இலங்கையின் வண்ணாத்திப் பூச்சிகள்
இலங்கையின் வண்ணத்துப்பூச்சிகள் எனும் இக்கட்டுரை 245 வகை வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தாயகமாகவுள்ள இலங்கையின் வண்ணத்துப்பூச்சி வளங்களைப் பற்றி விளக்குகிறது. இவற்றில் 23 வகைகள் இத்தீவுப் பகுதிக்குரியவையாகும்.[1] இவ் 245 வகைளில் 76 வகைகள் தேசியளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. இவற்றில் இலங்கை இளஞ்சிவப்பு அழகி ஆபத்தாக அருகிவரும் உயிரினமாக குறிப்பிடப்படுகிறது.[2]
பொது விளக்கம்
[தொகு]அதிகளவான இனங்கள் மலையடிவாரங்களில் (3,000 அடி (910 மீ) உயரத்திற்கு மேல்) காணப்படுகின்றன. சிறிதளவான இனங்கள் 4,000 அடிக்கு (1,200 மீ)மேல் காணப்படும் அதேவேளை 20 இனங்கள் கீழ் உலர் வலயத்திற்கு (500 அடி (150 மீ) உயரத்திற்குக் கீழ்) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வருடத்தில் இரு பருவகாலங்கள் இவற்றின் எண்ணிக்கையில் உச்ச காலங்களாகும். இவற்றில் பங்குனி முதல் சித்திரை வரையான தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் முதலாவதும், புரட்டாதி முதல் ஐப்பசி வரையான வடகீழ் பருவக்காற்றுக் காலம் இரண்டாவதுமாகக் காணப்படுகிறது.
குடும்ப அடிப்படையில் வண்ணாத்திப் பூச்சிகள் இனங்கள்:[2]:53
குடும்பம் | இனம் |
---|---|
அழகிகள் Papilionidae | 15 |
வெள்ளையன்கள் Pieridae | 27 |
வரியன்கள் Nymphalidae | 69 |
நீலன்கள் Lycaenidae | 86 |
தாவிகள் Hesperiidae | 46 |
Riodinidae | 1 |
புதிய இனங்கள்
[தொகு]2008 இல் கலாநிதி. மைக்கல் வன் டேர் பூர்டென் ஒரு புதிய இலங்கை வண்ணாத்திப் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்தார். 60 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இனமான இது Catopsilia scylla அடையாளம் காணப்பட்டது.[3]
பகுதிக்குரிய இனங்கள்
[தொகு]பெரும்பான்மையான பகுதிக்குரிய இனங்கள் ஈர வலய காடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.[2]இலங்கை அழகி எனும் இனம் இலங்கையில் காணப்படும் பெரிய இனங்களில் ஒன்றான இவை சிங்கராஜக் காட்டில் அதிகம் காணப்படுகின்றன.[4]
பொதுப் பெயர் | உயிரியற் பெயர் |
---|---|
Ceylon Tree-Nymph | Idea iasonia |
Ceylon Tiger | Parantica taprobana |
Ceylon Palmfly | Elymnias singhala |
Ceylon Treebrown | Lethe daretis |
Ceylon Forester | Lethe dynsate |
Cingalese Bushbrown | Mycalesis rama |
Jewel Four-ring | Ypthima singala |
Blue Oak Leaf | Kallima philarchus |
Ormiston's Oakblue | Arhopala ormistoni |
Ceylon Cerulean | Jamides coruscans |
Milky Cerulean | Jamides lacteata |
Woodhouse's Four Lineblue | Nacaduba ollyetti |
Pale Ceylon Six Lineblue | Nacaduba sinhala |
Green's Silverline | Spindasis greeni |
Clouded Silverline | Spindasis nubilus |
Ceylon Indigo Royal | Tajuria arida |
Ceylon Hedge Blue | Udara lanka |
Lesser Albatross | Appias galene |
One Spot Grass Yellow | Eurema andersonii |
Ceylon Rose | Pachliopta jophon |
Common Birdwing | Troides darsius |
Black Flat | Celaenorrhinus spilothyrus |
Decorated Ace | Halpe decorata |
மூலம்: srilankaninsects.net[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Butterflies of Sri Lanka". srilankaninsects.net. Archived from the original on 2012-04-30. பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.
- ↑ 2.0 2.1 2.2 Perera, W.P.N. & Bambaradeniya, C.N.B. (2006). "Species richness, Distribution and Conservation Status of Butterflies in Sri Lanka". In Bambaradeniya, Channa N. B. (ed.). The fauna of Sri Lanka: status of taxonomy, research, and conservation (illustrated ed.). Colombo, Sri Lanka: IUCN. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8177-51-2. பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Hopman, Tahnee (February 24, 2008). "Lanka gets new butterfly". The Sunday Times. http://sundaytimes.lk/080224/Plus/plus00002.html. பார்த்த நாள்: 2009-11-07.
- ↑ "Nature's jewels at Sinharaja". Sunday Observer. November 27, 2005 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606002337/http://www.sundayobserver.lk/2005/11/27/juniorob05.html. பார்த்த நாள்: 2009-11-07.
- Channa N.B. Bambaradeniya E. 2006. The fauna of Sri Lanka : status of taxonomy, research, and conservation Colombo, The World Conservation Union (IUCN) [1] பரணிடப்பட்டது 2012-02-24 at the வந்தவழி இயந்திரம்
- D’Abrera, B.L. (1998) The Butterflies of Ceylon. Hill House: Melbourne; London. 224pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-947352-35-X
- Henry, G. M. R., Woodhouse, L. G. O. (1942) The Butterfly Fauna of Ceylon. Colombo ; Ceylon. 153pp.
- Moore, F. C. (1880–87) The Lepidoptera of Ceylon. L. Reeve & Co. : London. 3 v.
- Ormiston, W. (1924) The butterflies of Ceylon Colombo, H. W. Cave
- Pethiyagoda, R. (1998) The family de Alwis Seneviratne of Sri Lanka: pioneers in biological illustration. Journal of South Asian natural history. Vol.4, pp. 99–110.