ஆண்ட்ரியா ஜெரெமையா
ஆண்ட்ரியா ஜெரெமையா | |
---|---|
இசை நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா ஜெரெமையா | |
பிறப்பு | ஆண்ட்ரியா ஜெரெமையா திசம்பர் 21, 1985 அரக்கோணம், இராணிப்பேட்டை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியா |
பணி | பின்னணிப் பாடகர், நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர் |
செயற்பாட்டுக் காலம் | 2007—தற்போது |
ஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார்.[1] இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
வாழ்க்கை
[தொகு]ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.[4] இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[4] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.[5][6] இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.[7]
பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு,[3] அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[6] பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கருவாகக் கொண்டது.[8] ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9] அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.[6] 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகஸ்ட் 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.[10] பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.[11]
நடிகையாக
[தொகு]வருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2005 | கண்ட நாள் முதல் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2007 | பச்சைக்கிளி முத்துச்சரம் | கல்யானி வெங்கடேஷ் | தமிழ் | பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகள் |
2010 | ஆயிரத்தில் ஒருவன் | லாவன்யா சந்திரமெளலி | தமிழ் | பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த துனை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
2011 | மங்காத்தா | சபிதா ப்ரித்விராஜ் | தமிழ் | |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2012 | புதிய திருப்பங்கள் | தமிழ் | ||
2013 | விஸ்வரூபம் | அஸ்மிதா சுப்பிரமணியம் | தமிழ் | |
2014 | அரண்மனை | மாதவி | தமிழ் | |
2017 | தரமணி | ஆல்த்தியா ஜான்சன் | தமிழ் | |
2017 | துப்பறிவாளன் | பிரிதா | தமிழ் | |
2017 | அவள் | லஷ்மி | தமிழ் | |
2018 | விஸ்வரூபம் 2 | அஸ்மிதா சுப்பிரமணியம் | தமிழ் | |
2018 | வட சென்னை | சந்திரா | தமிழ் | |
2020 | மாஸ்டர் | வானதி | தமிழ் | |
2021 | அரண்மனை 3 | ஈஷ்வரி "ராணி" | தமிழ் |
பின்னணிப் பாடகியாக
[தொகு]வருடம் | பாடல் | திரைப்படம் | மொழி | இசையமைப்பாளர் |
---|---|---|---|---|
2005 | கண்ணும் கண்ணும் நோக்கியா | அந்நியன் | தமிழ் | ஹாரிஸ் ஜயராஜ் |
2006 | வீ ஹேவ் எ ரோமியோ | பொமரில்லு | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2006 | கற்க கற்க | வேட்டையாடு விளையாடு | தமிழ் | ஹாரிஸ் ஜயராஜ் |
2006 | சர சர | ராக்கி | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2006 | கிலி | தேசமுத்துரு | தெலுங்கு | சக்ரி |
2008 | ஓஹ் பேபி ஓஹ் பேபி | யாரடி நீ மோகினி | தமிழ் | யுவன் சங்கர் ராஜா |
2008 | நேனு நீ ராஜா | கிங் | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2009 | அம்மாயிலு அப்பாயிலு | கரண்ட் | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2010 | மாலை நேரம் | ஆயிரத்தில் ஒருவன் | தமிழ் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2010 | ஓஹ் ஈசா | |||
2010 | ஏனோ ஏனோ | ஆதவன் | தமிழ் | ஹாரிஸ் ஜயராஜ் |
2010 | தீராத விளையாட்டு பிள்ளை | தீராத விளையாட்டு பிள்ளை | தமிழ் | யுவன் சங்கர் ராஜா |
2010 | இது வரை | கோவா | தமிழ் | யுவன் சங்கர் ராஜா |
2010 | பூக்கள் பூக்கும் | மதராசபட்டினம் | தமிழ் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2010 | தேடியே தேடியே | வ | தமிழ் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2010 | ஹூ இஸ் த ஹீரோ? | மன்மதன் அம்பு | தமிழ் | தேவி ஸ்ரீ பிரசாத் |
2010 | நா பேரே மல்லீஸ்வரி | சையி ஆட்டா | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2011 | எனக்காக உனக்காக | காதல் 2 கல்யானம் | தமிழ் | யுவன் சங்கர் ராஜா |
2011 | நோ மணி நோ ஹனி | வானம் | தமிழ் | யுவன் சங்கர் ராஜா |
2011 | திவாலி தீபானி | தாதா | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2011 | காதலிக்க | வெடி | தமிழ் | விஜய் ஆண்டனி[12] |
2011 | ஒரு முறை | முப்பொழுதும் உன் கற்பனைகள் | தமிழ் | ஜி. வி. பிரகாஷ் குமார்[13] |
2012 | யேலேலோ | மெரீனா | தமிழ் | கிரீஷ் |
பின்னணிக் குரல் கொடுப்பவராக
[தொகு]வருடம் | திரைப்படம் | பின்னணி குரல் |
---|---|---|
2006 | வேட்டையாடு விளையாடு | கமாலினி முகர்ஜி |
2010 | ஆடுகளம் | டாப்ஸி[14] |
2012 | நண்பன் | இலியானா[15] |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Andrea Jeremiah : காஷ்மீர் சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா! ஜில் ஜில் போட்டோஸ்."
- ↑ "Andrea | Tamil Actress Andrea Jeremiah | TSMGO Productions | Interview - Interviews". CineGoer.com. 2011-05-26. Archived from the original on 2011-06-01. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
- ↑ 3.0 3.1 "Glam show is not bad: Andrea Jeremiah". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
- ↑ 4.0 4.1 Chowdhary, Y. Sunitha (2011-05-25). "Andrea tests new waters in Tollywood". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article2047642.ece.
- ↑ "For Andrea, the show must go on". Chennai, India: The Hindu. 2006-01-18. http://www.hindu.com/2006/01/18/stories/2006011804240200.htm. பார்த்த நாள்: 2008-11-17.
- ↑ 6.0 6.1 6.2 "My first break - Andrea Jeremiah". The Hindu (Chennai, India). 2009-06-19. http://www.hindu.com/cp/2009/06/19/stories/2009061950311600.htm.
- ↑ "The show just went on...". Chennai, India: The Hindu. 2006-01-23. http://www.hindu.com/mp/2006/01/23/stories/2006012300440100.htm. பார்த்த நாள்: 2008-11-17.
- ↑ 8.0 8.1 "Gautham on Pachai Kili Muthucharam - Bollywood Movie News". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
- ↑ "Welcome to". Sify.com. 2007-01-20. Archived from the original on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
- ↑ "Andrea Strikes Back In Style! - Irandam Ulagam - Selvaraghavan - Dhanush - Andrea - Richa - Tamil Movie News". Behindwoods.com. 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-02. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/musicreview/12779.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
- ↑ http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/andrea-turns-dubbing-artiste-377