இர்டிஷ் ஆறு
இர்டிஷ் ஆறு (Irtysh River, மொங்கோலியம்: Эрчис мөрөн , எர்ச்சிஸ் மாரன்,[1] "erchleh", "twirl"; உருசியம்: Иртыш ; காசாக்கு மொழி: Ертіс , Ertis, هرتىس ; சீன :额尔齐斯河, பின்யின் : É'ěrqísī hé, சியாவோஜிங்: عَعَرٿِسِ حْ; உய்குர்: إيرتيش, Әртиш, எர்டிஷ்; தடர்: சிரிலிக் Иртеш, லத்தீன் ஆர்டே, அரபு ﻴﺋرتئش, சைபீரிய தடர்: Эйәртеш, ஐயார்டெஸ் ') என்பது உருசியா, சீனா மற்றும் கஜகஸ்தானில் பாயும் ஒரு ஆறாகும். இது ஓப் ஆற்றின் பிரதான துணை ஆறாகும்.
இந்த ஆற்றின் மூலமானது மங்கோலியாவின் எல்லைக்கு அருகில் உள்ள துங்காரியாவில் (சீனாவின் சிஞ்சியாங்கின் வடக்கு பகுதி) மங்கோலியன் அல்தாயில் உள்ளது.
இர்டிஷ் முக்கிய துணை ஆறுகளில் டோபோல் நதி, டெமியங்கா நதி மற்றும் இஷிம் நதி ஆகியவை அடங்கும். ஒப்-இர்டிஷ் அமைப்பானது ஆசியாவில் ஒரு பெரிய வடிநில படுகையை உருவாக்குகிறது, இது மேற்கு சைபீரியச் சமவெளி மற்றும் அல்தாய் மலைகளை உள்ளடக்கியது.
நிலவியல்
[தொகு]காரா-இர்டிஷ் (பரந்த இர்டிஷ், காரா என்பது துருக்கிய மொழிகளில் மிகப் பெரியது என்பதாகும், ஆனால் கருப்பு என்றும் பொருள் உண்டு. ஆனால் சூழலில் மற்றும் புவியியல் சொற்கள் பொதுவாக மிகப் பெரியது என்தையே குறிப்பிடுகின்றன) சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள மங்கோலியன் அல்டே மலைகளில் இருந்து, இர்டிஷ் கஜகஸ்தானில் உள்ள ஜாய்சன் ஏரி வழியாக வடமேற்கே பாய்கிறது, மேற்கு சைபீரியாவில் காந்தி- மான்சிஸ்க் அருகே ஓப் உடன் இணைவதற்கு முன்பு இஷிம் மற்றும் டோபோல் நதிகளை இணைத்துக் கொள்கிறது.
கறுப்பு இர்டிஷ் (கசாக் மொழியில் காரா-இர்டிஷ், மற்றும் உருசிய மொழியில் செர்னி இர்டிஷ் ) என்ற பெயர் சில எழுத்தாளர்களால், குறிப்பாக ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில், ஆற்றின் மேல் பாதையில், அதன் மூலத்திலிருந்து ஜெய்சன் ஏரிக்குள் நுழைவதுவரை குறிப்பிடப்படுகிறது. பிளாக் இர்டிஷை என்ற சொல்லுக்கு மாறாக, வெள்ளை இர்டிஷ் என்ற சொல், ஜெய்சன் ஏரிக்கு கீழே உள்ள இர்டிஷ் ஆற்றைக் குறிக்க கடந்த காலத்தில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டது;[2] இப்போது இந்த பயன்பாடு பெரும்பாலும் வழக்கற்றுப் போய்விட்டது.
பொருளாதார பயன்பாடு
[தொகு]கஜகஸ்தான் மற்றும் ரஷ்யாவில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பனி இல்லாத பருவத்தில் எண்ணைக் கப்பல்கள், பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்கள் ஆற்றில் பயணிக்கின்றன. அரசுக்கு சொந்தமான இர்டிஷ் ரிவர் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கும் ஓம்ஸ்க் மேற்கு சைபீரியாவின் மிகப்பெரிய ஆற்றுத் துறைமுகமாக செயல்படுகிறது.
இந்த ஆற்றின் கஜகஸ்தான் பிரிவில் தற்போது மூன்று பெரிய நீர் மின் நிலையங்கள் உள்ளன, அவை பக்தர்மா, உஸ்ட்- காமெனோகோர்ஸ்க் மற்றும் ஷல்பின்ஸ்க் ஆகியவை ஆகும். உலகின் மிக ஆழமான மடை, 42 மீட்டர்கள் (138 அடி) ஆழத்தில் செல்கிறது. இது , உஸ்ட்-கமெனோகோர்ஸ்கில் உள்ள அணையை கடந்து சென்று நதி போக்குவரத்தை தடைசெய்யாமல் அனுமதிக்கிறது.[3] இன்னும் பல அணைகள் இதன் குறுக்கே கட்ட திட்டங்கள் உள்ளன.
சீனப் பகுதியில் பாயும் இர்டிஷ் ஆற்றுப் பகுதியில் மூன்று அணைகள் கட்டப்பட்டு வருகின்றன: கெகெட்டுஹோய் (可可托海) அணை ( 47°10′51″N 89°42′35″E / 47.18083°N 89.70972°E ), கலாசுகே (喀腊塑克) அணை ( 47°08′14″N 88°53′15″E / 47.13722°N 88.88750°E ),[4][5] மற்றும் திட்டம் 635 அணை என்பதாகும். மேலும் இர்டிஷின் வலது துணை ஆறான புர்கின் ஆற்றின் குறுக்கே புர்கின் சோங்குயர் அணை மற்றும் புர்கின் ஷாங்கோ அணைகளும், மற்றும் துணை ஆறான ஹபா ஆற்றின் குறுக்கே ஜிலேபுலேக் அணை மற்றும் யமகுச்சி அணை ஆகியவை உள்ளன .
1960 கள் மற்றும் 1970 களில் சோவியத் ஒன்றியத் திட்டமிடுபவர்கள் மற்றும் அறிவியலாளர்களால் பரவலாக விவாதிக்கப்பட்ட வடக்கு நதி புறமாற்ற திட்டங்களானது, மத்திய கஜகஸ்தான் மற்றும் உசுபெக்கிசுத்தான் நீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு இர்டிஷின் (மற்றும் ஓபின்) சில பகுதிகளுக்கு தண்ணீரை அனுப்பும் திட்டங்களாகும்.[6] இந்த பிரம்மாண்டமான நதிநீர் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், 1962 மற்றும் 1974 க்கு இடையில் ஒரு சிறிய இர்டிஷ்-கராகண்டா கால்வாய் வறண்ட கசாக் புல்வெளிகளிலுக்கும், நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றான கராகண்டாவிற்கும் நீர் வழங்குவதற்காக கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டில், கால்வாயிலிருந்து இஷிம் நதி மற்றும் கஜகஸ்தானின் தலைநகரான நூர்-சுல்தானுக்கு நீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Secret History of the Mongols
- ↑ Abramof 1865, and the map before p. 65.
- ↑ "Waterways World: Latest". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "Xinjiang Kalasuke 140MW Hydroelectric Project".
- ↑ 考察调研组专家考察在建的喀腊塑克水利枢纽工程 (A group of experts visits the Kalasuke Dam), 2010-08-05
- ↑ Skornyakova, V. A.; Timasheva, I. Ye. (1980), "The possible environmental impact of the anti-Irtysh and problems of rational nature management", Soviet Geography, pp. 638–644, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00385417.1980.10640361
{{citation}}
: Missing or empty|url=
(help)