ஆரப்பாளையம் புட்டு சொக்கநாதர் கோயில்
ஆரப்பாளையம் புட்டு சொக்கநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°55′57″N 78°06′40″E / 9.932490°N 78.111015°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவிடம்: | ஆரப்பாளையம் |
சட்டமன்றத் தொகுதி: | மதுரை மத்தி |
மக்களவைத் தொகுதி: | மதுரை |
ஏற்றம்: | 159 m (522 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சொக்கநாதர் |
தாயார்: | மீனாட்சி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | புட்டுத் திருவிழா (ஆவணி பூராடம்), சித்திரா பௌர்ணமி, தமிழ்ப் புத்தாண்டு, மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
ஆரப்பாளையம் புட்டு சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் மதுரை மாவட்டத்தில் ஆரப்பாளையம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் புட்டுத்தோப்பு என்றழைக்கப்பட்டது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°55′57.0″N 78°06′39.7″E / 9.932500°N 78.111028°E (அதாவது, 9.932490°N, 78.111015°E) ஆகும்.
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலின் மூலவராக புட்டு சொக்கநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி மீனாட்சி ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். கோயிலின் தீர்த்தம் வைகை ஆகும். ஆவணி பூராடம் புட்டு திருவிழா, பிரதோஷம், சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு, பௌர்ணமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]
அமைப்பு
[தொகு]இறைவன், இறைவி தனி சன்னதிகளில் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், பாலமுருகன், மணக்கோலத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர், சரசுவதி, லட்சுமி, சுந்தரானந்தர், துர்க்கை, வீரபத்திரர், சப்த கன்னியர், கல்யாண விநாயகர், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், கலிய நாயனார், அய்யப்பன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், இரட்டை கால பைரவர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.[1]