ஈமியூ எண்ணெய்
ஈமியூ எண்ணெய் அல்லது ஈமு எண்ணெய் (Emu oil) என்பது ஈமியூ பறவையின் கொழுப்புத் திசுவிலிருந்து பெறப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும். இது ஆத்திரேலியாவில் காணப்படும் பறக்கமுடியாத பறவை ஈமியூ சிற்றினமான டுரோமையசு நோவேஹோலண்டியே இலிருந்து பெறப்படுகிறது.[1] [2]
கலப்படமற்ற ஈமியூ எண்ணெய், ஈமியூ உணவு மற்றும் சுத்திகரிப்பு முறை(கள்) ஆகியவற்றைப் பொறுத்து, வெள்ளை நிற நுரையிலிருந்து மஞ்சள் திரவமாக ஈமியூவின் உணவிற்கு ஏற்ப மாறுபடும்.[3] தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்பட்ட ஈமியூ எண்ணெயில் குறைந்தபட்சம் 70% நிறைவுறா கொழுப்பமிலங்களால் ஆனது. இதில் அதிக அளவில் காணப்படுவது ஒலிக் அமிலம், ஒற்றை ஒமேகா -9 கொழுப்பு அமிலம் ஆகும். ஈமியூ எண்ணெயில் சுமார் 20% லினோலெயிக் அமிலம் (ஒமேகா -6 கொழுப்பு அமிலம்) மற்றும் 1-2% லினோலெனிக் அமிலம் (ஒமேகா -3 கொழுப்பு அமிலம்) உள்ளன.[4] முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஈமியூ எண்ணெய் மென்மையான சுவையுடையது.
ஈமியூ எண்ணெய் முன்னர் புற்றுநோய் மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு வகையான மனித நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்ற கூற்றுடன் உணவு குறை நிரப்பியாக தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது.[5]
ஆராய்ச்சி
[தொகு]2015ஆம் ஆண்டில் இரண்டு ஆய்வுகள் மனிதனில் நடந்துள்ளன. இதில் ஓர் ஆய்வு தோல் உலர்ந்து போவதைத் தடுத்து ஈரமாக வைத்திருப்பது குறித்தும், மற்றொன்று பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது.[6]
வணிக ரீதியான துணை உணவாக ஈமியூ எண்ணெய் தரப்படுத்தப்படுத்தாமலும் ஆற்றலில் அளவில் பரவலாக வேறுபாட்டுடன் காணப்படுகிறது.[7] அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2009-ஆம் ஆண்டில் "சுகாதார மோசடியை எப்படிக் கண்டுபிடிப்பது" என்ற கட்டுரையில் ஈமியூ எண்ணெய்களை முன்னிலைப்படுத்தியதோடு, "தூய ஈமியூ எண்ணெய்த்" தயாரிப்புகள் அங்கீகரிக்கப்படாத மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ American Emu Association FAQ
- ↑ Devantier, Alecia T; Carol, Turkington (2006). Extraordinary Jobs in Agriculture and Nature. Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5854-9.
- ↑ American Emu Association - Definition of emu oil grades
- ↑ "Emu Oil Trade Rule 103" (PDF).
- ↑ 5.0 5.1 Kurtzweil, Paula (April 30, 2009). "How to Spot Health Fraud". அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 33 (6): 22–6. பப்மெட்:10628313. https://www.fda.gov/Drugs/EmergencyPreparedness/BioterrorismandDrugPreparedness/ucm137284.htm. பார்த்த நாள்: June 29, 2009.
- ↑ "Review on emu products for use as complementary and alternative medicine". Nutrition 31 (1): 21–7. January 2015. doi:10.1016/j.nut.2014.04.004. பப்மெட்:25441585.
- ↑ "Emu oil(s): A source of non-toxic transdermal anti-inflammatory agents in aboriginal medicine". Inflammopharmacology 6 (1): 1–8. 1998. doi:10.1007/s10787-998-0001-9. பப்மெட்:17638122.