ஆம்பூர் முற்றுகை
Appearance
ஆம்பூர் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், உள்ளூர் படைகள் | ஐதராபாத் இராச்சியம் , மைசூர் மாநிலம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
கேப்டன் கால்வர்ட் | ஐதர் அலி |
ஆம்பூர் முற்றுகை (Siege of Ambur) என்பது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் நிகழ்ந்த காலத்தில், 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை தென்னிந்திய நகரமான ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப் போராகும். மைசூர் மற்றும் ஐதராபாத்து படைகள் இணைந்து ஐதர் அலியின் தலைமையில் இம்முற்றுகைப் போரில் பங்கேற்றன. பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் கால்வெர்ட் உள்ளூர் படையினரின் உதவியுடன் ஒரு சிறிய படை மூலம் முற்றுகைப் படையினரை எதிர்கொண்டு ஆம்பூர் நகரத்தை வெற்றிகரமாக பாதுகாத்துக் கொண்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.