உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. எசு. தென்னரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசு. எசு. தென்னரசு (S. S. Thennarasu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது இயற்பெயர் சிந்தாமணி. ஒர் எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார்.[1] 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சிறு கதை எழுத்தாளராக எசு. எசு. தென்னரசு தமிழில் பிரபலமான சிறுகதைகளை எழுதியுள்ளார். தென்னரசு எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கியுள்ளது.[3][4]

படைப்புகள்

[தொகு]
  1. அவள் ஒரு கர்நாடகம்
  2. ஆனந்தபைரவி (புதினம்)
  3. இவர்தான் கலைஞர்
  4. கண்மணி (புதினம்); 1956; அருணோதயம், சென்னை.[5]
  5. கருணைக்கு அழிவில்லை
  6. குஞ்சரத்தின் கதை (புதினம்)
  7. கோபுரக் கலசம்
  8. சந்தனத்தேவன் (புதினம்)
  9. சந்தனமழை (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[5]
  10. சுமங்கிலியின் சுயசரிதம் (புதினம்)
  11. செம்மாதுளை (புதினம்)
  12. சேது நாட்டு செல்லக்கிளி
  13. தங்கச்சி மடம் (புதினம்)
  14. தலைநகரம் (நாடகம்)
  15. தளபதி (நாடகம்)
  16. துங்கபத்திரை (நாடகம்)
  17. தேவாலயம் (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[5]
  18. தைமூரின் காதலி
  19. நகமும் சதையும் (புதினம்)
  20. பாடகி (புதினம்)
  21. பெண்ணில்லாத ஊரிலே (சிறைச்சாலை நினைவலைகள்)
  22. மயிலாடும்பாறை (புதினம்) [6]
  23. மலடி பெற்ற பிள்ளை
  24. மிஸஸ்.இராதா (புதினம்)
  25. ராஜபவனம் (புதினம்)
  26. வைராக்கியம் (புதினம்)

தொகுப்பு நூல்கள்

[தொகு]
  1. எஸ். எஸ். தென்னரசின் நாவல்கள்
  2. எஸ். எஸ். தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்

பட்டங்கள்

[தொகு]

தென்னரசிற்குப் பின்வரும் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன:

  1. சிறுகதை மன்னன்
  2. சின்னமருது
  3. இயற்செல்வம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kolappan, B. (2018-08-07), "The former Chief Minister and his canine friends", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2023-11-26
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "தமிழகம். வலை தளத்தில்,எஸ்.எஸ்.தென்னரசு எழுதிய நூல்கள்". Archived from the original on 2012-06-25. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  4. திரு.எஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  5. 5.0 5.1 5.2 திராவிடநாடு, 2-9-1956, பக்.15
  6. இனமுழக்கம், 25-11-1960, பக்.9
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._எசு._தென்னரசு&oldid=3943060" இலிருந்து மீள்விக்கப்பட்டது