உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தக மதிப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தக மதிப்புரை அல்லது நூல் மதிப்புரை (Book review) என்பது ஒரு புத்தகத்தின் வடிவம், பாணி மற்றும் தகுதி போன்றவற்றை உள்ளடக்கிய இலக்கிய விமரிசன வகையாகும்.[1] முதனிலை ஆதாரம், கருத்துப் பகுதி, சுருக்கமான மறுஆய்வு அல்லது அறிவார்ந்த மதிப்பீடாய்வு ஒரு புத்தக மதிப்புரையாக இருக்கலாம்.[2] அச்சிடப்பட்ட பத்திரிகைகள், செய்தித்தாள்கள், பள்ளிவேலை, இணையத்தில் புத்தக வலைத்தளங்கள் ஆகியவற்றுக்காக ஒரு புத்தகம் மதிப்பாய்வு செய்யப்படலாம். ஒரு புத்தக மதிப்பீட்டின் நீளம் ஒற்றை பத்தியிலிருந்து கணிசமான கட்டுரைவரை மாறுபடலாம். தாம் கற்றதைக் காட்சிப்படுத்துவதற்காகவோ அல்லது புனைவு அல்லது அபுனைவு படைப்புகளின் மீது தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்காகவோ ஒருவர் புத்தக மதிப்பாய்வை மேற்கொள்ளலாம். புத்தக மதிப்புரைகளுக்கென்றே உள்ள பல பத்திரிகைகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Princeton (2011). "Book reviews". Scholarly definition document. Princeton. பார்க்கப்பட்ட நாள் September 22, 2011.
  2. Virginia Polytechnic Institute and State University (2011). "Book reviews". Scholarly definition document. Virginia Polytechnic Institute and State University. Archived from the original on செப்டம்பர் 10, 2011. பார்க்கப்பட்ட நாள் September 22, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தக_மதிப்புரை&oldid=3593007" இலிருந்து மீள்விக்கப்பட்டது