எம். பி. வீரேந்திர குமார்
எம். பி. வீரேந்திர குமார் (M. P. Veerendra Kumar) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆவார். மேலும் இவர் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார். லோக்தாந்த்ரிக் ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் அக் கட்சியின் கேரள மாநில பிரிவின் தலைவராக இருந்தார். மலையாள நாளேடான மாத்ருபூமியின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். கேரளத்தின் கோழிக்கோட்டில் மாரடைப்பு காரணமாக 2020 மே 28 அன்று இவர் இறந்தார்.
வாழ்க்கை
[தொகு]இவர் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பத்மபிரபா கவுடருக்கும் மருதேவி அவ்வா இணையருக்கு மகனாக 1936 சூலை 22 அன்று கல்பற்றாவில் உள்ள ஒரு பிரபலமான சமண குடும்பத்தில் பிறந்தார். கல்பற்றாவிலும் கோழிக்கோட்டிலும் பள்ளி படிப்பபை முடித்தத்த பிறகு, மதராசில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர், முந்தைய சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் பொருளாளர் மற்றும் தேசிய குழு உறுப்பினராகவும், சோசலிஸ்ட் கட்சியின் கேரள பிரிவின் மாநில செயலாளராகவும், முந்தைய சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராகவும், கேரள எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர், முந்தைய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும், அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நெருக்கடி நிலைக் காலத்தில் இவர் கைது செய்யப்பட்டார். 1987-91 காலக்கட்டத்தில் இவர் கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1996 இல் கோழிக்கோடு தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநில அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராகவும், பின்னர் நிதி அமைச்சராகவும் செயல்பட்டார்.
படைப்புகள்
[தொகு]இவரது படைப்புகள் பின்வருமாறு:
- சமன்வாயதின்தே வசந்தம்
- புத்தந்தே சிரி
- கட்டம் கனாச்சாரடுகலம்
- ஆத்மவிலெக்கோரு தீர்த்தயாத்ரா
- பிரதிபாயுட் வெருகல் தேடி
- சங்கம்புழ: விதியுட் வெட்டம்ரிகம்
- திரிஞ்சுனொக்கும்போல்
- லோகவ்யபாரா சம்கதானாயம் ஓரக்குடுக்குக்கலம் (கட்டினு சேஷமுல்லா ஆரன்வேஷனம்)
- ரோஷாத்திண்டே விதுகல்
- ஆதினிவசந்திந்தே ஆதியோஹுகுகல்
- ஹைமாவதபூவில்
- ராமந்தேடுக்கம்
விருதுகள்
[தொகு]- வி.ஆர்.கிருஷ்ணன் எழுதச்சன் ஜன்மசாதாப்தி விருது (2009) [1]
- ஹைமாவதா பூவில் நூலுக்காக கேந்திரா சாகித்ய அகாடமி விருது (2010) [2]
இறப்பு
[தொகு]இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், மே 28, 2020 அன்று கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார். [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Minister calls for schemes to promote khadi". The Hindu online. 14 May 2009 இம் மூலத்தில் இருந்து 17 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180217092753/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Minister-calls-for-schemes-to-promote-khadi/article16596044.ece. பார்த்த நாள்: 17 February 2018.
- ↑ "Veerendra Kumar, Nanjil Nadan among Sahitya Akademi winners". தி இந்து. 21 December 2010 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101225095445/http://www.hindu.com/2010/12/21/stories/2010122165822400.htm. பார்த்த நாள்: 25 April 2014.
- ↑ https://www.deshabhimani.com/news/kerala/news-national-28-05-2020/873941