உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டாம் வேற்றுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பெயரை பெயரை வேறுபடுத்திக் காட்டுவன வேற்றுமை (தமிழ் இலக்கணம்). தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் தமிழில் வேற்றுமையை ஏழு வகையாக மட்டும் கொள்ளும் வழக்கம் இருந்தது. [1] தொல்காப்பியர் இதனை எட்டு எனக் காட்டினார். [2] எட்டாம் வேற்றுமை என எண்-வரிசையில் பெயரிடப்பட்டுள்ள இதனை விளி வேற்றுமை என இதன் செயல்பாட்டு நோக்கிலும் பெயரிட்டு வழங்கி வந்தனர். எழுவாய் வேற்றுமையில் வினையாற்றும் பெயர் அழைக்கப்பட்டு விளி கொள்ளும்போது எட்டாம் வேற்றுமையாக மாறும். [3] தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல் எட்டாம் வேற்றுமையாக மாறும் பாங்கு தனியாக 27 நூற்பாக்களில் விளக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியருக்கு முந்திய காலத்தில் விளி-வேற்றுமையைப் பெயரது விகாரம் எனக் கருதினர். [4] [5] [6]

நன்னூலானது தொல்காப்பியர் வேற்றுமை எட்டு எனக் கொண்டதை வழிமொழிகிறது. [7] விளி கொள்ளும்போது இன்னின்ன ஈற்றெழுத்துச் சொற்கள் இன்னின்னவாறு திரிந்து விளி கொள்ளும் எனக் காட்டுகிறது.

விளி [8] [9]கொள்ளும் உயிரீறு சொற்கள்

[தொகு]
திணை விகுதி [10] சொல் சேய்மை விளி
உயர்திணை [11]



[12]
[13]
[14]
[15]

நம்பி

நங்கை
கோ
வேந்து
கணி
தோழி
அன்னை

நம்பீ

நங்காய்
கோவே
வேந்தே
கணியே
தோழீஇ
அன்னா

விளி கொள்ளும் மெய்யிறுதிச் சொற்கள்

[தொகு]
  • [ன்], [ர்], [ல்], [ள்] அல்லாத மெய்யெழுத்துக்கள் விளி கொள்ளா.
  • தான், யான், நீயிர், அவன் [16], யாவன் [17] - என்பன விளி கொள்ளா.
திணை விகுதி பெயர் சேய்மை விளி அண்மை விளி
உயர்திணை அன்

ஆன்
ஆன் (தொழிற்பெயர்)
ஆன் (பண்புகொள் பெயர்)
அளபெடைப் பெயர்
முறைப்பெயர்
[ர்]
[ல்]
[ள்]

சோழன், சேர்ப்பன், ஊரன்

சேரமான், மலையமான்
உண்டான்
கரியான்
அழாஅன் [18]
மகன்
மகாஅர், சிறாஅர்
தோன்றல்
மக்கள்

சோழா, சேர்ப்பா, ஊரா

சேரமான், மலையமான் (இயல்பு)
உண்டாய்
கரியாய்
அழாஅன்
மகனே
மகாஅர், சிறாஅர்
தோன்றால்
மக்காள்

சோழ, சேர்ப்ப, ஊர

-
-
-
-
-
-
-
-

விரவுப் பெயர்கள்

[தொகு]

உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான பெயர்களை விரவுப்பெயர் என்பர்.

பெயர் விளி
சாத்தி சாத்தீ
பூண்டு [19] பூண்டே
தந்தை தந்தாய்
சாத்தன் சாத்தா
கூந்தல் [20] கூந்தால்
மகன் மகனே

விளி ஏற்கும் அஃறிணைப் பெயர்கள்

[தொகு]

'ஏ' என்னும் விளி-உருபு ஏற்று வரும். எடுத்துக்காட்டு:

பெயர் விளி
மரம் மரமே
அணில் அணிலே
நரி நரியே

சிறப்புக் குறிப்புகள்

[தொகு]
  • அம்மா சாத்தா - என்னும் தொடரில் அம்மா என்பது விளி. இது 'அம்ம' என்னும் சொல்லின் நீட்டம் [21]
  • நம்பி என்பதன் அண்மை விளி நம்பி. சேய்மை விளி நம்பீ. மிகு-சேய்மை விளி நம்பீஇ. [22]
  • தமன், தமள், தமர், நமன், நமள், நமர், நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர், எம்மான், எம்மாள், எம்மார், நும்மான், நும்மாள், நும்மார் முதலான தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் விளி ஏற்பதில்லை. [23]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வேற்றுமைதாமே ஏழ்' என மொழிப. (தொல்காப்பியம் 2-62)
  2. விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே (தொல்காப்பியம் 63)
  3. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு, தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப (தொல்காப்பியம், சொல்ல்லதிகாரம் -118)
  4. "ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
    வேறென விளம்பான் பெயரது விகாரமென்று
    ஓதிய புலவனு முளனொரு வகையான்
    இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்"

  5. அகத்தியனார் நூற்பா
  6. நன்னூல் நூற்பா 291 சங்கர நமச்சிவாயர் உரை[தொடர்பிழந்த இணைப்பு]
  7. <poe3m>ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை (நன்னூல் 291) பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை (நன்னூல் 292)</poem>
  8. பாகுபாடு தொல்காப்பியம் காட்டியுள்ள முறைமை
  9. தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் உரை மேற்கோள்கள்
  10. ஏனை உயிர்கள் விளி கொள்ளா
  11. அண்மைச்சுட்டு ஆயின் அனைத்தும் இயல்பாந் வரும்
  12. உகரம் குற்றியலுகரம்
  13. உயர்திணைப் பாங்கில் விளி கொள்ளாத பெயர்
  14. அளபெடை
  15. முறைப்பெயர்
  16. சுட்டுமுதற் பெயர்
  17. வினாவின் பெயர்
  18. அக்கினி தேவன்
  19. பாட்டனின் தந்தையாகிய பூட்டன்
  20. கூந்தலை உடையவள்
  21. தொல்காப்பியம் 2-150
  22. தொல்காப்பியம் 2-149
  23. தொல்காப்பியம் 2-151
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாம்_வேற்றுமை&oldid=3961023" இலிருந்து மீள்விக்கப்பட்டது