உள்ளடக்கத்துக்குச் செல்

இரெ. சண்முகவடிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெ. சண்முக வடிவேல்
2023-ஆம் ஆண்டுவாக்கில் சண்முகவடிவேல்
தலைவர்,
திருவாரூர்த் தமிழ்ச் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
>> 7 அக்டோபர் 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 ஆகத்து 1937 (1937-08-25) (அகவை 87)
நாகூர், பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
துணைவர்தையல்நாயகி
பிள்ளைகள்பரிமளா
முன்னாள் கல்லூரி
வேலைபட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர்
தொழில்தமிழாசிரியர் (ஓய்வு),
வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்
விருதுகள்தமிழ்ச்செம்மல் விருது

இரெத்தினசாமி சண்முகவடிவேல் (Re. Shanmuga Vadivel) (பிறப்பு: 25 ஆகத்து 1937) தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டிமன்றப் பேச்சாளர்[1] மற்றும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஆவார். தமிழ்நாட்டு அரசின் தமிழ்ச்செம்மல் விருது [2][3] உள்ளிட்ட விருதுகளையும் நகைச்சுவைத் தென்றல் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் நகரில் இரெ. கோவிந்தம்மாள்- ப. இரெத்தினசாமி இணையரின் மகனாக 25 ஆகத்து 1937 அன்று பிறந்தார் சண்முகவடிவேல்.

நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் பயின்றபின் சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர், முதுநிலை, மூதறிஞர் ஆகிய பட்டங்களையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டத்தையும் பெற்றார். திருவாரூர் வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அடியார்க்கு நல்லான், அம்புஜம், ஆரூர் குணா, ஆரூர் தமிழ்நாடன், கோவி லெனின், மானா பாஸ்கரன் உள்ளிட்டோர் இவரது முன்னாள் மாணவர்கள்.

1975 ஆண்டுவாக்கில் திருவாரூர் வடக்கு வீதி முருகன் கோவிலின் அறங்காவலராக இருந்த தன் நண்பர் நாகராஜனின் ஒப்புதல் பெற்று அக் கோவில் திருவிழாக்களில் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் தற்காலக் கவிதை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைப் பரப்புரை செய்தார். தன் மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தினார்.

திருவாரூர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.[4]

இவர் இணையர் பெயர் தையல்நாயகி. இவர்களுக்கு பரிமளா என்ற மகள் உள்ளார்.

படைப்புகள்

[தொகு]
  1. வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க (2007)[5] - கற்பகம் புத்தகாலயம்
  2. தமிழ் வளர்த்த சான்றோர் - கலைஞன் பதிப்பகம்
  3. நானிலம் போற்றும் நால்வர்
  4. குறள்வழிக் கதைகள்
  5. வாய்விட்டு சிரிக்கிறார் வள்ளுவர்
  6. திருக்குறள் கதை அமுதம்
  7. செவிநுகர் சுவைகள்
  8. அண்ணாவின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள்
  9. பெரியபுராணத்தில் பெண்ணின் பெருமை
  10. இருபத்தி ஓராம் நூற்றாண்டுக்கு இளங்கோவடிகள்
  11. குறுந்தொகை நலம்
  12. துளித்துளியாய் பொது அறிவு[6]

இலக்கியப் பயணங்கள்

[தொகு]

இலங்கை கம்பன் கழகம் (கொழும்பு), யாழ்ப்பாண கம்பன் கழகம் (யாழ்ப்பாணம்), பிரான்சு கம்பன் கழகம் (பாரிசு), சுவிசு திருவள்ளுவர் மன்றம் (சுவிட்சர்லாந்து), ஆத்திரேலியன் கம்பன் கழகம், சிட்னி மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல நாடுகளுக்கும் சென்று இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்.[7]

புலவர் சீனி சண்முகத்துடன் இணைந்து பல பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார்.

விருதுகளும் பட்டங்களும்

[தொகு]
ஆண்டு விருது / பட்டம் வழங்கியோர் / அமைப்பு குறிப்பு
2011 (?) நகைச்சுவைத் தென்றல் 'சொல்வேந்தர்' சுகி சிவம்,

தமிழறிஞர்கள் சோ.சத்தியசீலன், அறிவொளி, சாலமன் பாப்பையா, பேராசிரியர்கள் பா. நமச்சிவாயம், செல்வகணபதி, இராசாராம், இராசா மற்றும் வழக்கறிஞர் சுமதி உள்ளிட்டோர்

திருவாரூர் நகரில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது
நகைச்சுவை சித்தர் சுகி சிவம்
நற்றமிழ் நல்லாசான் தமிழாசிரியர் கழகம்
முத்தமிழ் முரசு குழந்தை கவிஞர் பேரவை
இலக்கிய நகைச்சுவை இமயம் புவனகிரி தமிழ் இலக்கியப் பேரவை
இராதாகிருட்டிணன் விருது கம்பன் கழகம், சென்னை
2021 தமிழ்ச்செம்மல் விருது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

(தமிழ்நாட்டு அரசு) [8][9]

21 திசம்பர் அன்று வழங்கப்பட்டது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jangir, Suresh K. (2022-12-21). "செங்கல்பட்டில் புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  2. "திருவாரூர் பட்டிமன்ற பேச்சாளருக்கு தமிழ்ச்செம்மல் விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2022/dec/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3968050.html. பார்த்த நாள்: 6 August 2023. 
  3. "தமிழ்ச்செம்மல், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்:முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/dec/21/tamil-semmal-best-translator-awards-presented-by-chief-minister-stalin-3970823.html. பார்த்த நாள்: 6 August 2023. 
  4. Editor, Tamilmani (2023-07-12). "புதுக்கோட்டையில் ஜூலை 14 முதல் 23 வரை கம்பன் பெருவிழா…". TamilMani.News. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06. {{cite web}}: |last= has generic name (help)
  5. "வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க – Vaazhkai Romba Sulabamunga – இரா. சண்முகவடிவேல் – கற்பகம் புத்தகாலயம் – Karpagam Puthakalayam" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-31.
  6. "அருணாவின் துளித்துளியாய் பொது அறிவு /டி. எம். சண்முக வடிவேல். Aruṇāvin̲ tuḷittuḷiyāy potu ar̲ivu /Ṭi. Em. Caṇmuka Vaṭivēl. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  7. "கண்ணதாசன் நினைவில் கால்நூற்றாண்டு காலமாக விழா". தினகரன். https://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/11/?fn=f1308115. பார்த்த நாள்: 6 August 2023. 
  8. தினத்தந்தி (2022-12-22). "டெல்லி பல்கலைக்கழக தமிழ் துறைக்கு ரூ.5 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  9. "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் இலக்கிய துறை தொடங்க ரூ.5 கோடி நிதி: துணைவேந்தரிடம் ஸ்டாலின் வழங்கினார்". Hindu Tamil Thisai. 2022-12-22. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெ._சண்முகவடிவேல்&oldid=4083746" இலிருந்து மீள்விக்கப்பட்டது