உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஏ. ராமதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஏ. ராமதாஸ்
கர்நாடகாவின் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர்
பதவியில்
23 செப்டம்பர் 2010 – 13 மே 2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்எம். கே. சோமசேகர்
தொகுதிகிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2008–2013
முன்னையவர்எம். கே. சோமசேகர்
பின்னவர்எம். கே. சோமசேகர்
தொகுதிகிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1994–2004
முன்னையவர்கே. எம். சோமசுந்தரம்
பின்னவர்எம். கே. சோமசேகர்
தொகுதிகிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 நவம்பர் 1959 (1959-11-04) (அகவை 64)
மைசூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)No. 1063/77, ஏ முதலாம் மெயின் ரோடு, 6வது குறுக்குத் தெரு, வித்யநாராயணபுரா, மைசூரு – 570008.[1]
வேலைஅரசியல்வாதி, சமூகப்பணி

எஸ்.ஏ. ராமதாஸ் (S. A. Ramadas) [2] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாநிலத்தில் கிருஷ்ணராஜ தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3] 2008 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபைத் தேர்தலில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ். சோமாசேகருக்கு எதிராக போட்டியிட்டு, சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பிரதான இந்து மதத் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்தல்களில் மீண்டும் அதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2004 ஆம் ஆண்டில் நடந்த தோ்தலில் எம். கே. சோமசேகரிடம் தோற்றாா்.

2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் கர்நாடகவில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் பி.எஸ். எடியுரப்பா நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010 இல், இவர் எடியுரப்பா அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவாிடம் மருத்துவக் கல்வி துறைகள் ஒப்படைக்கப்பட்டது. சதனாந்த கவுடா அரசாங்கமும் இதே பொறுப்பில் இவரை பணியாற்ற அனுமதித்தது. 2008 - 2013 மாநாட்டில் அவர் மைசூர் மாவட்டத்தில் மாவட்ட செயற்குழுவில் இருந்தார். 2013 ஆம் ஆண்டில் அவர் கிருஷ்ணராஜ தொகுதியில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்த எம்.கே. சோமசேகர் என்பவாிடம் தோற்றாா்.

மைசூர் நகரில் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள அஸ்ரே அறக்கட்டளை என்றழைக்கப்படும் தன்னார்வ அமைப்பு ஒன்றை ராம்தாஸ் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறாா்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MLA's of Karnataka". Karnataka government. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 23 February 2009.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "S a Ramadas(Bharatiya Janata Party(BJP)):Constituency- KRISHNARAJA(MYSORE) - Affidavit Information of Candidate".
  3. "Members of Legislative Assembly". sarkari.com. Archived from the original on 10 ஜனவரி 2003. பார்க்கப்பட்ட நாள் 23 February 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Prison inmates shine on stage". mysoretrendz.com. 12 July 2008. பார்க்கப்பட்ட நாள் 23 February 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._ராமதாஸ்&oldid=3928250" இலிருந்து மீள்விக்கப்பட்டது