இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜனவரி 5 1967 அன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்ற போது உருவாக்கப்பட்டதாகும். இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்க மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபவரீதியான அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். கூட்டுத்தாபனத்தின் முதல் இயக்குனராக நெவில் ஜயவீர நியமிக்கப்பட்டார்.[1][2][3]
வானொலி சேவைகள்
[தொகு]இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்நாட்டு ஒலிபரப்புக்காக ஆறு தொடர்ச்சியான பண்பலை (எஃப்.எம்.) சேவைகளை நடத்தி வருகின்றது. அவையாவன:
- சிங்கள சுதேச சேவை
- தமிழ் தேசிய சேவை
- ஆங்கில சேவை
- சிட்டி எஃப்.எம்.
- வெளந்த சேவய (சிங்கள வர்த்தக சேவை)
- தென்றல் (தமிழ் வர்த்தக சேவை)
- யாழ் சேவை என்பனவாகும்.
இதில் முதல் மூன்று சேவைகளும் பொதுவான சிங்கள, தமிழ், ஆங்கில நேயர்களுக்காக ஒலிபரப்பப்பட்டாலும் நான்காவது சேவை வாலிபர்களுக்கன விசேட சேவையாகும். கடைசி மூன்று சேவைகளும் தற்கால நிகழ்வுகளுடன் வர்த்தக நோக்கங்களுக்காகவும் ஒலிபரப்பப்படுகின்றது. இவ்வாறு சேவைகளுக்கு மேலதிகமாக விளையாட்டுச் சேவை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது மாத்திரம் நாடு முழுவதும் ஒலிபரப்பப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, பிரதேச நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இ.ஒ.கூ. நான்கு பிரதேச ஒலிபரப்புகளையும் நடத்தி வருகின்றது.
வெளிநாட்டு நேயர்களுக்காக இ.ஒ.கூ. அலைவீச்சு மட்டிசைக்கப்பட்ட (ஏ.எம்.) சேவைகளை மத்திய மற்றும் சிற்றலை வரிசைகளில் நடத்தி வருகின்றது. இவை தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென்-மேற்கு ஆசிய பிரதேசங்களுக்கு ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஒலிபரப்பாகின்றன. தென்னிந்தியாவுக்கு ஒலிபரப்புவதற்கான தனிப்பட்ட சேவைகளும் காணப்படுகின்றது.
தமிழ் ஒலிபரப்பாளர்கள்
[தொகு]- எஸ். பி. மயில்வாகனம்
- வீ. சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்)
- ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
- வீ. ஏ. கபூர்
- எஸ். புண்ணியமூர்த்தி
- எஸ். குஞ்சிதபாதம்
- எஸ். கே. பரராஜசிங்கம்
- சற்சொரூபவதி நாதன்
- கே. எஸ். ராஜா
- பி. எச். அப்துல் ஹமீட்
- விமல் சொக்கநாதன்
- சரா இம்மானுவேல்
- சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்
- ராஜேஸ்வரி சண்முகம்
- பி. விக்னேஸ்வரன்
- ஜோர்ஜ் சந்திரசேகரன்
- எஸ். நடராஜசிவம்
- எஸ். எழில்வேந்தன்
- ஜோக்கிம் பெர்னாண்டோ
- மயில்வாகனம் சர்வானந்தா
- கலிஸ்டா லூக்கஸ்
- புவனலோஜினி நடராஜசிவம்
- செல்வம் பெர்ணான்டோ
- கமலினி செல்வராஜன்
- அருந்ததி சிறீரங்கநாதன்
- ரேலங்கி செல்வராஜன்
- நடேச சர்மா
- எஸ். நடராஜன்
- வீ. என். மதியழகன்
- நாகபூஷணி கருப்பையா
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reference to Edward Harper, the Father of Broadcasting in Ceylon (World Music Central)". Archived from the original on 10 செப்டெம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டெம்பர் 2008.
- ↑ "Radio SEAC Ceylon (Radio Heritage Foundation)". பார்க்கப்பட்ட நாள் 27 September 2008.
- ↑ "When Ceylon ruled the airwaves". Archived from the original on 19 December 2008. பார்க்கப்பட்ட நாள் 27 September 2008.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)