உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜபாளையம் (நகரம்)

ஆள்கூறுகள்: 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராஜபாளையம் (ஊர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராஜபாளையம்
—  சிறப்பு நிலை நகராட்சி  —
இராஜபாளையம்
அமைவிடம்: இராஜபாளையம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
பெருநகராட்சி தலைவர்
சட்டமன்றஉறுப்பினர் தங்கபாண்டியன்.S
சட்டமன்றத் தொகுதி இராஜபாளையம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். தங்கபாண்டியன் (திமுக)

மக்கள் தொகை 1,30,119 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


187 மீட்டர்கள் (614 அடி)


இராசபாளையம் (Rajapalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் வட்டம் மற்றும் இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.[4] மற்றும் மாவட்டத்தில் முதல் மிகப்பெரிய நகரம் ஆகும். இது மதுரையின் தென்மேற்கே 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு தென்னை, மாம்பழம் முக்கிய விவசாயம். இங்குள்ள பொருளாதாரம் விவசாயம் மற்றும் பருத்திநூல் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள அய்யனார் கோவிலுக்கு அருகாமையிலுள்ள ஆறுகள் மற்றும் திருவில்லிபுத்தூர் நகரும் ஆன்மிக சுற்றுலாவுக்கு சிறந்த இடங்களாகும்.

வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய நாட்டு நாய் இனமாகும்.

வரலாறு

[தொகு]

இங்கு 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜீக்கள் சமுதாயத்தினர் அதிக அளவு குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு ராஜீபாளையம் என பெயர் ஏற்பட்டது. பின்பு காலபோக்கில் இராஜபாளையம் என பெயர் மாறியது. வரலாற்று படி பாளையம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கோட்டைகள் இருக்கும் இடம் என்றும் பொருள்படும்.[5] பழைய பாளையம் மற்றும் புதுப்பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளது. விஜயநகர அரசர் புசாபதி சின்ன இராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் கீழஇராஜகுலராமனில் தங்கியிருந்து பின்னர் இங்கு குடிபெயர்ந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கர் கீழ் தளபதிகளாக இங்கு வந்தனர். 16,17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னரிடம் இருந்து இந்த நில பகுதியை வாங்கி இராஜபாளையம் என்ற நகரத்தை கட்டமைத்தனர். இராஜபாளையம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

துவக்கத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக இருந்தது. 1900களில் வணிக முயற்சிகள் முன்னேறத் துவங்கின. அவர்களது முயற்சியாலும் கடின உழைப்பாலும் பருத்தி சார்ந்த பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மக்கள்தொகை

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,30,119 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 64,624 ஆண்கள், 65,495 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 86.25% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.18%, பெண்களின் கல்வியறிவு 80.43% ஆகும்.மக்கள் தொகையில் 10,504 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலா

[தொகு]

இணைக்கப்பட்டுள்ள படங்கள் சஞ்சீவி மலையிலிருந்து எடுக்கப்பட்டவை. மேற்குத் தொடர்ச்சி மலை பின்னணியில் உள்ளது.

அய்யனார் கோவில்

[தொகு]
ஆறாவது மைல் அணை

மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கோவில் சுற்று வட்டாரத்தில் இருந்துதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டமைப்புக்கு தேக்கு மரங்கள் கொண்டுச் சென்றதாக வரலாறு!. இவ்விடம் ஆன்மீகம் சார்ந்த சுற்றுலாவுக்கு சிறந்தது. இங்கு ஏராளமான பாதுகாக்கப்பட்ட வனவிலங்கினங்கள் வசித்து வருவதோடு வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் ஆறாவதுமயில் என்னும் இடத்தில் பாதுகாக்கப்பட்ட இரண்டு அணைகள் உள்ளது.இந்த அணையிலிருந்து தான் நகரின் குடிநீர்த்தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

சஞ்சீவி மலை

சஞ்சீவி (Sanjeevi) என்பது மூலிகைத் தாவரங்களை உடைய, மங்கலகரமான ஒரு மலை என இராமாயணத்தில் கூறப் பட்டுள்ளது. இந்த மலை இந்துமத தர்மத்தின்படி புனிதமானதாகக் கருதப்படுகிறது. இராமாயணக் கதையின்படி, இது இலங்கைப் போரில் மயக்கமடைந்த இராமர், இலட்சுமணன் மற்றும் படையினரையும் காக்க, துரோனகிரி என்ற இடத்தில் இருந்து அனுமானால் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள மலையாகும். அனுமன் இலங்கைகக்கு செல்லும் வழியில் சில துண்டுகள் இங்கு சிதறியதாக வரலாறு. எனவே இந்த மலைக்கு சஞ்சீவி மலை என்ற பெயர் வந்தது.

இந்த மலை நகருக்கு கிழக்கு பக்கம் அமைந்துள்ளது. இந்த மலைமீது முருகன் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த மலையின் மேல் இருந்து தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சுதந்திர வேட்கையை இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களிடம் வித்திட்டனர். தற்பொழுது இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முருகன் கோவிலுக்கு செல்லும் நுழைவாயின் அடிவாரத்தில் வனத்துறையினர் கட்டுபாட்டு அலுவலகம் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

முக்கிய மேல்நிலைப் பள்ளிகள்

[தொகு]
  • பி.ஏ.சின்னையாராஜா மேல்நிலை பள்ளி.
  • பி.ஏ.சி.ஆர்.அம்மனிஅம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி.
  • சேத்தூர்.சேவக. பாண்டியர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
  • சேத்தூர்.சேவக. பாண்டியர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
  • என்.ஏ. அன்னப்பராஜா மேல்நிலை பள்ளி.
  • ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் மேல்நிலை பள்ளி.
  • ஏ.கே.டி.தர்மராஜா ஆண்கள் மேல்நிலை பள்ளி.
  • நாடார் மேல்நிலைப் பள்ளி.

முக்கிய கல்லூரிகள்

[தொகு]

முக்கிய இலக்கிய அமைப்புகள்

[தொகு]
  • சுதந்திரச் சிந்தனை
  • மாற்று வரலாற்று ஆய்வுக்களம்
  • திட்டிவாசல்
  • திருவள்ளுவர் மன்றம்
  • கம்பன் கழகம்
  • மணிமேகலை மன்றம்
  • சேக்கிழார் மன்றம்
  • நாற்று

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. இராஜபாளையம் நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. History of Rajapalayam
  6. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜபாளையம்_(நகரம்)&oldid=4070668" இலிருந்து மீள்விக்கப்பட்டது