இரண்டாம் பாஸ்கரர்
பாஸ்கராச்சாரியார் என்ற முழுப்பெயர் கொண்ட இரண்டாம் பாஸ்கரர் (Bhāskara II, கன்னடம்: ಭಾಸ್ಕರಾಚಾರ್ಯ, 1114–1185), ஒரு இந்திய வானியலாளர் மற்றும் கணிதவியலாளர். இடைக்கால இந்தியாவின் மாபெரும் கணிதவியலாளராகக் கருதப்படுகிறார்.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]பாஸ்கரர் 1114-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரில் பிறந்தார். இவர் தேசஸ்த பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர். பாஸ்கரரின் தந்தை மகேஸ்வரர் சிறந்த அரசவைப் பண்டிதராகத் திகழ்ந்தார். அவர் ஒரு சிறந்த சோதிடவியல் அறிஞரும் ஆவார். அவர் தன் மகன் பாஸ்கராவுக்கு சோதிடம் மற்றும் கணிதத்தைக் கற்பித்தார். இவர் தமது கல்வியை அக்காலத்தில் வானவியல் ஆய்வின் வளர்ப்புப் பண்ணையாகத் திகழ்ந்த உஜ்ஜயினில் பெற்றார். கணித வானவியலோடு சோதிடத்துறையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். நாளடைவில் இத் துறைகள் பற்றி நூல்கள் பல எழுதினார்.
பணிகள்
[தொகு]உஜ்ஜயினியில் வானவியல் ஆய்வுக் கூடமொன்றின் தலைவராக ஆனபின் இவரது ஆராய்ச்சிகள் புதுப் பரிமாணம் பெற்றன. இவரது படைப்பான சித்தாந்த சிரோன்மணி - லீலாவதி, பிஜகணிதம், கிரககணிதம், கோலாத்யாயம் என நான்கு பிரிவுகளை உடையது. இவரது கணித நூல்கள் சித்தாந்த சிரோமணி, காரண குதூகலா ஆகியவை இவரின் வான்கணிதத் திறமையையும் வெளிப்படுத்துபவையாகும் லீலாவதி மற்றும் பீஜ கணிதம் இவரது எண்கணித அறிவை பறைசாற்றும் நூல்களாகும். ஈர்ப்பு விசை பற்றி முதன் முதலில் எழுதியவர். இவர் எழுதிய பிறகு சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகே நியூட்டன் என்பவரால் புவியீர்ப்பு விசை கண்டறியப்பட்டது.
எண்கணிதம், இயற்கணிதம், திரிகோணமிதி, வான்கணிதம், வடிவியல் மற்றும் வானவியல் குறித்த இவரது அறிவு வியக்கத்தக்கது. எண்முறை, சமன்பாடுகளுக்கான தீர்வுகள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். மேலும் பூமி சூரியனைச் சுற்ற 365.2588 நாட்கள் ஆகிறது எனக் கணக்கிட்டு இருந்தார்.(தற்போது365.2596நாட்கள்)]] [2]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]இவர் எழுதிய லீலாவதி என்ற அரிய நூல் வியத்தகு அறிவியல் படைப்பாகப் போற்றப்படுகிறது. இலாபம்,நட்டம், வட்டி, அளவியல்,தசம எண்கள், கூட்டுத்தொடா்,பெருக்குத்தொடா், எண் கணித எட்டு அடிப்படைச்செயல்கள்,முக்கோணம், நாற்கரம், மவா்க்கமுலம்,கனமுலம்முதலான பல்வேறு தலைப்புக்கள் விாிவாக விளக்கி இருக்கிறாா். 1587 ஆம் ஆண்டு பேரரசர் அக்பர் முயற்சியால் சக்கரவர்த்தி என்பவர் இந்நூலை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். இவரது மற்றொரு நூலான சித்தாந்த சிரோமணி வானவியல் ஆராய்ச்சிகளைப் பற்றியது. இதன் ஒரு பகுதியை ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் பிறகே பாஸ்கரரின் கணித மற்றும் வானவியல் திறமைகள் வெளி உலகினருக்குத் தெரிய வந்தது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhaskara II". Archived from the original on 2017-07-29. Retrieved 2017-08-02.
