உகாண்டாவில் இந்து சமயம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Location_Uganda_AU_Africa.svg/190px-Location_Uganda_AU_Africa.svg.png)
![]() |
உகாண்டாவில் இந்து சமயம் (Hinduism in Uganda), பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் உகாண்டா இருந்த போதே இந்து சமயம் உகாண்டாவில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.[1][2]இந்திய விடுதலைக்கு முன்னர் குஜராத்திகள், ஜெயினர் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட 32,000 பணியாளர்களை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தையும், உகாண்டாவுடன் இணைக்கும் இருப்புப் பாதைகள் அமைக்கவும்,[3][4]மற்றும் கட்டுமாணப் பணிகளுக்காகவும், நிர்வாகப் பணிகளுக்காவும் பிரித்தானியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[1][2][5]
பிரித்தானியா காலனியாதிக்கத்திலிருது விடுதலை பெற்ற பின் ஆட்சிக்கு வந்த அதிபர் இடி அமீன் ஆட்சியில், புதிய சட்டத்தின் மூலம், 1972ல் இந்துக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[3][4][6]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2015ஆம் மதிப்பீட்டின்படி, உகாண்டா நாட்டில் ஏறத்தாழ் 3,55,497 (0.93%) இந்து சமயத்தவர்கள் உள்ளனர்[7][8]
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1970 | 65,000 | — |
2015 | 3,55,497 | +446.9% |
ஆதாரம்: [9][10] |
ஆண்டு | % | உயர்வு |
---|---|---|
1970 | 0.69% | - |
2015 | 0.93% | +0.24% |
இடி அமீன் ஆட்சியில் வெளியேற்றப்பட்ட இந்துக்களும், மற்றவர்களும்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Idi_Amin_-Archives_New_Zealand_AAWV_23583%2C_KIRK1%2C_5%28B%29%2C_R23930288.jpg/140px-Idi_Amin_-Archives_New_Zealand_AAWV_23583%2C_KIRK1%2C_5%28B%29%2C_R23930288.jpg)
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர், உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமீன், 1972ல் இந்திய இந்துக்கள், ஜெயினர்கள், பஞ்சாபியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களின் வேலை மற்றும் அனைத்து உடமைகளைப் பறித்துக் கொண்டு, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[11][12][13][14][15][16][17][18]
இடி அமீனுக்குப் பின்னர்[தொகு]
இடி அமீனால் இந்துக்கள் வெளியேற்றப்பட்ட 20 ஆண்டு காலத்திற்குப் பின்னர், உகாண்டா அரசு இந்திய சமூகத்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. உகாண்டாவின் 27 மில்லியன் மக்கள் தொகையில், ஆசிய நாட்டவர்களில் 65% இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆவார்.[3] உகாண்டாவின் கம்பாலா நகரத்தில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது.[19]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Sushil Mittal; Gene Thursby (2009). Studying Hinduism: Key Concepts and Methods. Routledge. pp. 87–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-41829-9.
- ↑ 2.0 2.1 Kim Knott (2016). Hinduism: A Very Short Introduction. Oxford University Press. pp. 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-874554-9.
- ↑ 3.0 3.1 3.2 Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. pp. 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5.
- ↑ 4.0 4.1 Malory Nye (2013). A Place for Our Gods: The Construction of an Edinburgh Hindu Temple Community. Routledge. pp. 48–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-78504-7.
- ↑ David Levinson; Karen Christensen (2003). Encyclopedia of Community: From the Village to the Virtual World. Sage Publications. p. 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-2598-9.
- ↑ David S. Fick (2002). Entrepreneurship in Africa: A Study of Successes. Greenwood Publishing. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56720-536-7.
- ↑ "Uganda, Religion And Social Profile". thearda.com.
- ↑ The ARDA website, retrieved 2023-08-08
- ↑ Kim Knott (2016). Hinduism: A Very Short Introduction. Oxford University Press. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-106271-1.
- ↑ "Uganda, Religion And Social Profile". thearda.com.
- ↑ Steven Vertovec (2013). "Chapter 4". The Hindu Diaspora: Comparative Patterns. Taylor & Francis. pp. 87–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-36712-0.
- ↑ Ndlovu-Gatsheni, Sabelo J.; Ndhlovu, Finex (2013). Nationalism and National Projects in Southern Africa: New Critical Reflections. Africa Institute of South Africa. pp. 62–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7983-0395-8.
- ↑ Ronald Aminzade (2013). Race, Nation, and Citizenship in Postcolonial Africa: The Case of Tanzania. Cambridge University Press. pp. 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-43605-3.
- ↑ John E. Roemer; Woojin Lee; Karine van der Straeten (2007). Racism, Xenophobia, and Distribution: Multi-issue Politics in Advanced Democracies. Harvard University Press. pp. 147–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-02495-3.
- ↑ Harold G. Coward; John R. Hinnells; Raymond Brady Williams (2012). The South Asian Religious Diaspora in Britain, Canada, and the United States. State University of New York Press. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-9302-1.
- ↑ M.G. Vassanji (2012). No New Land. McClelland & Stewart. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55199-707-0.
- ↑ John S. Pobee (1976). Religion in a Pluralistic Society. BRILL Academic. pp. 40–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04556-2.
- ↑ E. Khiddu-Makubuya, Victoria Miriam Mwaka and P. Godfrey Okoth (1994). Uganda, thirty years of independence, 1962–1992. Makerere University Press. p. 243.
- ↑ BAPS Shri Swaminarayan Mandir, BAPS Swaminarayan Sanstha, Africa
மேலும் படிக்க[தொகு]
- Steven Vertovec (2013). The Hindu Diaspora: Comparative Patterns. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-36712-0.
- Richard Carver (1990). Where Silence Rules: The Suppression of Dissent in Malawi. Human Rights Watch. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-929692-73-9.