உர்வா
உர்வா | |
---|---|
இந்தியப் பழுப்பு கீரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உர்வா
|
மாதிரி இனம் | |
உர்வா உர்வா | |
சிற்றினம் | |
அட்டவணையினை காண்க | |
உர்வா சிற்றினப் பரம்பல்
|
உர்வா என்பது கெர்பெசுடிடே என்ற கீரி குடும்பத்தில் உள்ள ஆசிய கீரிகளை உள்ளடக்கிய ஒரு பேரினமாகும். இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு கெர்பெசுடெசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. இவை இப்போது பிரத்தியேகமாக ஆப்பிரிக்கக் கீரிகளை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. ஆசியக் கீரிகள் ஒரு ஒற்றைத் தொகுதிமரபு உயிரினத் தொகுதியினை உருவாக்குகின்றன. ஆசியக் கீரிகள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தன என்பதைத் தொகுதிப் பிறப்பு சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. உர்வா ஜெனோகேல் மற்றும் அடிலாக்சுடன் ஒரு உட்கிளையினை உருவாக்குகிறது, கெர்பெசுடெசு மற்ற அனைத்து ஆப்பிரிக்கக் கீரி இனங்களையும் உள்ளடக்கிய உட்கிளையினை உருவாக்குகிறது.[1][2]
ஒரு உர்வா புதைபடிவ மாதிரி, மேல் அரைவைப் பல், மத்திய மியான்மரில் உள்ள ஐராவதி நதி பள்ளத்தாக்கில் அகழ்வாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய காலம் பிலியோசீனின் பிற்பகுதியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
உர்வா என்ற அறிவியல் பெயர் 1836ஆம் ஆண்டில் நண்டு உண்ணும் கீரியின்[4] பெயராகவும், அடுத்த ஆண்டில் பொதுவான பெயராகவும் பிரையன் ஹூட்டன் ஹோட்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. [5] உர்வா சிற்றினங்கள் அறபுத் தீபகற்பத்திலிருந்து இந்தோனேசியத் தீவான சாவகம் வரை பரவலான காணப்படுகின்றன.[6] சிறிய இந்தியக் கீரி (உ. அவுரோபுங்டேட்டா) 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு இது ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது.[7]
சிற்றினங்கள்
[தொகு]உர்வா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:[1]
படம் | பெயர் | பரவலும் செம்பட்டியல் நிலையும் |
---|---|---|
இந்தியச் சாம்பல் கீரி (உ. எட்வர்ட்சி)(கில்லாரி, 1818)[8] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
சாவகம் கீரி (உ. சாவானிகா) (கில்லாரி, 1818) [8] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
பட்டை கழுத்து கீரி (உ. விட்டிகோலா) (பென்னட் 1835)[9] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
சிறிய இந்திய கீரி (உ. அவுரோபங்டேட்டா) கோட்ஜ்சன், 1836[4] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை (உ. உர்வா ) கோட்ஜ்சன், 1836[4] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
சிவந்த கீரி (உ. இசுமிதி) (ஜான் எட்வர்ட் கிரே, 1837 ) [10] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
குட்டை வால் கீரி (உ. பிராச்சியுரா)(கிரே , 1837 ) [10] | அச்சுறு நிலையை அண்மித்த இனம் | |
இந்திய பழுப்பு கீரி (உ. புசுகா )( வாட்டர் அவுசு, 1838 ) [11] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
காலர் கீரி (உ. செமிடோர்குவாட்டா )(கிரே, 1846 ) [12] | அச்சுறு நிலையை அண்மித்த இனம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Patou, M.; Mclenachan, P.A.; Morley, C.G.; Couloux, A.; Jennings, A.P.; Veron, G. (2009). "Molecular phylogeny of the Herpestidae (Mammalia, Carnivora) with a special emphasis on the Asian Herpestes". Molecular Phylogenetics and Evolution 53 (1): 69–80. doi:10.1016/j.ympev.2009.05.038. பப்மெட்:19520178. https://www.researchgate.net/publication/26286265.
- ↑ Zhou, Y.; Wang, S.-R.; Ma, J.-Z. (2017). "Comprehensive species set revealing the phylogeny and biogeography of Feliformia (Mammalia, Carnivora) based on mitochondrial DNA". PLoS ONE 12 (3): e0174902. doi:10.1371/journal.pone.0174902. பப்மெட்:28358848.
- ↑ Egi, N.; Nishioka, Y.; Tsubamoto, T.; Ogino, S.; Takai, M. (2011). "A mongoose remain (Mammalia: Carnivora) from the Upper Irrawaddy sediments, Myanmar and its significance in evolutionary history of Asian herpestids". Journal of Asian Earth Sciences 42 (6): 1204–1209. doi:10.1016/j.jseaes.2011.07.003. https://www.researchgate.net/publication/232411867.
- ↑ 4.0 4.1 4.2 Hodgson, B. H. (1836). "Synoptical description of sundry new animals, enumerated in the Catalogue of Nepalese Mammals". Journal of the Asiatic Society of Bengal 5 (52): 231–238. https://archive.org/details/journalofasiatic05asia/page/238/mode/1up.
- ↑ Hodgson, B. H. (1837). "On a new genus of the Plantigrades". Journal of the Asiatic Society of Bengal 6 (67): 560–565. https://biodiversitylibrary.org/item/123871#page/71/mode/1up.
- ↑ Veron, G.; Jennings, A.P. (2017). "Javan mongoose or small Indian mongoose – who is where?". Mammalian Biology 87 (1): 62–70. doi:10.1016/j.mambio.2017.05.006. https://www.researchgate.net/publication/317583330.
- ↑ Louppe, V.; Lalis, A.; Abdelkrim, J.; Baron, J.; Bed’Hom, B.; Becker, A. A. M. J.; Catzeflis, F.; Lorvelec, O. et al. (2021). "Dispersal history of a globally introduced carnivore, the small Indian mongoose Urva auropunctata, with an emphasis on the Caribbean region". Biological Invasions 23: 2573–2590. doi:10.1007/s10530-021-02523-6.
- ↑ 8.0 8.1 Geoffroy Saint-Hilaire, É. (1817). "De l'Ichneumon. Ichneumon pharaon". In Jomard, E. F. (ed.). Description de l'Égypte, ou, Recueil des observations et des recherches qui ont été faites en Égypte pendant l'éxpédition de l'armée française. Vol. Tome II. Paris: Commission des Sciences et Arts d'Egypte. pp. 137–144.
- ↑ Bennett, E. T. (1835). "Remarks on some Mammalia from Travancore, including a New Species of Herpestes". Proceedings of the Zoological Society of London III: 66–67. https://archive.org/details/lietuvostsrmoksl33liet/page/n401.
- ↑ 10.0 10.1 Gray, J. E. (1837). "Description of some or little known Mammalia, principally in the British Museum Collection". The Magazine of Natural History and Journal of Zoology, Botany, Mineralogy, Geology and Meteorology I (November): 577–587. https://archive.org/details/magazineofnatura101837loud/page/578.
- ↑ Waterhouse, G.R. (1838). "On two new species of Mammalia, from the Society's collection, belonging to the genera Gerbillus and Herpestes". Proceedings of the Zoological Society of London VI: 55–56. https://archive.org/details/proceedingsofgen36zool/page/n397/mode/2up.
- ↑ Gray, J.E. (1846). "New species of Mammalia". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology 18 (118): 211–212. https://archive.org/details/annalsmagazineof18lond/page/210/mode/2up.
வெளி இணைப்புகள்
[தொகு]- "ASM Mammal Diversity Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.