ஆரூர்தாஸ்
ஆரூர்தாஸ் | |
---|---|
பிறப்பு | யேசுதாஸ் 10 செப்டம்பர் 1931 திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை மாகாணம், இந்தியா (இன்றைய தமிழ்நாடு) |
இறப்பு | 20 நவம்பர் 2022 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 91)
மற்ற பெயர்கள் | ஆரூரான் |
பணி | கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர் |
பெற்றோர் | சந்தியாகு ஆரோக்கியமேரி |
வாழ்க்கைத் துணை | லூர்து மேரி |
பிள்ளைகள் | தாரா, உசா, ஆசா ரவிச்சந்திரன் |
விருதுகள் | கலைமாமணி விருது கவிஞர் வாலி விருது (2016) மக்கள் கவிஞர் விருது |
ஆரூர் தாஸ் (Aaroor Dass, 10 செப்டம்பர் 1931 – 20 நவம்பர் 2022) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர் ஆவார்.[1] இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.
திருவாரூரில் 10. செப்டம்பர் 1931 இல் பிறந்தவர் இவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் யேசுதாஸ். யேசுதாஸ் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ் எஸ் எல் சி தேர்சி பெற்றார். பின்னர் தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்றார்.[2] தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர் தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]என். டி. ராமராவ், அஞ்சலிதேவி நடித்த தெலுங்கு படம் நாட்டியதாரா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அந்த படத்திற்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இராமையாதாஸ் ஏற்றிருந்தார். அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு ஆரூர்தாசைக் கொண்டே அவர் வசனம் எழுதவைத்தார்.[3] மொழிமாற்று படங்களின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனம் எழுதும் கலையைக் கற்றுத் தேர்ந்த பிறகு 1957 இல் வெளியான கேதி (Qaidi) என்ற படத்தை மகுடம்காத்த மங்கை என்ற பெயரில் தனியொருவராக தமிழாக்கம் செய்தார். இப்படத்தில் தான் வசனம் என்ற இடத்தில் ஆரூர்தாஸ் என்ற இவரது பெயர் முதன்முதலில் இடம்பெற்றது.[3]
மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருத்த ஆரூர் தாசை ஏ. எல். நாராயணன் தன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். அவரிடம் ஆரூர்தாஸ் நேரடி தமிழ்ப் படங்களுக்கு உரையாடல் எழுதும் கலையைக் கற்றார். ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்து 1957 இல் வெளியான நேரடி தமிழ்ப படமான சௌபாக்கியவதி படத்தின் பல காட்சிகளை ஆரூர்தாசைக் கொண்டு உரையாடல் எழுதவைத்தார். அப்படத்தின் உதவி இயக்குநராகவும் ஆரூர்தாஸ் பணியாற்றினார். ஆரூர்தாசின் திறமையைக் கண்ட ஜெமினி கணேசனும், சாவித்திரியும் அவரை சிவாஜி கணேசனிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் வழியாக பாசமலர் படத்திற்கு உரையாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி கணேசனின் 28 படங்களுக்கு உரையாடல் எழுதினார்.[3] அவற்றில் படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வமகன், அன்னை இல்லம் போன்ற படங்கள் குறிப்பிடதக்கன. அத்தனைப் படங்களும் பெரும் வெற்றியை ஈட்டின.
உரையாடல் ஆசிரியராக மட்டுமே இருந்த இவரை எம். எம். ஏ. சின்னப்பா தேவர் வாழவைத்த தெய்வம் படத்தின் வழியாக கதை வசனம் எழுதும் வாய்ப்பை முதலில் அளித்தார்.[3] அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேவர் பிலிம்சின் ஆஸ்தான கதை வசன ஆசிரியராக ஆனார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ம. கோ. இராமச்சந்திரன் நடுத்த தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத் தலைமகன், குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி போன்ற படங்களுக்கு கதை, உரையாடல் எழுதி மா. கோ. இராமச்சந்திரனின் அன்புக்குப் பாத்திரமானார். அன்றைய தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த அனைத்து முன்னணி திரைப்பட நிறுவனங்களின் திரைப்படங்களிலும் பணியாற்றினார்.[3]
படித்த பெண் (1956) என்ற படத்தில் என். எல். கானசரஸ்வதி பாடிய ‘வாழ்வினிலே காணேனே இன்பம்’ என்ற பாடலை இவர் எழுதியுள்ளார்.
