உத்தமி பெற்ற ரத்தினம்
உத்தமி பெற்ற ரத்தினம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | இ. இராதாகிருஷ்ணன் |
கதை | ஆரூர்தாஸ் (வசனம்) |
இசை | டி. சலபதி ராவ் |
நடிப்பு | கே. பாலாஜி மாலினி எம். என். ராஜம் டி. ஆர். இராமச்சந்திரன் ப. கண்ணாம்பா |
ஒளிப்பதிவு | சி. வி. மூர்த்தி |
படத்தொகுப்பு | எம். ஏ. திருமுகம் எம். ஜி. பாலு ராவ் எம். ஏ. மாரியப்பன் |
கலையகம் | விஜயா-வாகினி கலையகம் |
விநியோகம் | அமரா புரடக்சன்சு |
வெளியீடு | 1960 |
ஓட்டம் | 149 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உத்தமி பெற்ற ரத்தினம் 1960-ஆம் ஆன்டில் வெளிவந்த தமிழ், குடும்ப, நாடகத் திரைப்படம் ஆகும். எம். ஏ. திருமுகம் இதனை இயக்கியிருந்தார்.[1] திரைக்கதை, வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, சி. சலபதி ராவ் இசையமைத்திருந்தார். கே. பாலாஜி, மாலினி, ப. கண்ணாம்பா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். குலதெய்வம் ராஜகோபால், மனோரமா நகைச்சுவை வேடங்களில் நடித்தனர்.[2]
திரைக்கதை
[தொகு]கதை பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையிலான பிரச்சினைகளைக் கூறுகிறது. பணக்காரனின் மகள் ஏழைப் பையனைக் காதலிக்கிறாள், அவனது தந்தை பணக்காரனிடம் வேலை செய்கிறான்.[1]
நடிப்பு
[தொகு]- கே. பாலாஜி
- மாலினி
- டி. ஆர். இராமச்சந்திரன்
- எம். என். ராஜம்
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- ப. கண்ணாம்பா
- எஸ். வி. சுப்பையா
- பண்டரிபாய்
- நாகேஷ்
- குலதெய்வம் ராஜகோபால்
- மனோரமா
- பி. டி. சம்பந்தம்
- சாண்டோ சின்னப்பா தேவர்
- சி. பி. கிட்டன்
பாடல்கள்
[தொகு]தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி சுப்பு ஆறுமுகம் ஆகியோர் பாடல்களை இயற்ற டி. சலபதி ராவ் இசையமைத்திருந்தார். டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, பி. லீலா, பி. சுசீலா, ஜிக்கி, எஸ். ஜானகி ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.[3]
இல. | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீலம் (நி:செ) |
---|---|---|---|---|
1 | "அண்ணன் மனம் போலே" | எஸ். ஜானகி | தஞ்சை இராமையாதாஸ் | 03:50 |
2 | "லல்ல லல்ல லல்லல்லா" | ஏ. எல். ராகவன் - எஸ். வி. பொன்னுசாமி | தஞ்சை இராமையாதாஸ் | 03:25 |
3 | "பூவின்றி மணமேது" | டி. எம். சௌந்தரராஜன் - பி. லீலா | அ. மருதகாசி | 02:50 |
4 | "ஆசையாலே மாடப்புறா" | டி. எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா | அ. மருதகாசி | 03:34 |
5 | "அன்னம்மா என்னம்மா சொல்லுறே" | எஸ். சி. கிருஷ்ணன் - ஜிக்கி | தஞ்சை இராமையாதாஸ் | 03:10 |
6 | "இருக்கக் கொஞ்சம் இடம்" | டி. எம். சௌந்தரராஜன் | தஞ்சை இராமையாதாஸ் | 04:54 |
7 | "தேடிடுதே வானமிங்கே" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | அ. மருதகாசி | 03:04 |
8 | "தேடிடுதே வானமிங்கே" | பி. சுசீலா | அ. மருதகாசி | 02:38 |
9 | "ஆடலும் பாடலும்" | எஸ். ஜானகி | தஞ்சை இராமையாதாஸ் |
வரவேற்பு
[தொகு]முக்கிய நடிகர்கள், சிறந்த வசனம், சிறந்த பாடல்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், வழக்கமான திரைக்கதை காரணமாக இத்திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Randor Guy (2 August 2014). "Blast form the Past - Utthami Petra Rathinam 1960". "தி இந்து". Archived from the original on 27 January 2017. Retrieved 2016-09-22.
- ↑ "Uthami Petra Rathinam". spicyonion. Retrieved 2016-09-22.
- ↑ G. Neelamegam. Thiraikalanjiyam - Part 1 (in Tamil). Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. p. 192.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)