உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க விலங்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்க விலங்கியல்
African Zoology
படிமம்:AfricanZoologycover.jpg
துறைவிலங்கியல்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்டி வாசுலர் & சி பேக்கர்
Publication details
விலங்கியல் ஆப்பிரிக்கானா, தென்னாப்பிரிக்க விலங்கியல் ஆய்விதழ்
வரலாறு1965–முதல்
பதிப்பகம்
வெளியீட்டு இடைவெளிகாலாண்டு இதழ் (இணையம்); அரையாண்டு (அச்சில்)
0.86 (2019)
Standard abbreviations
ISO 4Afr. Zool.
Indexing
ISSN1562-7020

LCCN00227123
OCLC no.44395820
Links

ஆப்பிரிக்க விலங்கியல் (African Zoology) என்பது ஆப்பிரிக்காவிற்கும் அதன் சுற்றியுள்ள பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் தீவுகளுக்கும் தொடர்புடைய விலங்கியலின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழாகும். இந்த ஆய்விதழ் தென்னாப்பிரிக்காவின் விலங்கியல் சங்கத்தால் வெளியிடப்படுகிறது. இதில் மதிப்பாய்வு, முழு நீள ஆய்வுக்கட்டுரைகள், குறுகிய தகவல்தொடர்புகள் மற்றும் புத்தக மதிப்புரைகளையும் வெளியிடுகிறது.

வரலாறு

[தொகு]

இந்த பத்திரிகை 1965ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் விலங்கியல் சங்கத்தால் விலங்கியல் ஆப்பிரிக்கானா என நிறுவப்பட்டது. இது தென்னாப்பிரிக்க விலங்கியல் ஆய்விதழ் என மறுபெயரிடப்பட்டது. 1979ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க வெளியீட்டு பணியகம் அதன் வெளியீட்டாளராக ஆனது. 2000ஆம் ஆண்டில், இந்த ஆய்விதழ் தென்னாப்பிரிக்க விலங்கியல் சங்கத்தால் தற்போதைய பெயரில் வெளியிடப்பட்டது. தற்பொழுது இந்த ஆய்விதழை டெய்லர் & பிரான்சிசு நிறுவனம் வெளியிடுகிறது. ஆண்டுக்கு 4 இதழ்கள் வெளியாகிறது.

ஆய்வுசுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்

[தொகு]

ஆப்பிரிக்க விலங்கியல் ஆய்விதழில் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் உயிரியல் சுருக்கங்கள், வேதியியல் சுருக்கங்கள், உயிரியலில் தற்போதைய முன்னேற்றங்கள், ஜியோஆப்ஸ்ட்ராக்ட்ஸ், அறிவியல் மேற்கோள் அட்டவணை மற்றும் விலங்கியல் பதிவுகள் ஆகிய மேற்கோள் தரவைப்பகங்களில் அட்டவணைப்படுத்தப்படுகிறது. பத்திரிக்கை மேற்கோள் அறிக்கையின்படி, 2019-ல் ஆப்பிரிக்க விலங்கியலின் தாக்கக் காரணி 0.86 ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_விலங்கியல்&oldid=4054488" இலிருந்து மீள்விக்கப்பட்டது