திரைப்படவியல்
[தொகு]இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
எழுத்தாளராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | நடிகர் | குறிப்பு | |
---|---|---|---|---|
1954 | நாட்டிய தாரா | என். டி. ராமராவ், அஞ்சலிதேவி | தெலுங்கி இருந்து மொழிமாற்றபட்ட இப்படத்திற்கு தஞ்சை இராமையாதாசுடன் இணைந்து உரையாடல் எழுதினார். | |
1957 | கேதி | சுரேஷ், பத்மினி | கேதி என்ற இந்தித் திரைப்படத்தின் மொழிமாற்று திரைப்படம் மகுடம்காத்த மங்கை என்ற பெயரில் வெளியானது | |
1957 | சத்தியவான் சாவித்திரி | நாகேஸ்வர ராவ் | ||
1958 | சிம்போ | ஆசாத், சித்ரா | சிம்போ என்ற இந்தித் திரைப்படத்தின் மொழிமாற்று திரைப்படம் அதே பெயரில் வெளியானது | |
1959 | வாழவைத்த தெய்வம் | ஜெமினி கணேசன் | நேரடி தமிழ் அறிமுகப் படம் | [4] |
1959 | நள தமயந்தி | பானுமதி ராமகிருஷ்ணா | ||
1960 | உத்தமி பெற்ற ரத்தினம் | |||
1961 | பாசமலர் | சிவாஜி கணேசன் | ||
1961 | கொங்கு நாட்டு தங்கம் | சி. எல். ஆனந்தன் | ||
1961 | தாய் சொல்லைத் தட்டாதே | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1962 | குடும்பத்தலைவன் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1962 | பார்த்தால் பசி தீரும் | சிவாஜி கணேசன் | ||
1962 | படித்தால் மட்டும் போதுமா | சிவாஜி கணேசன் | ||
1962 | தாயைக்காத்த தனயன் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1963 | அன்னை இல்லம் | சிவாஜி கணேசன் | ||
1963 | நீதிக்குப்பின் பாசம் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1963 | பார் மகளே பார் | சிவாஜி கணேசன் | ||
1963 | பரிசு | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1964 | தொழிலாளி | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1964 | புதிய பறவை | சிவாஜி கணேசன் | ||
1964 | வேட்டைக்காரன் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1965 | ஆசை முகம் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1965 | இதயக்கமலம் | ரவிச்சந்திரன் | ||
1965 | காக்கும் கரங்கள் | எஸ். எஸ். ராஜேந்திரன் | ||
1965 | காட்டு ராணி | எஸ். ஏ. அசோகன் | ||
1965 | தாழம்பூ | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1966 | அன்பே வா | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1966 | பெற்றால்தான் பிள்ளையா | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1966 | தாலி பாக்கியம் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1966 | தனிப்பிறவி | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1967 | இரு மலர்கள் | சிவாஜி கணேசன் | ||
1967 | தாய்க்குத் தலைமகன் | ம. கோ. இராமச்சந்திரன் | ||
1967 | தங்கை | சிவாஜி கணேசன் | ||
1969 | அக்கா தங்கை | ஜெய்சங்கர் | ||
1969 | அன்பளிப்பு | சிவாஜி கணேசன் | ||
1969 | தெய்வமகன் | சிவாஜி கணேசன் | ||
