உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபெத் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேம்
எலிசபெத் டெய்லர்
1950களின் பிற்பகுதியில் டெய்லர்
பிறப்புஎலிசபெத் ரோஸ்மண்ட் டெய்லர்
(1932-02-27)27 பெப்ரவரி 1932
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு23 மார்ச்சு 2011(2011-03-23) (அகவை 79)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்லறைகிலென்டேல், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
குடியுரிமைஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1941–2007
பிள்ளைகள்4
கையொப்பம்
வலைத்தளம்
elizabethtaylor.com

டேம் எலிசபெத் ரோஸ்மண்ட் டெய்லர் (Dame Elizabeth Rosemond Taylor) (27 பிப்ரவரி 1932-23 மார்ச் 2011) லிஸ் டெய்லர் என்றும் அறியப்படும் இவர் ஒரு ஆங்கிலோ-அமெரிக்க நடிகையாவார்.[1] 1940 களின் முற்பகுதியில் குழந்தை நடிகையாக நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தன்னுடைய நடிப்புத் திறன் மற்றும் அழகுக்காவும், அத்துடன் பல திருமணங்கள் உட்பட இவருடைய ஹாலிவுட் வாழ்க்கைப் பாணிக்காகவும் அறியப்பட்டவர். ஹாலிவுட்டின் பொற்காலங்களில் டெய்லர் மிகப் பெரிய நடிகைகளில் ஒருவராகவும், அத்துடன் நிஜவாழ்வை விட மிகப் பெரும் அளவில் புகழ்பெற்றவராகவும் கருதப்பட்டார்.1999 ஆம் ஆண்டில், அமெரிக்க திரைப்பட நிறுவனம் தனது சிறந்த பெண் திரை ஆளுமைகள் பட்டியலில் இவருக்கு ஏழாவது இடத்தை அளித்தது.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

எலிசபெத் ரோஸ்மண்ட் டெய்லர் பிப்ரவரி 27,1932 அன்று இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ஹாம்ப்ஸ்டெட் கார்டன் புறநகரில் உள்ள 8 வைல்ட்வுட் சாலையில் உள்ள ஹீத்வுட்டில் பிறந்தார்.[2][2]:3–10[3][4][5]}} பின்னர் தனது பெற்றோருடன் 7 வயதில் 1939 இல் தனது குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு குடிபெயர்ந்தார்.

திரைவாழ்க்கை

[தொகு]

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் தயாரித்த தேரீஸ் ஒன் பார்ன் எவ்ரி மினிட் (1942) என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் நிறுவனத்தின் நேஷனல் வெல்வெட் (1944) திரைப்படத்தில் தோன்றிய பின்னர் பிரபலமான நடிகையானார். 1950 களில் ஃபாதர் ஆஃப் தி ப்ரைட் (1950) நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். மேலும் ஏ பிளேஸ் இன் தி சன் (1951) என்ற படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

1955களில் டெய்லர்

எச். ஐ. வி/எய்ட்ஸ் செயல்பாடு

[தொகு]

எச். ஐ. வி/எய்ட்ஸ் செயல்பாட்டில் பங்கேற்ற முதல் பிரபலங்களில் ஒருவரான டெய்லர், 1980 களின் நடுப்பகுதியில் இருந்து 270 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்ட உதவினார்.[6] [7] [8]

வாசனைப் பொருட்கள் மற்றும் நகைகளின் விளம்பரங்கள்

[தொகு]

டெய்லர், எலிசபெத் ஆர்டன், இன்க் நிறுவனத்துடன் இணைந்து, வாசனை திரவியங்களின் விற்பனையைத் தொடங்கினார். [9][10][11] 1987 ஆம் ஆண்டில் பேஷன் மற்றும் 1991 ஆம் ஆண்டில் ஒயிட் டைமண்ட்ஸ்[12] டெய்லர் தனது பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட 11 வாசனை திரவியங்களில் ஒவ்வொன்றின் உருவாக்கம் மற்றும் உற்பத்தியை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார்.[13] தனது முழு நடிப்பு வாழ்க்கையையும் விட வாசனை திரவியங்களின் மூலம் அதிக பணம் சம்பாதித்தார்.[14]:27–37 இவரது மரணத்திற்குப் பிறகு, பிரித்தானிய செய்தித்தாள் தி கார்டியன் இவரது $600 மில்லியன்-$1 பில்லியன் சொத்து மதிப்பில் பெரும்பகுதி வாசனை திரவியங்களிலிருந்து வருவாய் இருந்தது என்று மதிப்பிட்டது.[15] 2005 ஆம் ஆண்டில், கேத்தி அயர்லாந்து மற்றும் ஜாக் மற்றும் மாண்டி அப்ரமோவ் ஆகிய நிறுவனத்துடன் இணைந்து ஹவுஸ் ஆஃப் டெய்லர் என்ற நகை நிறுவனத்தையும் டெய்லர் நிறுவினார்.[16]

