தொல்காப்பியர்
Appearance
தொல்காப்பியர் (திரண தூமாக் கினி)[1] | |
---|---|
பிறப்பு | திரண தூமாக் கினி கன்னியாகுமரி |
தொழில் | நூலாசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் |
தொல்காப்பியர் என்பவர் தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம்.[2] இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
தொல்காப்பியரின் காலம்
[தொகு]- தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
- தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்[3] என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது[4]' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
- தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்[5] என தமிழ் சிடடீசு என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
- வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
- "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது[6]" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
தொல்காப்பியர் விருது
[தொகு]ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் செம்மொழித் தமிழ் விருதின் ஒரு பகுதியாகத் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது.
தொல்காப்பியர் விருது பெற்றோர்.
- 2005-2006 - அடிகளாசிரியர்
- 2006-2007 - வழங்கப்படவில்லை
- 2007-2008 - வழங்கப்படவில்லை
- 2008-2009 - பேராசிரியர் சி. கோவிந்தராசனார்
- 2009-2010 - பேராசிரியர். ஐராவதம் மகாதேவன்
- 2010-2011 - பேரா. தமிழண்ணல்
- 2011-2012 - பேரா. செ.வை. சண்முகம்
- 2012-2013 - டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- 2013-2014 - முனைவர் சோ. ந. கந்தசாமி
- 2014-2015 - முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
- 2015-2016 - முனைவர் இரா. கலைக்கோவன்
முதலான தமிழறிஞர்கள் தொல்காப்பியர் விருதினைப் பெற்றுள்ளனர். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-12.
- ↑ https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html
- ↑ தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26
- ↑ சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14
- ↑ தமிழ் ஸ்டடீஸ் - எம்.சீனிவாச ஐயங்கார்.
- ↑ தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.
- ↑ "விருது". பார்க்கப்பட்ட நாள் 21-10-2021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- தொல்காப்பியர் சொல்-விளையாட்டு
- தொல்காப்பியர் காலம் - பாணினி இலக்கணம் தோன்றுவதற்கு முன்னர் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கணம் நிலவிய காலம்