Margulis சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம்
2021 லசுலோ லாவோசு Laszlo Lovasz அங்கேரி ஹங்கேரியன் "கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் தனித்துவமான கணிதத்திற்கான இவர்களின் அடித்தள பங்களிப்புகளுக்காகவும், நவீன கணிதத்தின் மையத் துறைகளில் அவற்றை வடிவமைப்பதில் இவர்களின் முக்கிய பங்குக்காகவும்". [16]
அவி விக்டெர்சன் Avi Wigerson இசுரேல் இசுரேலியர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dimension-Cruncher: Exotic Spheres Earn Mathematician John Milnor an Abel Prize". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012.
  2. "The Abel Prize Laureate 2011". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 14 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012.
  3. "Hungarian-American Endre Szemerédi named Abel Prize winner". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 30 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "The Abel Prize Laureate 2012". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 16 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "The Abel Prize Laureate 2013". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2013. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)
  6. "The Abel Prize Laureate 2014". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 28 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "The Abel Prize Laureate 2015". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 16 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "The Abel Prize Laureate 2016". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 20 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Princeton University". Princeton University. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016.
  10. "300 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்து வைத்த பேராசிரியர் !". நியூசு7தமிழ் தொலைக்காட்சி. 18 மார்ச் 2016. Archived from the original on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "The Abel Prize Laureate 2017". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 26 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 21 March 2017.
  12. "The Abel Prize Laureate 2018". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 23 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Karen Uhlenbeck first woman to win the Abel Prize". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 24 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  14. Chang, Kenneth (19 March 2019). "Karen Uhlenbeck Is First Woman to Receive Abel Prize in Mathematics - Dr. Uhlenbeck helped pioneer geometric analysis, developing techniques now commonly used by many mathematicians.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/03/19/science/karen-uhlenbeck-abel-prize.html. 
  15. "The Abel Prize Laureates 2020". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 18 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. "The Abel Prize Laureates 2021". The Norwegian Academy of Science and Letters. Archived from the original on 17 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபெல்_பரிசு&oldid=3546586" இலிருந்து மீள்விக்கப்பட்டது