1971 | பிராப்தம் | சிவாஜி கணேசன் | ||
1974 | பணத்துக்காக | சிவாஜி கணேசன் | ||
1976 | பத்ரகாளி | சிவகுமார் | ||
1977 | அவன் ஒரு சரித்திரம் | சிவாஜி கணேசன் | ||
1978 | வணக்கத்திற்குரிய காதலியே | இரசினிகாந்து | ||
1979 | நான் வாழவைப்பேன் | சிவாஜி கணேசன், இரசினிகாந்து | ||
1979 | பட்டாகத்தி பைரவன் | சிவாஜி கணேசன் | ||
1983 | சுமங்கலி | சிவாஜி கணேசன் | ||
1984 | நிரபராதி | மோகன் | ||
1984 | ஓசை | மோகன் | ||
1984 | உன்னை நான் சந்தித்தேன் | சிவகுமார் | ||
1984 | விதி | மோகன் | ||
1984 | மைடியர் குட்டிச்சாத்தான் | மைடியர் குட்டிச்சாத்தான் மலையாளப்படத்தின் மொழி மாற்று | ||
1985 | பந்தம் | சிவாஜி கணேசன் | ||
1985 | மங்கம்மா சபதம் | கமலகாசன் | ||
1985 | பூ ஒன்று புயலானது | விஜயசாந்தி | விஜயசாந்தி நடித்த பிரதிகட்டனா தெலுங்குத் திரைப்படத்தின் மொழிமாற்று | |
1986 | மருமகள் | சுரேசு, ரேவதி | ||
1986 | விடுதலை | இரசினிகாந்து | ||
1987 | அன்புள்ள அப்பா | சிவாசி கணேசன், நதியா | ||
1987 | வைராக்கியம் | பிரபு | ||
1987 | குடும்பம் ஒரு கோவில் | சிவாசி கணேசன் | ||
1989 | இதுதாண்டா போலீஸ் | மரு இராசசேகர் | அங்குசம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று | |
1989 | மன்னிக்க வேண்டுகிறேன் | மரு இராசசேகர் | யமபாசம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று | |
1990 | வைஜெயந்தி ஐ.பி.எஸ். | விசயசாந்தி | கர்த்தவ்யம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று | |
1992 | அசோகன் | மோகன்லால் | யோத்தா மலையாளப் படத்தின் மொழிமாற்று | |
1993 | எவனா இருந்தா எனக்கென்ன | மரு இராசசேகர் | ஆக்ரஹம் தெலுங்கு படத்தின் மொழிமாற்று | |
1994 | வாட்ச்மேன் வடிவேலு | சிவகுமார் | ||
1995 | தி கிங் | மம்முட்டி | தி கிங் மலையாளப் படத்தின் மொழிமாற்று | |
2001 | பாப்பா | வெங்கடேசு | தேவி புத்துருடு தெலுங்கு படத்தின் மொழிமாற்று | |
2004 | அன்பு சகோதரன் | அர்சுன் | புட்டின இண்டிக்கி ரா செல்லி தெலுங்கு படத்தின் மொழிமாற்று | |
2014 | தெனாலிராமன் | வடிவேலு |
இயக்குநராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | நடிகர் | குறிப்பு | |
---|---|---|---|---|
1967 | பெண் என்றால் பெண் | ஜெமினி கணேசன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மாற்றியமைத்த விதி ஆரூர் தாஸ்". 11 August 2014. Archived from the original on 13 August 2014. Retrieved 18 May 2019.
- ↑ ‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை, திரூ பாரதி, இந்து தமிழ், 2020 சூன் 5
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "அஞ்சலி: ஆரூர்தாஸ், வசனங்கள் வழியே ஒரு வரலாறு!". Hindu Tamil Thisai. Retrieved 2023-01-08.
- ↑ Randor Guy (11 March 2013). "Blast from the Past — Vaazhavaitha Deivam 1959". தி இந்து. Retrieved 18 May 2019.