உள்ளடக்கத்துக்குச் செல்

உசிலைமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசிலைமணி
பிறப்புசுப்ரமணியன் ஐயர்
1934 (1934)
தமிழ்நாடு, மதுரை, உசிலம்பட்டி
இறப்பு(1996-05-14)14 மே 1996
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965-1991
பெற்றோர்தந்தை : கிருஷ்ணன் ஐயர்
தாயார் : சுப்புலட்சுமி
வாழ்க்கைத்
துணை
மீனாட்சி
பிள்ளைகள்மகன் : ராஜூ
மகள் : சாந்தி

உசிலை மணி (Usilai Mani) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார். இவர் சுமார் 1000 படங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள் எங்க ஊரு காவல்காரன், ஆயுள் கைதி போன்றவை ஆகும். இவரது பிரபலமான உரையாடலாக 'பேஷ் ... பேஷ் ... ரொம்ப நன்னாயிருக்கு... என்ற நரசுஸ் காபியின் விளம்பரம் 1980 கள் மற்றும் 1990 களில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவரது இயற்பெயர் சுப்ரமணியன் ஐயர். இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணன் ஐயர்–சுப்புலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பின்பு தனது அண்ணனுடன் மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டி ஓட்டல் வியாபாரம் செய்து வந்தனர். பின்பு இவரது ஊர்ப் பெயரையும் சேர்த்து சுருக்கமாக உசிலை மணி என்று அழைக்கப்பட்டார் .[1]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இயல்பான முறையில் நடிப்பவர் உசிலை மணி. யானை போன்ற இவரது உருவமே சிரிப்பை வரவழைக்ககூடியது. தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்திருந்தாலும், இவர் 1000 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி முதல் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விசயகாந்து, மோகன் போன்ற நடிகர்கள் வரை அதாவது மூன்று தலைமுறை நடிகர்களுடன் நகைச்சுவை நடிகராக நடித்தார்.[2]

இறப்பு

[தொகு]

1993 இல் இவர் சில மாதங்கள் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் இவரது இரண்டு கால்களும் அகற்றப்பட்டன. இதன் பின்னர், இவர் தன் நடிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். 14. 5. 1996 அன்று இவர் தனது 62 ஆம் வயதில் காலமானார். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.[3]

திரைப்படவியல்

[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1960 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1965 திருவிளையாடல்
1966 செல்வம்
1966 மகாகவி காளிதாஸ் கவிஞர்
1966 சாது மிரண்டால்
1966 வாலிப விருந்து
1966 பெற்றால்தான் பிள்ளையா ஐயர்
1967 காவல்காரன் நோயாளி
1968 கல்லும் கனியாகும்
1968 கணவன்
1968 ஒளி விளக்கு
1968 கண்ணன் என் காதலன் போலி ஜோதிடர்
1968 சோப்பு சீப்பு கண்ணாடி
1968 ஜீவனாம்சம்
1968 நாலும் தெரிந்தவன்
1968 அன்று கண்ட முகம்
1968 ரகசிய போலீஸ் 115
1969 காவல் தெய்வம்

1970 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1970 மாட்டுக்கார வேலன்  
1970 காலம் வெல்லும்
1970 கண்மலர்
1970 பாதுகாப்பு
1971 குமரிக்கோட்டம்
1971 ஆதி பராசக்தி
1971 சவாலே சமாளி
1971 ரிக்சாகாரன்
1971 நீரும் நெருப்பும்
1971 தெய்வம் பேசுமா
1972 திருநீலகண்டர்
1972 நீதி
1972 ராமன் தேடிய சீதை
1972 என்ன முதலாளி சௌக்கியமா
1972 அகத்தியர்
1972 ஜக்கம்மா
1972 நம்ம வீட்டு தெய்வம்
1973 சொல்லத்தான் நினைக்கிறேன்
1973 மணிப்பயல்
1973 நத்தையில் முத்து
1973 பொன்னூஞ்சல்
1973 மறுபிறவி
1974 எங்கம்மா சபதம்
1974 பிள்ளைச்செல்வம்
1974 அன்புத்தங்கை
1974 உரிமைக்குரல்
1974 பிராயசிர்த்தம்
1974 டாக்டரம்மா
1974 அக்கா
1975 மாலை சூடவா
1975 புது வெள்ளம்
1975 இதயக்கனி
1975 பிஞ்சு மனம்
1976 கணவன் மனைவி
1976 முத்தான முத்தல்லவோ
1976 உழைக்கும் கரங்கள்
1977 சொல்லு கண்ணா சொல்லு
1978 காற்றினிலே வரும் கீதம்
1978 சட்டம் என் கையில்
1978 அதிரிஷ்டக்காரன்
1978 இவள் ஒரு சீதை
1978 புண்ணிய பூமி
1978 ஜெய்க்கானே ஜனிச்சவன் மலையாளம்
1979 இனிக்கும் இளமை
1979 நான் வாழவைப்பேன்
1979 கவரிமான்
1979 பட்டாகத்தி பைரவன்
1979 திசை மாறிய பறவைகள்

1980 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 பில்லா
1980 பாமா ருக்மணி
1980 எல்லாம் உன் கைராசி
1980 திரையம் தீரவம் மலையாளம்
1980 அன்புக்கு நான் அடிமை
1981 சஞ்சரி மலையாளம்
1982 சிம்லா ஸ்பெஷல்
1982 தனிக்காட்டு ராஜா
1982 பரிச்சைக்கு நேரமாச்சு
1982 அயிரம் முத்தங்கள்
1983 உயிருள்ளவரை உஷா
1983 சிவப்பு சூரியன்
1983 தங்கைக்கோர் கீதம்
1983 அபூர்வ சகோதரிகள்
1983 சமயபுரத்தாலே சாட்சி
1984 உறவை காத்த கிளி
1984 அன்புள்ள ரஜினிகாந்த்
1984 நிரபராதி
1984 தராசு
1984 நினைவுகள்
1985 ஓரு மலரின் பயனம்
1985 உயர்ந்த உள்ளம்
1985 உதயகீதம்
1985 கன்னிராசி
1985 ஆண்பாவம்
1986 முதல் வசந்தம்
1986 மைதிலி என்னை காதலி
1986 அறுவடை நாள்
1986 தழுவாத கைகள்
1987 ஆனந்த்
1987 எங்க ஊரு பாட்டுக்காரன்
1988 என் தங்கை கல்யாணி
1988 ராசவே உன்னை நம்பி
1988 எங்க ஊரு காவல்காரன்
1988 பாசப் பறவைகள்
1988 நெத்தியடி

1990 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1990 பாட்டாளி மகன்
1990 பாலைவன பறவைகள்
1990 ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்
1990 மைக்கேல் மதன காமராஜன்
1990 புதுப்பாடகன்
1991 ஆயுள் கைதி (திரைப்படம்)
1991 நம்ம ஊரு மாரியம்மா (திரைப்படம்)
1991 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
1991 பொண்டாட்டி பொண்டாட்டிதான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Usilai" Moni". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
  2. "Exclusive biography of #Usilaimani and on his life". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
  3. "நினைத்துப் பார்க்கிறேன் | கலைமகள் | Kalaimagal | tamil weekly supplements". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசிலைமணி&oldid=4125968" இலிருந்து மீள்விக்கப்பட்டது