- ↑ "Bhaskara II". Archived from the original on 2017-08-15. Retrieved 2017-08-02.
வெளி இணைப்புகள்
[தொகு]நூல் பட்டியல்
[தொகு]- Burton, David M. (2011), The History of Mathematics: An Introduction (7th ed.), McGraw Hill, ISBN 978-0-07-338315-6
- Eves, Howard (1990), An Introduction to the History of Mathematics (6th ed.), Saunders College Publishing, ISBN 978-0-03-029558-4
- Mazur, Joseph (2005), Euclid in the Rainforest, Plume, ISBN 978-0-452-28783-9
- Sarkār, Benoy Kumar (1918), Hindu achievements in exact science: a study in the history of scientific development, Longmans, Green and co.
- Seal, Sir Brajendranath (1915), The positive sciences of the ancient Hindus, Longmans, Green and co.
- Colebrooke, Henry T. (1817), Arithmetic and mensuration of Brahmegupta and Bhaskara
- White, Lynn Townsend (1978), "Tibet, India, and Malaya as Sources of Western Medieval Technology", Medieval religion and technology: collected essays, University of California Press, ISBN 978-0-520-03566-9
- Selin, Helaine, ed. (2008), "Astronomical Instruments in India", Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures (2nd edition), Springer Verlag Ny, ISBN 978-1-4020-4559-2
- Shukla, Kripa Shankar (1984), "Use of Calculus in Hindu Mathematics", Indian Journal of History of Science, 19: 95–104
- Pingree, David Edwin (1970), Census of the Exact Sciences in Sanskrit, vol. 146, American Philosophical Society, ISBN 9780871691460
- Plofker, Kim (2007), "Mathematics in India", in Katz, Victor J. (ed.), The Mathematics of Egypt, Mesopotamia, China, India, and Islam: A Sourcebook, Princeton University Press, ISBN 9780691114859
- Plofker, Kim (2009), Mathematics in India, Princeton University Press, ISBN 9780691120676
- Cooke, Roger (1997), "The Mathematics of the Hindus", The History of Mathematics: A Brief Course, Wiley-Interscience, pp. 213–215, ISBN 0-471-18082-3
- Poulose, K. G. (1991), K. G. Poulose (ed.), Scientific heritage of India, mathematics, Ravivarma Samskr̥ta granthāvali, vol. 22, Govt. Sanskrit College (Tripunithura, India)
- Chopra, Pran Nath (1982), Religions and communities of India, Vision Books, ISBN 978-0-85692-081-3
- Goonatilake, Susantha (1999), Toward a global science: mining civilizational knowledge, Indiana University Press, ISBN 978-0-253-21182-8
- Selin, Helaine; D'Ambrosio, Ubiratan, eds. (2001), "Mathematics across cultures: the history of non-western mathematics", Science Across Cultures, 2, Springer, ISBN 978-1-4020-0260-1
- Stillwell, John (2002), Mathematics and its history, Undergraduate Texts in Mathematics, Springer, ISBN 978-0-387-95336-6
- Sahni, Madhu (2019), Pedagogy Of Mathematics, Vikas Publishing House, ISBN 978-9353383275
மேலும் வாசிக்க
[தொகு]- W. W. Rouse Ball. A Short Account of the History of Mathematics, 4th Edition. Dover Publications, 1960.
- George Gheverghese Joseph. The Crest of the Peacock: Non-European Roots of Mathematics, 2nd Edition. Penguin Books, 2000.
- O'Connor, John J.; Robertson, Edmund F., "இரண்டாம் பாஸ்கரர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம். University of St Andrews, 2000.
- Ian Pearce. Bhaskaracharya II at the MacTutor archive. St Andrews University, 2002.
- Pingree, David (1970–80). "Bhāskara II". Dictionary of Scientific Biography 2. நியூயார்க்: Charles Scribner's Sons. 115–120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-10114-9.