உள்ளடக்கத்துக்குச் செல்

உருசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசா
கடமான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆர்ட்டியோடேக்டைலா
குடும்பம்:
செர்விடே
பேரினம்:
உருசா

சி. எச். சுமித், 1827
இனம்:
உரையினைப் பார்க்கவும்
மாதிரி இனம்
செர்வசு யுனிகலர்

உருசா (Rusa) என்பது தெற்காசியாவைச் சேர்ந்த மான் பேரினமாகும். இவை பாரம்பரியமாக செர்வஸ் பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. மேலும் மரபணு சான்றின்படி இதனை செர்வஸ் பேரினமாகக் கருதுவதைக் காட்டிலும், தனிப் பேரினமாகக் கருதுவது பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று கூறுகிறது.[1]

உருசா பேரினத்தின் கீழ் உள்ள நான்கு சிற்றினங்களில் மூன்று பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியாவில் ஒப்பீட்டளவில் சிறிய அளவில் பரவிக் காணப்படுகின்றன. ஆனால் கடமான் கிழக்கு இந்தியா தொடங்கி வடக்கே சீனா மற்றும் தெற்கே சுந்தா பெருந் தீவுகள் வரை பரவலாகக் காணப்படுகின்றன. வசிப்பிட இழப்பு மற்றும் இவற்றின் வாழிடங்களில் வேட்டையாடுதல் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் மூன்று சிற்றினங்கள் வேறு பல இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக உள்ளன.

சிற்றினங்கள்

[தொகு]
படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
உருசா அல்பிரடி விசயன் புள்ளிமான், பிலிப்பீன்சு புள்ளிமான் பிலிப்பீன்சு
உருசா மரியானா பிலிப்பீன்சு பழுப்பு மான் அல்லது பிலிப்பீன்சு கடமான் நீக்ரோஸ்-பனே, பாபுயான்/படனேஸ், பலவான், சுலு விலங்கினப் பகுதிகள்
உருசா திமோரென்சிசு ஜாவன் உருசா அல்லது சுந்தா கடமான் இந்தோனேசியா, கிழக்கு திமோர்.
உருசா யுனிகலர் கடமான் இமயமலை, மியான்மர், தாய்லாந்து, இந்தோசீனா, மலாய் தீபகற்பம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா, ஹைனன் தீவு, தைவான் உட்பட தென் சீனா மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pitraa, Fickela, Meijaard, Groves (2004). Evolution and phylogeny of old world deer. Molecular Phylogenetics and Evolution 33: 880–895.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசா&oldid=4119344" இலிருந்து மீள்விக்கப்பட்டது