உள்ளடக்கத்துக்குச் செல்

நாக‌பூஷணி க‌ருப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாக‌பூஷிணி க‌ருப்பையா கண்டி மாவட்டத்தில் கம்பளை நகரில் பிறந்தவர் ஆவார். நாவல் நகர் கதிரேசன் கல்லூரியில் உயர் தரம் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு கலைமாணி பட்டமும், கொலோம்போ பல்கலைக்கழகத்தில் இதழியல் தொழிற்கல்வியும் பயின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபன கல்விச்சேவையில் தயாரிப்பாளராகக் கடமையாற்றி, தற்போது முதல் தர அறிவிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.மேலும் இவர் சிறந்த பாடலாசிரியரும் கூட மாலேசியாவில் சிறந்த பாடலாசியருக்கான இரண்டாம் பரிசினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது பல மெல்லிசை பாடல்களை இயற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவர் செய்தி வாசிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வசந்தம் தொலைகாட்சியில் தூவானம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற அரச விருதினையும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு சிறந்த அறிவிப்பாளர் மற்றும் சிறந்த செய்தி வாசிப்பாளர் என்று இரட்டை விருதுகளை வென்றார்.

2018 ல் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச வானொலி விருதை பெற்று இருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக‌பூஷணி_க‌ருப்பையா&oldid=3002711" இலிருந்து மீள்விக்கப்பட்டது