இறப்பு

[தொகு]

டெய்லர் தனது வாழ்நாளின் பெரும்பகுதிக்கு உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடினார். ஸ்கோலியோசிஸ் குறைபாட்டுடன் பிறந்தார் 1944 ஆம் ஆண்டில் நேஷனல் வெல்வெட் படத்தின் படப்பிடிப்பின் போது இவரது முதுகு உடைந்தது.[17] அப்பிரச்சனை பல ஆண்டுகளாக கண்டறியப்படவில்லை. இதனால் இது இவருக்கு நாள்பட்ட முதுகுப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.[2]: 40-47

மறைவு

[தொகு]

எலிசபெத் டெய்லர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களினால் பாதிப்புக்குள்ளானார்.[18]. 2004 இல் இவருக்கு இதய நோய் ஏற்பட்டது, 2009 இல் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.[19]. மார்ச் 23, 2011 இல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகர் மருத்துவமனை ஒன்றில் தனது 79வது அகவையில் காலமானார்.[19][20].

மேற்கோள்கள்

[தொகு]
  1. - எலிசபெத் டெய்லர், தி கொலம்பியா என்சைக்ளோபீடியோ
  2. 2.0 2.1 2.2 Walker, Alexander (1990). Elizabeth: The Life of Elizabeth Taylor. Grove Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8021-3769-5.
  3. Boyce, Richard H. (April 14, 1967). "Liz Taylor Renounces U.S. Citizenship". The Pittsburgh Press. https://news.google.com/newspapers?id=s2ocAAAAIBAJ&pg=7364,5810172. 
  4. "Liz Taylor Applies To Be U.S. Citizen". Toledo Blade. February 19, 1978. https://news.google.com/newspapers?id=awxPAAAAIBAJ&pg=6365,5024920. 
  5. Wilson, Earl (June 15, 1977). "Will Liz Taylor be our First Lady?". St. Joseph Gazette. https://news.google.com/newspapers?id=HxNdAAAAIBAJ&pg=5264,3479319. 
  6. Woo, Elaine (March 23, 2011). "From the Archives: Elizabeth Taylor dies at 79; legendary actress". Los Angeles Times. https://www.latimes.com/local/obituaries/la-me-elizabeth-taylorlong-20110324-story.html. 
  7. "CNN Larry King Live: Interview with Dame Elizabeth Taylor". CNN. February 3, 2003. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  8. Collins, Nancy (November 1992). "Liz's AIDS Odyssey". Vanity Fair. https://www.vanityfair.com/news/1992/11/elizabeth-taylor-activism-aids. 
  9. Lubitz, Rachel (21 March 2018). "Why celebrity fragrances wouldn't exist without Elizabeth Taylor". Mic.
  10. Hughes, Sali (March 29, 2011). "Elizabeth Taylor: the original celebrity perfumer". The Guardian. https://www.theguardian.com/film/2011/mar/29/elizabeth-taylor-original-celebrity-perfumer. 
  11. France, Lisa Respers (March 25, 2011). "Obsessions: Elizabeth Taylor, queen of cologne". CNN. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  12. Hughes, Sali (March 29, 2011). "Elizabeth Taylor: the original celebrity perfumer". The Guardian. https://www.theguardian.com/film/2011/mar/29/elizabeth-taylor-original-celebrity-perfumer. 
  13. . 
  14. Kashner, Sam; Schoenberger, Nancy (2010). Furious Love: Elizabeth Taylor, Richard Burton, and the Marriage of the Century. JR Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907532-22-1.
  15. Kashner, Sam; Schoenberger, Nancy (2010). Furious Love: Elizabeth Taylor, Richard Burton, and the Marriage of the Century. JR Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907532-22-1.
  16. "House of Taylor Jewelry, Inc. Established Through Merger With Nurescell Inc". May 23, 2005. Archived from the original on November 17, 2015. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  17. "Elizabeth Taylor: history of health problems". த டெயிலி டெலிகிராப். March 23, 2011. Archived from the original on January 10, 2022. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  18. "Elizabeth Taylor Death Fears Return After Hospitalization - Yahoo! News". News.yahoo.com. Archived from the original on 2011-02-16. பார்க்கப்பட்ட நாள் 2011-03-23.
  19. 19.0 19.1 "Elizabeth Taylor dies aged 79". ABC News. ஏபிசி.
  20. "Hollywood Icon Elizabeth Taylor Dies at 79 - ABC News". Abcnews.go.com. 2023-03-23. பார்க்கப்பட்ட நாள் 2011-03-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_டெய்லர்&oldid=4102205" இலிருந்து மீள்விக்கப்பட்டது