உள்ளடக்கத்துக்குச் செல்

எருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எருக்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எருக்கன்
Calotropis gigantea
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Gentianales
குடும்பம்:
Apocynaceae
துணைக்குடும்பம்:
பேரினம்:
Calotropis
இனங்கள்

Calotropis gigantea - ak/akund
Calotropis procera - Apple of Sodom

எருக்கன் அல்லது எருக்கு (Calotropis) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது வெள்ளெருக்கு ஆகும். எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலமரமாக உள்ளது.

எருக்கன் செடிகள் கடும் வறட்சியிலும் வளரும் தன்மை கொண்டவை. இச் செடிகளில் பல வகைகள் உண்டு, என்றாலும் மிகுதியாகக் காணப்படுவது கத்தரிபூ நிற (நீல) எருக்கம் செடி. அதற்கடுத்து வெள்ளெருக்கு செடி ஆகும். விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர்.

பயன்கள்

[தொகு]

எருக்கன் செடி ஆதி மனிதனின் காலத்திலிருந்து பயன்பாட்டு பொருளாகவும் திகழ்ந்து உள்ளது. ஆதி மனிதன் எருக்கம் நாரைக் கயிறாகப் பயன்படுத்தியுள்ளான். எருக்கம் நார் உறுதியானது என்பதால் அதிகமாக வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சு தலையனை பயன்படுத்தும் முன்னர் எருக்கம் காயிலுள்ள பஞ்சு தலையணைக்காக பயன்படுத்தப்பட்டது.

மருத்துவ குணங்கள்

[தொகு]

இது மருத்துவ குணம் கொண்டதாக உள்ளதால் சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி மாத்திரை என்பது எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படுகிறது.

இலக்கியங்களில் எருக்கு

[தொகு]

அதர்வண வேதத்தில் எருக்கஞ்செடியைப் பற்றி கூறப்படுகிறது. ருத்ரருடன் தொடர்பு கொண்ட செடி என்பதால் இதனை “புனித செடி” என கூறுகிறது. நாரத புராணத்தில் சிவ பெருமானுக்கு எருக்கம் பால் வைத்து படைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அக்கினி புராணத்தில் மன்னர் எருக்கம் பூமாலை அணிந்து சென்றால் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. “ சிவமஞ்சரி” எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர் “எருக்கம் மலர்” என்று கூறப்படுகிறது.

சங்க காலத்திலும் இச்செடிக்கு பெயர் “எருக்கு” என்பதே. அனைத்து சங்க இலக்கிய புலவர்களும் தங்கள் பாடல்களில் ஒப்புமை கூற எருக்கஞ் செடியை பயன்படுத்தியுள்ளனர். “குறுமுகழ் எருக்காவ் கண்ணி” என நற்றிணையிலும், “குவியினார் எருக்கு” என கபிலரும், “புல்லெருக்கங்கண்ணி நறிது” என தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது. “வாட்போக்கி கலம்பகம்” எனும் நூலிலும் எருக்கம் செடியை பற்றியும் இதன் பால் கொடியது. ஆயினும் மருந்துக்கு பயன்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைகள்ப்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருக்கு&oldid=3597132" இலிருந்து மீள்விக்கப்பட்டது