உத்தரப் பிரதேசத்தின் உணவு வகைகள்
உத்தரப் பிரதேசத்தின் உணவு (Cuisine of Uttar Pradesh) என்பது வட இந்தியாவில் அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு வகையான உணவுகள் ஆகும். உத்தரப் பிரதேச உணவு வகைகளில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் உள்ளன. ஒரு பெரிய மாநிலமாக இருப்பதால், உ.பி.யின் உணவுகள் அண்டை மாநிலங்களான தில்லி, உத்தராகண்டம், பீகார், சார்க்கண்டு மற்றும் அரியானாவுடன் நிறைய உணவுகள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[1] பூர்வீக உணவுகளைத் தவிர, முகலாய, அவதி மற்றும் போஜ்புரி ஆகிய கலாச்சார உணவு வகைகளும் இம்மாநிலத்தின் பிரபலமான உணவு வகைகளாகும்.
வெதுப்பி
[தொகு]கோதுமை மாநிலத்தின் முக்கிய உணவாக இருப்பதால், வெதுப்பி (ரொட்டி) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. வெதுப்பி பொதுவாகத் தட்டையானவை. வெதுப்பி வெவ்வேறு வகையான மாவுகளால் செய்யப்படலாம். பல்வேறு முறைகளில் தயார் செய்யப்படலாம். பிரபலமான வெதுப்பிகளில் தந்தூரி நாண் (நான் தந்தூரில் சுடப்படும்), தந்தூரி ரோட்டி, குல்ச்சா, தப்தான், ஷீர்மல், உரோமாலி ரொட்டி, பூரி, பராத்தா, தினை (தினை மாவு தட்டைப்பயிறு), லிட்டி, கச்சோரி லச்சா பராத்தா மற்றும் பூரி ரோட்டி முதலியன.
பொதுவான உணவு
[தொகு]- பிரியாணி
- பூந்தி
- சாட்
- டம் வெண்டி (வறுத்த முழு ஓக்ராவை மசாலா உருளைக்கிழங்கு நிரப்புதல்)
- முட்டை கறி
- கோப்தா
- குர்மா
- லாட்பாட்
- லிட்டி சோக்கா
- மட்டன் பிரியாணி
- நிஹாரி
- பக்கோரா
- பாலக் பனீர்
- பசண்டா கபாப் (எலும்பு இல்லாத ஆட்டிறைச்சி)
- பசண்டா பனீர் (பனீர் மக்கானி போன்றது)
- பூரி
- பச்சடி
- ராஜ்மா
- கொண்டைக்கடலை கறி
- சமோசா
- ஷாப் டிக் (குங்குமப்பூவுடன் கூடிய குளிர்கால உணவு, டர்னிப்ஸ் மற்றும் மட்டன் உருளை)
- கல்மி கபாப்
- சமி கபாப் (பச்சை மாங்காய்)
- சோகன் அல்வா
- ஆக்ரா பேடா (போஜ்புரி பகுதிகளில் பாதுபாக் என்று அழைக்கப்படுகிறது)
- தெக்ரி (மசாலா மற்றும் கலந்த காய்கறிகளுடன் கூடிய சைவ அரிசி உணவு)
பாரம்பரிய இனிப்புகள்
[தொகு]- பாலுஷாஹி
- பர்பி
- சேனா
- காரட் அல்வா
- கேவர்
- குஜியா
- குலாப் ஜாமூன்
- அல்வா
- ஜாங்கிரி
- ஜிலேபி
- முந்திரி பர்பி
- கலகண்ட்
- பாயசம் (கீர்)
- குல்ஃபி
- இலட்டு
- மால்புவா
- பேடா
- ஆக்ரா பேடா
- ராப்ரி
- ரசமலாய்
- சுத்த கோர்மா
- தெகுவா
பானங்கள்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "10 Best Recipes From Uttar Pradesh". NDTV. 25 October 2013. Archived from the original on 28 October 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Uponline.in பரணிடப்பட்டது 6 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்</link>
- Food.indif.com பரணிடப்பட்டது 2008-10-19 at the வந்தவழி இயந்திரம்