இணைந்த துமுக்கி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Combination_gun_examples.svg/220px-Combination_gun_examples.svg.png)
இணைந்த துமுக்கி என்பது, குறைந்தது ஒரு புரியிட்ட குழலையும், ஒரு புரியில்லா குழலையும் கொண்டிருக்கும், வேட்டைக்கு பயன்படும் ஒரு வகையான உடைவியக்க சுடுகலன் ஆகும். ஒரு புரியிட்ட குழலையும், ஒரு புரியில்லா குழலையும் பிரயோகிக்கும் இணைந்த துமுக்கிகள், பொதுவாக மேலும்-கீழுமான வடைவமைவில் இருக்கும். பக்கம்-பக்கமான வடிவ அமைவை, கேப் துமுக்கி (ஆங்கிலம்: cape gun) என குறிக்கப்படுகிறது. மும்மை (ஆங்கிலம்: drilling (மும்மையை குறிக்கும் ஜெர்மானியச் சொல்)) என்பது, மூன்று குழல்கள் கொண்ட இணைந்த துமுக்கி ஆகும். நால்மை (ஆங்கிலம்: vierling (நால்மையை குறிக்கும் ஜெர்மானியச் சொல்)) என்பது, நான்கு குழல்களைக் கொண்டிருக்கும். விளிம்பற்ற வெடிபொதிகளை உடைவு-இயக்க ஆயுதத்தில் இருந்து அகற்றுவது சிரமம் என்பதால், பொதுவாக விளிம்புடைய வெடிபொதிகளையே இணைந்த துமுக்கிகள் பிரயோகிக்கும்.
பயன்பாடு [தொகு]
சுடுகலன்கள் வெடிபொதிகளை பிரயோக்கித்த ஆரம்ப காலங்கள் தொடங்கி; ஐரோப்பா, ஆப்ரிக்கா, மற்றும் ஆசியாவில், நீண்ட வரலாற்றைக் கொண்டவை இந்த இணைந்த துப்பாக்கிகள். இந்த துப்பாக்கிகள் பிரத்தியேக வேட்டை ஆயுதங்களாக விளங்கின.
சுடும் இயங்குநுட்பங்கள்[தொகு]
முற்கால இணைந்த துப்பாக்கிகளில் குழல் துப்பாக்கிகள் சுற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட (மரையிட்ட அல்லது மரையில்லா) குழல்கள், தீக்கல் இயக்கத்தகடுக்கு நேராக வைத்து சுடுவதற்கு ஏதுவாக இருந்தது. இவ்வகை அலையாடும் துப்பாக்கி (swivel guns) என்று அழைப்பர்.[1] இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகள் மற்றும் இரட்டை புரிதுமுக்கிகள் போன்ற தோற்றத்திலேயே நவீன இணைந்த துப்பாக்கிகளும் இருக்கும்.
வேறுபாடுகள் [தொகு]
இணைந்த துப்பாக்கிகள் [தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/10/M6_Survival_Rifle.jpg/220px-M6_Survival_Rifle.jpg)
மேலும்-கீழுமான வடிவ இணைந்த துமுக்கிகள், பொதுவாக புரியிட்ட குழலின் மேல், சிதறுதுமுக்கி (புரியில்லா) குழலை கொண்டிருக்கும். இந்த வகை துப்பாக்கியில் பொதுவாக இரும்புக் குறிநோக்கி பிரயோகிக்கப்படும்.
கேப் துப்பாக்கிகள் [தொகு]
ஐரோப்பாவில் தோன்றிய, பக்கம்-பக்கமான வடிவ அமைவு கொண்ட இணைந்த துமுக்கி தான், கேப் துப்பாக்கி ஆகும்.
மும்மைகள் [தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Klassischer_Drilling.jpg/220px-Klassischer_Drilling.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/BlaserBD98.jpg/220px-BlaserBD98.jpg)
மும்மைகள் இயல்பாக இரு ஒரேமாதிரியான சிதறுதுமுக்கிக் குழல்களும், ஒரு புரிதுமுக்கிக் குழலும் கொண்டிருக்கும், ஆனால் இவ்வகையில் மேலும் சில வடிவ அமைவுகளும் உள்ளன:[2]
- இரு ஒரேமாதிரியான புரிதுமுக்கிக் குழல்கள் மற்றும் ஒரு சிதறுதுமுக்கிக் குழல்
- இரு வெவ்வேறு கேலிபர் புரிதுமுக்கிக் குழல்கள் (அதிலும் ஒன்று விளிம்படி, மற்றொன்று நடுவடியாக இருக்கும்), மற்றும் ஒன்று சிதறுதுமுக்கிக் குழல்
- மூன்று ஒரேமாதிரியான சிதறுதுமுக்கிக் குழல்கள் (முக்குழல் சிதறுதுமுக்கி)
- மூன்று ஒரேமாதிரியான புரிதுமுக்கிக் குழல்கள் (முக்குழல் புரிதுமுக்கி)
நால்மைகள் [தொகு]
நால்மைகள் பொதுவாக, இரு ஒரேமாதிரியான சிதறுதுமுக்கிக் குழல்கள், ஒரு .22 கேலிபர் விளிம்படி புரிதுமுக்கிக் குழல், மற்றும் ஒரு நடுவடி புரிதுமுக்கிக் குழல் ஆகியனவற்றைக் கொண்டிருக்கும். நால்மைகளிலும் பலவகை வடிவமைவுகள் இருந்தாலும், அவை அரிதாகவே உள்ளன.
குறிப்புகள் [தொகு]
- ↑ "The Gunsmith's Shop: The Colonial Williamsburg Official History Site". History.org. 2009-11-05. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
- ↑ Seibt, Grundwissen Jägerprüfung, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-440-10255-6
மேற்கோள்கள் [தொகு]
- Fjestad, S. P. Blue Book of Gun Values, 13th Edition.
புற இணைப்புகள் [தொகு]
- HEYM, modern maker of combination guns, drillings, and vierlings
- Double Rifles—Reference site for Double Rifles and Drillings. Great photos, descriptions and price estimates at the time of past auctions.