உள்ளடக்கத்துக்குச் செல்

உலூர்து மலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

ஆள்கூறுகள்: 8°15′59″N 77°14′16″E / 8.266285°N 77.237657°E / 8.266285; 77.237657
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lourdes Mount College of Engineering & Technology
LMCELogoSmall.png
குறிக்கோள்Pursuit of Excellence
நிறுவப்பட்டது2013
வகைஅறக்கட்டளை, சுயநிதி
அமைவுஇந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், நத்தலம்
(8°15′59″N 77°14′16″E / 8.266285°N 77.237657°E / 8.266285; 77.237657)
வளாகம்10 ஏக்கர்கள் (0.040 km2)
பள்ளி வண்ணங்கள்uவெண்மை, நீலம்         
விளையாட்டு விளிப்பெயர்LMCE
இணையதளம்http://lourdesmountcollege.com

லூர்து மலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Lourdes Mount College of Engineering & Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் கேரள எல்லைக்கு அருகில் உள்ள ஒரு சுய நிதி பொறியியல் கல்லூரி ஆகும். இது செல்லம்மாள் கல்வி அறக்கட்டளையால் 2013 இல் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு புது தில்லியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சேர்ப்பு

[தொகு]

இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வித் திட்டங்கள்

[தொகு]

லூர்து மவுண்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கீழ்கண்ட பாடத்திட்டங்களை வழங்குகிறது.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

  • பி.இ. - குடிசார் பொறியியல்
  • பி.இ. - இயந்திரப் பொறியியல்
  • பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • பி.இ. - மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்

இருப்பிடம்

[தொகு]

இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் இடையே அமைந்துள்ளது. இது   திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

நோக்கம்

[தொகு]

நம் நாட்டின் தொழில்நுட்ப, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் துடிப்பான பொறியியல் நிபுணர்களாக உருவாக்க ஒவ்வொரு மாணவருக்கும் சாதகமான சூழலையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குதலையும் தன் நோக்கமாக கூறுகிறது.

படக்காட்சியகம்

[தொகு]

அறக்கட்டளை பற்றி

[தொகு]

செல்லம்மாள் கல்வி அறக்கட்டளையானது சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதன் அறங்காவலர்கள் நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுடன் வணிக கூட்டாண்மை கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பு வழங்கும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கும் மாணவர் சமூகத்தின் நலனுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த அறக்கட்டளை ஊக்குவித்து வருகிறது.

அறக்கட்டளை அலுவலகம் எண் 26, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை - 600 024, தமிழ்நாடு

குறிப்புகள்

[தொகு]