உள்ளடக்கத்துக்குச் செல்

உமையாள்புரம் உமாபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமையாள்புரம் உமாபதீசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உமையாள்புரம் அருகே கடியாப்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலின் மூலவராக உமாபதீசுவரர் உள்ளார். தம்மை வழிபடுபவர்களுக்கு மங்களத்தை அருளுவதால் இறைவி மங்களாம்பிகை எனப்படுகிறார். அம்மனுக்கு செம்பருத்தி மாலையும் கிரீடமும் அணிவிக்கின்றனர். [1]

அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்மன் சன்னதி மேற்கு நோக்கிய நிலையிலும் அமைந்துள்ளன. துவார கணபதி, துவார தண்டாயுதபாணி, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]

திருவிழாக்கள்

[தொகு]

பிரதோஷம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

[தொகு]