உள்ளடக்கத்துக்குச் செல்

இரோசெச்டர், நியூ யோர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரோசெச்டர், நியூ யோர்க்
நகரம்
(மேலிருந்து கீழ், இடதிலிருந்து வலது) இரோசெச்டர் நகர்மையம் வான்காட்சி, உயர்ந்தருவி, இரோசெச்டர் பல்கலைக்கழகத்தில் ரஷ் ரீசு நூலகம், கோடாக் கோபுரம், டைம்சு சதுக்கக் கட்டிடம், மிட்டவுன் பிளாசா
(மேலிருந்து கீழ், இடதிலிருந்து வலது) இரோசெச்டர் நகர்மையம் வான்காட்சி, உயர்ந்தருவி, இரோசெச்டர் பல்கலைக்கழகத்தில் ரஷ் ரீசு நூலகம், கோடாக் கோபுரம், டைம்சு சதுக்கக் கட்டிடம், மிட்டவுன் பிளாசா
அலுவல் சின்னம் இரோசெச்டர், நியூ யோர்க்
சின்னம்
அடைபெயர்(கள்): "மாவு நகரம்", "பூக்களின் நகரம்", "உலகின் படிம மையம்",
குறிக்கோளுரை: இரோசெச்டர்: வாழ்வதற்காக உருவானது
நியூ யோர்க் மாநிலம், மன்றோ மாவட்டத்தில் அமைவிடம்.
நியூ யோர்க் மாநிலம், மன்றோ மாவட்டத்தில் அமைவிடம்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்நியூ யோர்க் மாநிலம்
மாவட்டம்மன்றோ
நிறுவனம்1788
நகரம்ஏப்ரல் 28, 1834
அரசு
 • வகைமேயர் - நகரமன்றம்
 • நகரத் தந்தைலவ்லி வாரன் ()
 • நகர மன்றம்
உறுப்பினர் பட்டியல்
பரப்பளவு
 • நகரம்37.1 sq mi (96.1 km2)
 • நிலம்35.8 sq mi (92.8 km2)
 • நீர்1.3 sq mi (3.3 km2)
ஏற்றம்
505 ft (154 m)
மக்கள்தொகை
 (2012)
 • நகரம்2,10,565 (ஐஅ: 103வது)
 • அடர்த்தி6,132.9/sq mi (2,368.3/km2)
 • நகர்ப்புறம்
7,20,572 (ஐஅ: 60வது)
 • பெருநகர்
10,82,284 (ஐஅ: 51வது)
நேர வலயம்ஒசநே-5 (கிவநே)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிபநே)
சிப் குறியீடு
146xx (14604=downtown)
இடக் குறியீடுஅழைப்பு முதலொட்டு 585
கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள்36-63000
GNIS feature ID0962684
இணையதளம்www.cityofrochester.gov

இரோசெச்டர் (Rochester, ஒலிப்பு:ரோசெஸ்டர்) ஐக்கிய அமெரிக்க மாநிலமான நியூ யோர்க்கின் மேற்கு பகுதியில் ஒண்டாரியோ ஏரியின் தென்கரையில் அமைந்துள்ள நகரமாகும். இது அமைந்துள்ள மன்றோ மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.

2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள்தொகை 210,565 ஆகும்; நியூ யோர்க் மாநிலத்தில் நியூயார்க் நகரத்தையும் பஃபலோவையும் அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகின்றது. இதனை உள்ளடக்கிய இரோசெச்டர் பெருநகரப் பகுதி மன்றோ மாவட்டத்தையும் கடந்து கெனிசீ, லிவிங்சுடன், ஒண்டாரியோ, ஓர்லியான்சு, வேய்ன் மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்தப் பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,079,671 ஆகும். 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பு இது 1,082,284ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடுகின்றது.[1]

இரோசெச்டரில் முதலில் பல மாவு மில்கள் இயங்கியதால் இது மாவு நகரம் எனப்படுகின்றது. விரைவிலேயே இது ஓர் தயாரிப்பு மையமாக மாறியது. இங்குள்ள இரோசெச்டர் பல்கலைக்கழகம், இரோசெச்டர் தொழினுட்பக் கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கின. எனவே நுகர்வுத் தயாரிப்புக்களில் பல புதுமைகளை இங்கு கண்டறிந்தனர். தொழிலக, நுகர்வு பொருட்களில் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ளும் கோடாக், போஷ் & லோம்ப், சிராக்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டன. 2010 வரை இரோசெச்டர் பெருநகரப்பகுதி நியூ யோர்க் மாநிலத்தில் இரண்டாவது பெரிய வட்டாரப் பொருளாதாரமாக விளங்கியது.[2] தற்போது இரோசெச்டரின் மொத்த உற்பத்தித் திறன் பஃபலோவினுடையதை விட ஓர்நிலைக் குறைவாக இருந்தபோதும் தனிநபர் வருமானத்தில் அதைவிடக் கூடுதலாக உள்ளது.[3]

வாழிடங்களைத் தரமிடும் பிளேசசு ரேட்டடு அல்மனாக்கின் 25ஆம் பதிப்பு 2007இல் ஐக்கிய அமெரிக்காவின் 379 பெருநகரப் பகுதிகளில் "மிகவும் வாழத்தகு நகரமாக" இரோசெச்டர் பெருநகரப் பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.[4] 2010இல் ஃபோர்ப்ஸ் குடும்பம் வளர்க்க மூன்றாவது சிறந்த நகரமாக இரோசெச்டரை தேர்ந்தெடுத்துள்ளது.[5] இங்குள்ள குறைந்த வாழ்க்கைச் செலவு, உயர்ந்த தரப் பொதுப்பள்ளிகள், தாழ்ந்த வேலையில்லா விகிதம் ஆகியவற்றைக் கொண்டு குடும்பம் நடத்த ஐந்தாவது சிறந்த இடமாக கிப்லிங்கர் மதிப்பிட்டுள்ளது.[6]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Table 1. Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: April 1, 2010 to July 1, 2012". பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  2. Daneman, Matthew, "Our manufacturing roots sprout jobs" பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம், Democrat and Chronicle (March 2, 2008) (archived copy பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்)
  3. "Gross Metropolitan Product of U.S. Metro Areas" (PDF). Archived from the original (PDF) on 16 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. ""Facts on Rochester"" (PDF). Archived from the original (PDF) on 2012-03-29. பார்க்கப்பட்ட நாள் 2016-06-28.
  5. Levy, Francesca (2010-06-07). "America's Best Places to Raise a Family". Forbes.com இம் மூலத்தில் இருந்து 2010-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100610213446/http://www.forbes.com/2010/06/04/best-places-family-lifestyle-real-estate-cities-kids.html. 
  6. "Best Cities for Families". Kiplinger. பார்க்கப்பட்ட நாள் 2012-11-12.

வெளி வலைத்தளங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோசெச்டர்,_நியூ_யோர்க்&oldid=3730841" இலிருந்து மீள்விக்கப்பட்டது