ஆதிரெட்டி பவானி
Appearance
ஆதிரெட்டி பவானி | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | அக்ல சத்யநாராயணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1984 or 1985 (அகவை 39–40) |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | ஆதிரெட்டி சிறீநிவாசா |
உறவுகள் | ராம் மோகன் நாயுடு (சகோதரன்) கிஞ்சராபு அச்சன் நாயுடு (உறவினர்) |
பெற்றோர் | கிஞ்சராபு எர்ரான் நாயுடு (தந்தை) |
ஆதிரெட்டி பவானி (Adireddy Bhavani) (பிறப்பு 1984 அல்லது 1985 ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக ராஜமன்றி நகர்ப்புற சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஆதிரெட்டி பவானி முன்னாள் மத்திய அமைச்சர் கிஞ்சராபு எர்ரான் நாயுடுவின் மகளும் ராம் மோகன் நாயுடுவின் சகோதரியும் ஆவார். ஐஐஎல்எம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். சட்ட மேலவை உறுப்பினரான ஆதிரெட்டி அப்பா ராவின் மகன் ஆதிரெட்டி சிறீநிவாசை மணந்தார்.[1][2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]ஆதிரெட்டி பவானி 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜமன்றி நகர்ப்புற சட்டப்பேரவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ఆంధ్రప్రదేశ్ అసెంబ్లీ ఎన్నికల్లో గెలిచిన యువత వీళ్లే" (in te). BBC News తెలుగు. https://www.bbc.com/telugu/india-48392475.
- ↑ Talari, Yadedya (6 March 2019). "TDP leader Yerram Naidu's daughter to contest from Rajamahendravaram". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
- ↑ "Adireddy Bhavani(TDP):Constituency- RAJAHMUNDRY CITY(EAST GODAVARI) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.